
நிஹாரிகா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து தி ஷோ பீப்பிள் சார்பில் ஆர்யா வழங்க டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் எஸ்.பிரேம் ஆனந்த்.
இதில் சந்தானம் – கிஸ்ஸா 47, கீத்திகா திவாரி – ஆசை ஹர்ஷினி, செல்வராகவன் – ஹிட்ச் காக் இருதயராஜ், கௌதம் வாசுதேவ் மேனன் – ராகவன், கஸ்தூரி – ஷில்பா, யாஷிகா ஆனந்த் – மாயா, நிழல்கள் ரவி, மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, மாறன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
படக்குழுவினர்கள் : ஒளிப்பதிவு: தீபக் குமார் பதி, இசை: ஆஃப்ரோ, எடிட்டர்: பரத் விக்ரமன், கலை: ஏ.ஆர்.மோகன், சண்டைக்காட்சி: சில்வா, ஹரி தினேஷ், நடனம்: கல்யாண், விஎஃப்எக்ஸ் : ஆர். ஹரிஹர சுதன் (லார்வன் ஸ்டுடியோஸ்), ஒலி கலவை: ராஜாகிருஷ்ணன், விளம்பர வடிவமைப்பு: தினேஷ் அசோக், நிர்வாக தயாரிப்பாளர்கள்: கே.மதன்ராஜ், ஆடை வடிவமைப்பாளர்: ஜாஸ்மின் ஜோசப், ஸ்டில்ஸ் : சாய் சந்தோஷ்,மக்கள் தொடர்பு : நிகில் முருகன்.
கதை கரு திரைப்பட விமர்சனம் பாதிக்கப்பட்டவர் வித்தியசமாக பழிவாங்கும் கதை .
படத்தை பற்றி பேசுவோம்
சினிமா யு-டியூப் விமர்சனகளால் பாதிக்கப்பட்ட இயக்குனர் செல்வராகவன் தற்கொலை செய்து தியேட்டரிலேயே ஆவியாக இருக்கிறார். இதனால் சினிமாவைப் பற்றி தவறாக விமர்சனம் செய்பவர்களை தியேட்டருக்கு வரவழைத்து கொலை செய்கிறார். இந்நிலையில் சினிமா யு டியூப் விமர்சகரான சந்தானத்துக்கும் தியேட்டருக்கு குடும்பத்துடன் படம் பார்க்க வரும்படி அழைப்பு வருகிறது. சந்தானம் மட்டும் தியேட்டருக்கு போகிறார் தியேட்டர்ல பார்த்த பழைய தியேட்டராக இருக்கு அங்கு யாரும் இல்ல ஜிலோனு இருக்கு சந்தேகம் அடைந்து வீட்டுக்கு வந்து விடுகிறார் வீட்டுக்கு வந்து பார்க்கும்போது வீடு பூட்டிட்டு இருக்கு அக்கம் பக்கம் விசாரிக்கிறார் எல்லா சினிமா பார்க்க தியேட்டருக்கு அம்மா (கஸ்தூரி), அப்பா (நிழல்கள் ரவி ) /தங்கை |யாஷிகா ஆனந்த்) மற்றும் சந்தானத்தின் காதலி அனைவரும் தியேட்டர் படம் பார்க்கபோயிருக்காங்க உடனே மறுபடியும் தியேட்டருக்கு போறாரு .ஆவியாக இருக்கும் செல்வராகவன் அதற்குள் அவரது குடும்பத்தினர்களை மற்றும் காதலியை திரைப்படக் கதாபாத்திரங்களாக மாற்றி காணாமல் செய்து விடுகிறார்.அடுத்தது சந்தானமும் அந்த படத்துக்குள் கதாபாத்திரங்களாக நுழைந்து விடுகிறார். ஏற்கனவே மொட்டை ராஜேந்திரனும் திரைக்குள் இருக்கிறார் பிறகு திரையில் ஓடுகின்ற படத்திற்குள் இவர்கள் அனைவரும் ட்ராவல் ஆகின்றனர். அவர்களை செல்வராகவன் இயக்குகிறார் . பல டுஸ்ட் கதையில் வைக்கிறார் இறுதியில் அதிலிருந்து எப்படி தன் குடுபத்தை மற்றும் காதலியை காப்பாற்றினார்? அதன்பிறகு என்ன நடந்தது? எதனால் இந்த பிரச்சனை சந்தானம் அதை எப்படி சமாளித்தார்? என்பதே படத்தின் மீதி கதை.
சந்தானத்தின் ஸ்டைலீஷ் ஸ்டெப் ஹேர் கட்டிங், நுனி நாக்கு ஆங்கிலத்துடன் ப்ரோ ,ப்ரோ என்று அடிகடி கூப்பிடுவது திரை விமர்சராக ( You Tubeer – ) கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பது சிறப்பாக இருந்தது
நடுத்தர வயதுடைய குடும்ப தலைவியாக சிம்பிளாக வரும் கஸ்தூரி திரைக்குள் சினிமா நுழைந்தவுடன் தெலுங்கு பேசும் மாடர்ன் கவர்ச்சி செமயாக கலக்கி உள்ளார். மாறன் கஸ்தூரியை சைட் அடிப்பதும் ரசிக்கும்படியாக இருந்தது
ஆட்டோ டிரைவராக அப்பா நிழல்கள் ரவி படத்துக்குள் கப்பலின் கேப்டனாக கதாபாத்திரம் சிறப்பாக கொடுத்துள்ளார்
கௌதம் வாசுதேவ் மேனன் –யாஷிகா ஆனந்த் பழை பாடல் இரண்டு வரிகள் கடற்கரையில் ஒடுவது ரசிக்கும்படியாக இருந்தது.
ரெடின் கிங்ஸ்லி, மற்றும் இப்படத்தில் நடித்தஅனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்
ஒளிப்பதிவு: தீபக் குமார் பதி, இசை: ஆஃப்ரோ, எடிட்டர்: பரத் விக்ரமன் இவர்களின் பங்களிப்பு படத்திறக்கு பலம் .
மற்றும் படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்களும் சிறப்பாக தன் பணியை செய்துள்ளனர்
இயக்குனர் எஸ்.பிரேம் ஆனந்த்..தமிழ் சினிமாவில் யோசிக்க முடியாத சில கதைகள் புரிதலுக்கு அப்பால் பல மாற்று உத்திகளால் கொஞ்சம் மிளிர்கிறது, சந்தானத்தின் DD நெஸ்ட் லெவல் சினிமா பல சீன்கள் கையாளப்பட்ட விதம் சினிமா நேசிப்பவர்களையும் புதுமை விரும்பிகளையும் சிந்திக்கவைக்கிறது, இப்படி ஒருபாதையில் சிரிக்கவைக்க முடியும் என்பதையும் டெக்னாலஜிகளை சரியாக பயன்படுத்த முடியும், மிக துள்ளியமாக இயக்கி இருக்கிறார் இயக்குநர் பிரேம்ஆனந்த். கடினமான கூட்டுமுற்ச்சிக்கு பாராட்டு.
படத்தில் பாடல் .திருப்பதி ஸ்ரீ வெங்கட ஜலபதி கிண்டல் செய்து விமர்சனம். எந்த மதத்தின் ஆன்மீக பாடலை விமர்ச்சிக்காதே.
இப்படம் பொதுமக்களுக்கு கதை புரிதல் கடினம் என்று நான் நினைக்கிறேன். பொறுமை காக்க வேண்டும்.










