Sunday, May 31

“அலங்கு”திரைப்படத்தின் விமர்சனம்.

நடிப்பு: குணாநிதி, காளி வெங்கட், செம்பன் வினோத், சரத் அப்பானி, சவுந்தர்ராஜா, ஸ்ரீரேகா, சண்முகம் முத்துசாமி, ரெஜின் ரோஸ், இதயக்குமார், அஜய், கொற்றவை, தீக்ஷா, மஞ்சுநாதன், ஆவுடை நாயகம், அப்புனி சசி மற்றும் பலர்

இயக்கம்: எஸ்.பி.சக்திவேல்

ஒளிப்பதிவு: பாண்டிக்குமார்

படத்தொகுப்பு: சான் லோகேஷ்

இசை: அஜீஸ்

தயாரிப்பு: டிஜி பிலிம் கம்பெனி, மேக்னஸ் புரொடக்ஷன்ஸ்

தயாரிப்பாளர்கள்: சபரிஷ், சங்கமித்ரா சௌமியா அன்புமணி

வெளியீடு: ‘சக்தி பிலிம் ஃபேக்டரி’ பி.சக்திவேலன்

பத்திரிகை தொடர்பு: இரா.குமரேசன்

பல்லாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் மனிதன் – நாய் பற்றி சொல்லும்  கதை  

இக்கதை கோவை மாவட்டம் ஆனைக்கட்டி பகுதியிலும், கேரள மாநிலம் அகழி பகுதியிலும் நடப்பதாக சொல்லபடுகிறது

கணவனை இழந்த தனது தாய் தங்கம் (ஸ்ரீரேகா) மற்றும் தங்கையுடன் வசித்து வருகிறார் நாயகனும், மலைவாழ் மக்களில் இருந்து முதல் தலைமுறை பட்டதாரி கல்லூரிக்குச் செல்லும் தர்மன் (குணாநிதி) எல்லா உயிர்களும் மீது அன்பும் கருணையும் செலுத்துபவன் தன் நண்பர்களுடன் வேலைக்கு செல்லும் இடத்தில்  ஒரு பணக்காரன், வேலை கொடுக்கிறார் ஒரு சாக்கு பைகோனியில் இரத்த கறையுடன் இருந்தது அதை ஊருக்கு வெளியில் குழி தோண்டி புதைக்கச் சொல்லி அதற்கான கூலி (பணம்) கொடுக்கிறார் கோனி பையில் என்ன இருக்கிறது பார்த்தால் ஒரு நாய் உயிருடன் இருப்பதை அறிகிறான் பணக்காரன் சொன்னதை செய்யாமல் அந்த நாயை தான் வளர்க்கிறான் அந்த காளி என்று பெயர் சூட்டி பாசத்துடன் பார்த்து வருகிறார். தான் படிக்கும் கல்லூரியில் நடக்கும் தவறுகளை சுட்டிகாட்டுகிறான் கல்லூரியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். தாய் மகன் தர்மனை படிப்புக்காக வீட்டை அடமானம் வைத்து கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார். இந்நிலையில் குடும்பச் சூழல் காரணமாக தாய்மாமன் மலையன் (காளி வெங்கட்) உதவியால் தன் நண்பர்களுடன் கேரளாவில் நகராட்சித் தலைவராக இருக்கும் அகஸ்டின் (செம்பன் வினோத்) ரப்பர் தோட்டத்தில் கூலி வேலைக்கு செல்கிறார். கூடவே (நாய்)காளியையும் தன்னுடன் அழைத்து செல்கிறார். அகஸ்டினின் ஒரே அன்பு மகள் ஏஞ்சலை (தீக்ஷா) ஒரு நாய் கடித்து விடுகிறது. ரொம்ப நாளாக குழந்தையின்றி இருந்தனர் பல வருடங்களுக்கு பிறகு பிறந்த ஏஞ்சல் தான் தன் உலகம் என வாழும் அகஸ்டின், மகளுக்கு ஏற்பட்ட இந்த வேதனை தாங்க முடியாமல் ஆத்திரமடைந்து திடீர் ஒரு விபரீத முடிவு எடுக்கிறார். சுற்று வட்டாரத்தில் உள்ள அனைத்து நாய்களையும் கொல்லுமாறு தன்னிடம் வேலை . பார்க்கும் பிலிப்பிடம் (சரத் அப்பானி) கூறுகிறார் இதானல் சுற்றி இருக்கும் ஒட்டுமொத்த கிராமத்தியிருக்கும் அனைத்து நாய்களை  அடியாட்களுக்கு பணத்தை கொடுத்து கொல்லுகிறான். .  நாய்களை தேடி அடித்து கொடூரமாக கொல்லுகிறான்   அவருடைய இரக்கமற்ற செயல்கள் தர்மன் மற்றும் அவரது தோழர்களுக்கு காளி நாய் காணாமல் போகும் போது காளி கடத்தப்பட்ட​தை அறிந்து காளியை காப்பாத்த பிலிப்பிடம் கெஞ்சி கேட்க  நடக்கும் போராட்டத்தில் எதிர்பாராத விதமாக பிலிப்பின் ஒரு கை துண்டிக்கப்படுகிறது. தொடர்ந்து பதட்டங்கள் அதிகரிக்கிறது. தர்மனையும் அவரது நண்பர்களையும் கொல்ல துடிக்கிறது அந்த கும்பல் துரத்துகிறது. அதன் பின் தர்மன் தனது செல்ல நாய் காளி மற்றும் நண்பர்களுடன், பிலிப் மற்றும் செம்பன் வினோத்திடம் இருந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அவர்கள் கிராமத்துக்குச் செல்ல முடிவு செய்கிறார்கள். இருப்பினும், அவர்கள் தப்பிக்கும் போது எதிர்கொள்ளும் பல தடைகளை எதிர்த்து ஜெயிப்பார்கள் என்பதே படத்தின் மீதிக்கதை.

செல்ஃபி’ என்ற திரைப்படத்தில் இணை நாயகனாக அறிமுகமான குணாநிதி இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார்

தாழ்த்தப்பட்ட மலைவாழ் பழங்குடியின மக்களில் வாழ்க்கையுடன் பயணித்து தர்மனாக கல்லூரி படிப்பை விட்டு விட்டு தாய் பெற்ற கடனை திருப்பி கொடுக்க கேரளாவில் கூலி வேலைக்குச் செல்லும் காட்சிகளில் மிகவும் இயல்பாக இருந்தது  .  வில்லனிடமிருந்து நாயை (காளி) காப்பாற்ற போராடும் இடங்களிலும், சண்டை காட்சிகளும்  ஆக்ரோஷமான  தர்மன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். முதல் பட நாயகன் போல் இல்லாமல் பல படங்களில் நாயகனாக நடித்து அனுபவம் பெற்றவர் போல் கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் என்ன தேவையோ அதை சரியாக, அளவாகக் கொடுத்து இருக்கிறார். நாய் மீது பாசம் காட்டுவது, அதற்கொரு தீங்கு என்றால் ஆக்ரோஷம் கொள்வது, தாய் மற்றும் தங்கை மீதான அன்பை வெளிப்படுத்துவது என காட்சிக்குக் காட்சி இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். குணாநிதி  தமிழ்திரையுலகில் நல்ல எதிர்காலம் நம்பிக்கை நட்சத்திரமாக வருவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

கண்களில் தீ  வெறியுடன் மனிதர்களையோ நாய்களையோ வேட்டையாடி கொல்லும் வில்லனின் இரக்கமற்ற உதவியாளராக அப்பானி சரத் நடிப்பு சிறப்பாக இருந்தது.

செம்பன் வினோத் ஒரு பயங்கரமான கேங்ஸ்டராக மிரட்டுகிறார் மிரட்டினாலும் தன் மகளின் மேல் பாசத்தை அதிகமாக கொடுக்கும்  தந்தையாக சிறப்பாக நடிப்பை வெளிபடுத்தியுள்ளார். திரையுலகில் சிறந்த வில்லனாக வரவாய்ப்பு உள்ளது.

காளி வெங்கட் வழக்கம் போல் ஹீரோவின் அன்பான மாமாவாக சிறப்பாக நடித்து அசத்தியுள்ளார்  , அதே நேரத்தில் தாயாக வரும் ஸ்ரீரேகா கண்களாலேயே மிரட்டியுள்ளார்  . திரையுலம் வாய்ப்பு தரும்.

இவர்களுடன் சண்முகம் முத்துசாமி, ரெஜின் ரோஸ், சவுந்தர்ராஜா, கொட்ரவை, தீக்ஷா, மஞ்சுநாதன், ஆவுடை  நாயகம், அப்புனி சசி, தீபம் பிலிபோஸ், அற்புதநாத், கங்காதரணி, சக்தி, குமார், ஜோஃபி, ஆனந்த், கலை, தசரதன், கிரிஷ், நிரோஷா, அர்ச்சனா, தீதன், ரென்ஸி, ம.இலையமாறன், சரவணபுதியவன், மதுரவீரன், தாமரை ஆகியோர் தனக்கு கொடுத்த கதாபாத்திரம் சிறப்பாக நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்

பாண்டிகுமாரின் கேமரா   கேரளா மற்றும் தமிழகத்தின் மலையின் அழகையும் ,  ஆபத்துக்களையும் காட்சிகளையும் அருமையாக படம் பிடித்துள்ளது.

அஜேஷின் பின்னணி இசை படத்தின்  இறுதிவரை தக்க வைக்க உதவுகிறது

சான் லோகேஷின்  தேவையான  வேகமான காட்சி படத்தொகுப்பும், தினேஷ் காசியின் ஆக்‌ஷன் கோரியோகிராஃபியும் முக்கியமான விறுவிறுப்பான காட்சிகளுக்கு  பலத்தை சேர்க்கின்றன.

சமூக பிரச்சனையும் எல்லா உயிர்கள் மீது அன்பு பாசத்தை , தமிழக எல்லையில் இருக்கும் மக்கள் பிரச்சனையை  அழகாக  நேர்த்தியாகவும் சொல்ல முயற்சித்து இருக்கிறார்  எஸ்.பி.சக்திவேலை பாராட்டலாம். தமிழ்திரையுலகில் சிறந்த இடத்தை பிடிப்பார்.

இப்படம் குடும்பத்துடன் பார்க்கும் படம். ஆபாச காட்சிகள் ஆபாச வசனங்கள் இல்லை.