Friday, April 17

“மரியா” திரை விமர்சனம்.

ஹரிஉத்ரா வெளியீட்டில்
ஹரி கே சுதன் இயக்கத்தில் சாய்ஸ்ரீ
பாவல்ஸநவகீதன்,
சித்து குமரேசன், விக்னேஷ் ரவி, சுதா புஷ்பா, மற்றும் பலர் நடித்து அக்டோபர் 3 ல் வெளியாகும் படம் மரியா.

கதை கரு

இயற்க்கையான .உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்காத மதம் ஒரு மதமே அல்ல என்ற கருத்தை ஆழமாக வலியுறுத்துகிறாள் இந்த மரியா

படத்தை பார்ப்போம்:

கன்னியாஸ்திரியான நாயகி சாய்ஸ்ரீ பிரபாகரன், விடுமுறைக்காக தனது உறவினர் வீட்டுக்கு வருகிறார். அங்கு சில நாட்கள் தங்கும் அவர்க்கு பசி /தாகம் தூக்கம் போன்ற இயல்பான ஒன்றான காம உணர்வு அவருகுள் வருகிறது அவர் கன்னியாஸ்திரி வாழ்க்கையில் இருந்து வெளியேறி மற்ற பெண்களைப் போல் சகஜமாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறார். தன் விருப்பத்தை அம்மாவிடம் தெரிவிக்க ஆனால், அவரது அம்மா  இதை ஏற்றுக்கொள்ள மறுப்பதோடு அந்த இரவு நேரத்தில் ,மரியாவை வீட்டை விட்டு துரத்தி விடுகிறார் அப்பொழுது தீர்கமான முடிவு எடுக்கிறார்   அந்தக் காம இச்சையை பெரும்பாவம் என போதிக்கும் ஜீசஸை அவர் வெறுக்கும் நிலைக்குச் தள்ளப்படுகிறார்  கிறிஸ்தவ மதத்தை வெறுக்கும் அவர், அதற்கு எதிரான சாத்தானை வழிபடும் அமைப்புடன் இணைந்து விரும்பமான வாழ்க்கை வாழ முடிவு செய்கிறார். அவரது முடிவு அவரது வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது, சாத்தான் வழிபாடு என்றால் என்ன?, அதன் பின்னணி என்ன ? என்பதை தான் ‘மரியா’. மீதி கதை..

சாய்ஸ்ரீ  கதாபாத்திரம் கோபம் ,இயலாமை காமம் எல்லா உணர்வுகளையும் தன் முகத்தில் சிறப்பு நடித்து காட்டியுள்ளார் . பாவல் நவகீதன் நடிப்பும் அருமை. சித்து குமரேசன், விக்னேஷ் ரவி, சுதா புஷ்பா என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர். G மணிஷங்கரின் ஓளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.பாடல்கள் இசையும் பிண்ணனி இசையும் ரசிக்கவைக்கிறது. எடிட்டர் படத்திற்க்கு தேவையான காட்சிகள் மட்டும் இணைத்துள்ளார்

கிறிஸ்தவத்திற்கு எதிராக சாட்னிஷம் என ஒரு மதத்தைச் சொல்லி இக்கதையில் கூடுதலாக ஒரு புதுக்கதையும் சொல்லியுள்ளார்கள்.வசனங்கள் சில இடங்களில் சாட்டையால் ஓங்கி அடித்தார் போல் உள்ளது சமீப காலத்தில் இந்த மாதிரியான கதை  தமிழ்சினிமாவில் யாரும் சொல்லவில்லை

உறவினர் வற்புறுத்தல் ஆசை ஆர்வம் கன்னியாஸ்திரி ஆகும் பெண்கள், அதிலிருந்து வெளியே வர முடியாமல்.  மனசுகுள்   வேதனை சுமந்து கொண்டு வாழவும் முடியாமல் திணறும் சிறு வயது  கன்னியாஸ்திரிகளின் வேதனை உணர்ச்சிகளை வெளி உலகத்திற்க்கு தைரியாக சொன்ன இயக்குநர் ஹரி கே. சுதன் முயற்சிக்கும் பாராட்டுக்கள்.

இப்படம் வயது வந்தவர்கள்  பார்க்க கூடிய படம்