Tuesday, September 8

“டிசி ” திரை விமர்சனம்.

நடிகர்கள் :- லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, தலைவாசல் விஜய், அவினாஷ் ரகுதேவன், கிரிஷ் தயாள், பாலாஜி தேவிபிரசாத், ஜவஹர் சக்தி, பிரணவ் தியோபின் மற்றும் பலர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:-

இயக்கம் – எழுத்து: அருண் மாதேஸ்வரன்

இசை: அனிருத் ரவிச்சந்தர்

ஒளிப்பதிவாளர்: முகேஷ் கௌதம்

படத்தொகுப்பாளர்: பிரசன்னா ஜி.கே

மக்கள் தொடர்பு: ரியாஸ் கே. அஹ்மத், பாரஸ் ரியாஸ்

படத்தை பார்ப்போம்:

ஆரம்ப காட்சி.. காவல்துறையின் ஆயுதங்களைச் கொள்ளையடித்து  தலைவாசல் விஜய் தலைமையிலான  லோகேஷ் கனகராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் மறைந்து வாழ்கிறார்கள் பறிகொடுத்த இடத்தில் போலீஸ் விசாரணை நடக்கிறது அந்த வழியாக வந்த  ஏழை விவசாயி நிலத்தை விற்று தன் மகன் படிப்பு செலவுக்கு வைத்திருந்த ரூ 7 லட்சம்  பணத்தை போலீஸ் பறிமுதல் செய்து   அவனை கொன்று ஊருக்கு வெளியே வீசி விடுகிறார்கள்  ஏழை விவசாயி குடும்பத்தார் போலீஸ் புகார் கொடுக்க நியாயம் கிடைக்க வில்லை பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ்க்கு பயந்து மறைந்துவாழும் லோகேஷ் கனகராஜ் யிடம்  முறையிடுகிறார்கள் பணத்தை பறித்த போலீஸ் அதிகாரியை காவல் நிலையத்திற்குள் புகுந்து அந்த அதிகாரியை கொடூரமாகப் கொள்ளுகிறார்கள்  தப்பிக்க லோக்கேஷ் கனகராஜ் அவருடைய கூட்டாளிகளும் சென்னையில் உள்ள ஒரு விடுதியில் பதுங்குகிறார்கள்.அங்கே மதுபாரில் மதுபியர்கள் மகிழ்விக்கும் பாடகி சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி லோக்கேஷ் கனகராஜ் சந்திக்கிறார். காதல்மலர்கிறது  காதல் குறுகிய நாளே நீடிக்கிறது  திடீர்விடுதிக்குள் போலீஸ் நுழைகிறது துப்பாக்கி சண்டை நடந்தது விடுதியின் பாடகி சஞ்சனா போலீஸால் கொடூரமாக கொள்ளபடுகிறது  இதை நேரில் பார்த்த லோக்கேஷ் கனகராஜ் போலீஸ் மீது கொலைவெறியுடன் அங்கிருந்து தப்பிகிறார் .இதற்கிடையில் பாலியல் தொழிலாளியான வாமிகா அறிமுகம் அவருடன் பல பெண்களுக்கும் விடுதலை கிடைக்கிறது இருந்தாலும்  வாமிகா மட்டும் லோக்கேஷ் கனகராஜ் உடன் வருகிறார் ஒருபக்கம்  போலீஸ் ஆயதம் கொள்ளை , போலீஸ் அதிகாரி கொலை இதற்கு காரணமான தலைவாசல் விஜய் தலைமையிலான லோக்கேஷ் கனகராஜ் அவர்  கூட்டாளிகளை போலீஸ்  வேட்டையடியதா ? இல்லையா ?பாலியல் தொழிலாளயான வாமிகா நிலை என்ன? பலதிருப்பங்களுடன் படத்தின் மீதிகதை..

படத்தின் நாயகனாக அறிமுகமான லோக்கேஷ் கனகராஜ் அவருக்கு  பொருத்தமான நடிப்பு  மற்றும் இவருடன் , சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி சில காட்சி கள் வந்தாலும் அனைவரின் கவனத்தை ஈர்க்கிறார் ,வாமிகா கபி வாடிக்கையாளர்களிடம் வசூல் வேட்டை சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார். தலைவாசல் விஜய், அவினாஷ் ரகுதேவன், கிரிஷ் தயாள், பாலாஜி தேவிபிரசாத், ஜவஹர் சக்தி, பிரணவ் தியோபின் மற்றும் பலர்.சிறப்பான நடிப்பு பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

இசை: அனிருத் ரவிச்சந்தர், ஒளிப்பதிவாளர்: முகேஷ் கௌதம் படதிற்க்கு பெரிய பலம்

இயக்கம் – எழுத்து: அருண் மாதேஸ்வரன் உங்கள் கதைகரு  நியாயம் சொன்னாலும் வெட்டு, குத்து, இரத்தம் ,காட்சிகள் குறைத்து இருக்கலாம்..

இப்படம்  ,சிறியவரகள் தவிர்க்கவும்

வயது வந்தவர்கள் மட்டும் பார்க்கலாம்.

 

ரேட்டிங் 3;0