
“யெல்லோ” இயக்குனர் : ஹரி மகாதேவன் எடிட்டர் : ஸ்ரீ வாட்சன் ஒளிப்பதிவாளர் : அபி ஆத்விக் இசை : ஆனந்த் காசிநாத்
வெளியீட்டு தேதி : 21 நவம்பர் 2025
” படத்தின் நாயகி பூர்ணிமா ரவி அவருக்கும், சாய் பிரசன்னா என்கிற வாலிபருக்கும் இடையே காதல் ஏற்படுகிறது.
பூர்ணிமா ரவி அப்பா டெல்லி கணேஷ், தாய் மற்றும் தங்கையுடன் வாழ்ந்து வருகிறார். திடீரென்று டெல்லி கணேசுக்கு உடல் நலம் குன்றியதால், குடும்ப பொறுப்பினை அவர் ஏற்கிறார்.
மேலும் பண பிரச்சனையாக வேறு இருக்கிறது. வங்கியில் வேலை செய்தும் ஆதிரையின் பண பிரச்சனை மட்டும் தீரவில்லை
ஆதிரைக்கும் சந்தோஷம் இடையேயான பிரச்சினையால் காதல் முறிந்தது சந்தோஷுக்கு வேறு பெண்ணுடன் திருமணம் நிச்சயக்கப்பட்டு அழைப்பிதழ் வருகிறது மனதளவில் பெரிதும் உடைந்து போகிறாள்,அதன் பிறகு காதல் தோல்வி, பிடிக்காத தனியார் வங்கி வேலை, மன அழுத்தம், ஒவ்வொரு நாளுமே துயரமாக கடந்து செல்கிறது. மனமாற்றத்திற்க்காக தன் சிறுவயதில் பழகிய தோழி சோட்டா மற்றும் தன் குடும்பத்தில் ஒருவராக இருந்த பெண்ணை தேடி பயணத்தை துவங்கினார் ஆதிரை. ஆனால் அந்த பயணத்தில் எதிர்பாராத விஷயங்கள் எல்லாம் நடக்கிறது. காதல் தோல்வியால் கவலையில் இருந்த ஆதிரைக்கு அந்த பயணத்தில் மாற்றம் கிடைக்கிறது. அது எப்படி கிடைக்கிறது என்பதே படத்தின் மீதிகதை….
நடிகர்கள்
படத்தில் நாயகியாக நடித்திருக்கும் பூர்ணிமா ரவி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். காதல் தோல்வி, அழுத்தம் கொடுக்கும் வேலை, குடும்ப பாரம் என நடிப்பில் பளிச்சிடுகிறார்.
நாயகனாக நடித்திருக்கும் வைபவ் முருகேசன் துறுதுறு நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். இவர்கள் ஒன்றாக பயணிக்கும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது. தந்தையாக நடித்திருக்கும் டெல்லி கணேஷ் அனுபவ நடிப்பையும், மற்றும் சிறு வயது தோழியாக வரும் நமிதா கிருஷ்ணமூர்த்தி சாய் பிரசன்னா, லீலா சாம்சன், பிரபு சாலமன், வினோதினி ஆகியோரின் கதாபாத்திரங்கள் படம் முழுக்க வராவிட்டாலும் கவனம் பெறுகிறார்கள்.
அபி ஆத்விக்கு ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். மலை, அருவி என இயற்கை அள்ளி கொடுத்துள்ளார்
,இசை : ஆனந்த் இசையில் பாடல்கள் நன்றாக இருக்கிறது. பின்னணி சரி படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.
எடிட்டர் : ஸ்ரீ வாட்சன் இசை : ஆனந்த் காசிநாத் வெளியீட்டு தேதி : 21 நவம்பர் 2025 நடிகர்கள்
தோல்விகளின் போதும் நம்மை எவ்வாறு எதிர் கொண்டு, அடுத்த கட்ட பயணம் தன்னம்பிக்கை கொடுக்கக்கூடிய வசனங்கள் பாராட்டும் படி இருக்கின்றன. ஹரி மகாதேவனின் இயக்கம் சிறப்பாக இருக்கிறது படம் நம்மை பெரிதும் கவர்கிறது. ஒரு மாற்றத்தை தேடி பயணம் செய்வது குறித்து பல படங்கள் வந்த போதிலும் யெல்லோ அனைவரின் கவனத்தை ஈர்க்கிறது










