Friday, April 17

“ராபர்” திரைப்பட விமர்சனம்.

இம்ப்ரஸ் பிலிம்ஸ் சார்பில் பத்திரிகையாளர் கவிதா எஸ் மற்றும் மெட்ரோ புரொடக்ஷன்ஸ் ஆனந்த கிருஷ்ணன் இணைந்து தயாரித்துள்ள படம் ராபர். இப்படத்திற்கு ‘மெட்ரோ ‘திரைப்படத்தின் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் கதை திரைக்கதை எழுதியுள்ளார். எஸ். எம்.பாண்டி இயக்கி உள்ளார்.​

நடிகர்கள் : சத்யா, தீபா சங்கர், ஜெயபிரகாஷ், சென்றாயன், டேனி போப், பாண்டியன் மற்றும் பலர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் :- ஒளிப்பதிவு : என்.எஸ்.உதயகுமார்,இசை : ஜோகன் சிவனேஷ், படத்தொகுப்பு : ஸ்ரீகாந்த், கலை : விஜய் சரவணன்,நடனம் : ஹரி கிருஷ்ணன்,பாடல்கள் : அருண் பாரதி, லோகன், ஜோகன் சிவனேஷ், மெட்ராஸ் மீரான், சாரதி,இயக்கம் : எஸ். எம். பாண்டி,வெளியீடு: சக்தி ஃபிலிம் ஃபேக்டரி, மக்கள் தொடர்பு : திரைநீதி :செல்வம்

சென்னை சிட்டியில் நடக்கும் செயின்பறிப்பு கொள்ளையன் கதை களம்

சத்யா கதாநாயகன் :நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன் வேலைக்காக சென்னைக்கு வருகிறான் பெரிய கம்பெனியில் வேலை பார்க்கிறான் அவனுக்கு எதிர்பார்த்த சம்பளம் இல்லை ஆசைபடுகிற பெண்ணும் கிடைக்கவில்லை ஆடம்பரமாக சொகுசா வாழ்க்கை அசைப்பட்டு  பார்ட் டைம் ஜாப்பாக( part time Job) . சிட்டியில் வேலைக்கு சென்று தனியாக வரும் ஆண் /பெண் இவர்களிடமிருந்து வழிபறி கொள்ளை (வழிபறி திருடன்) செயின் / பணம் பறிப்பு வேலையில் ஈடுபடுகிறான். அதில் கிடைக்கும் பணத்தைவைத்து ஆசைபட்ட பெண்ணுக்கு பரிசாக விலை உயர்ந்த பிளாட்டினம் மோதிரம் / டைமன்ட் செயின் கொடுத்து பெண்களிடம் உல்லாசமாக இருக்கிறான் போலீஸ்க்கு சவாலான ஆளாக சத்யா சுற்றி திரிகிறான் இப்படியாக தன் வாழ்க்கை ஜாலியாக போய் கொண்டு இருக்கிறது : ஒரு சமயம்  மோட்டார் சைக்கிள் ஸ்கூட்டி வண்டியில் வந்த பெண்ணிடம் வழியறி திருடன் (சத்யா ) செயின் பறித்த போது வழிபறி திருடனுக்க்கு பெண்ணுக்கும்  நடந்த போராட்டத்தில் பெண் இறந்து விடுகிறார்: பெண்ணை பெற்ற அப்பா(ஜெயப்பிரகாஷ்) போலீஸ்  ஸ்டேஷனில் இருந்து கூப்பிட  உங்க  பெண் விபத்தில் இறந்து விட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் இது கொலை தான் என்பதை ஒரு போலீஸ்காரர் (பாண்டியன்) மூலம் அந்த பெண்ணின் அப்பா  தெரிந்து கொள்கிறார். அவருக்கு நீதி கிடைத்ததா ? சத்யா பிடிபட்டானா? என்பது தான் மீதி கதை..

சத்யா கதாநாயகன் சிறப்பாக நடித்துள்ளார்  .அம்மாவாக நடிக்கும் தீபா சங்கர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். தனது மகன் மீது அளவற்ற பாசம் கொண்ட ஒரு தாய்யாகவும் , அதே நேரத்தில் தன் மகன் தவறு செய்யதைறிந்து ஒரு தாய் என்ன செய்வாள் என்பதை இறுதி காட்சியில் அவர் எடுக்கும்  முடிவில் உணர்ச்சிபூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

மகளை இழந்து தவித்து, மகளின் சாவுக்கு காரணமானவனை பழிவாங்க துடிக்கும் தந்தையாக ஜெயபிரகாஷ் வித்தியசமான யதார்த்தமான நடிப்பு தந்து திரைக்கதைக்கு பலம் சேர்த்துள்ளார்.

நல்ல போலீஸ் (பாண்டியன்) படமுழுக்க வந்து சிறப்பான  நடிப்பை கொடுத்துள்ளார். . மேலும், டேனியல் ஆனி போப் .. வித்தியாசமான கதாபாத்திரம் சிறப்பாக நடித்துள்ளார் , சென்ட்ராயன்  சிறையில் இருந்து பிளாஷ் கதை சொல்வதும் செயின் திருட்டு கும்பலுக்கு உதவியாக இருப்பது சிறப்பாக தன் நடிப்பை கொடுத்துள்ளார்

இதில் நடித்த அனைத்து  நடிகர்களும் . சிறப்பாக நடிப்பை கெரித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் என்.எஸ். உதயகுமார் சென்னை நகரத்தையும், சங்கிலி பறிப்பு காட்சிகளையும் கோமிரா – வில்  அருமையாக படம் பிடித்துள்ளார்.

இசையமைப்பாளர் ஜோஹன் சிவனேஷின் பின்னனி இசையும், எடிட்டர் ஸ்ரீகாந்தின் படத்தொகுப்பும் படத்திற்க்கு தேவையான காட்சிகள் மட்டும் இணைத்து   கதையை சொல்லும் திரைக்கதையை, விறுவிறுப்பாக முன்னோக்கி நகர்த்த . செல்கிறது

பல ஆண்டுகளாக, தனியாக நடந்து செல்லும்போது  ஆண் /பெண்களின் சங்கிலிகள் பணம்  பறிக்கப்படுகின்றன.  பறிப்பாளர்களால் பாதிக்கப்படுவது அதிகம்  பெண்கள் தான்  உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இக்கதையை தேர்வு செய்த இயக்குனர் எஸ்.எம். பாண்டி அவர்களுக்கும் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணனின் திரைக்கதையை சரியாக கொடுத்ததையும் பாராட்டு.

மொத்தத்தில், பெண் பத்திரிகையாளர் எஸ்.கவிதா  மற்றும் மெட்ரோ புரொடக்ஷன்ஸ் ஆனந்த கிருஷ்ணன் இணைந்து தயாரித்துள்ள ராபர் – திரைப்பட குழுவுக்கும் பாராட்டு வாழ்த்துக்கள் ..

இப் படம் பெண்கள்  கண்டிப்பாக   பார்க்க வேண்டிய ஒரு  திரில்லர். படம்