Sunday, November 22

“சிங்காரம்” திரை விமர்சனம்.

ராக் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ஏ.எஸ். ரமண பாலாஜி, பத்மாவதி காந்தி தயாரித்திருக்கும் சிங்காரம் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் கே.வி. கதிர்வேலு.

நடிகர்கள் யோகி பாபு, வேல ராமமூர்த்தி, எம்.எஸ். பாஸ்கர், மரியா வின்சென்ட், சார்ம்ஸ், ஆர்த்தி கணேஷ், மனோபாலா, கல்கி, மாரிமுத்து, படவா கோபி, சென்ட்ராயன், டி.எஸ்.ஆர்., தீபா சங்கர், சபிதா ராய், ஜாவா சுந்தரேசன், கே.எம். கணேஷ்கர் மற்றும் பலர் நடித்;துள்ளனர்.

தொழில்நுட்பக் கலைஞர்கள்: இசை – சாம் சி.எஸ்,பாடல்கள் – விவேகா, ஒளிப்பதிவு – பிரசன்னா எஸ். குமார்,  எடிட்டர்  லாரன்ஸ் கிஷோர், மக்கள்தொடர்பு– ரியாஸ் கே.அஹ்மத்,பாரஸ ரியாஸ்

கதைகரு

• சமூகப் பிரச்சனை: சாதிய பாகுபாடு, அதிகாரிகளின் புறக்கணிப்பு, அடையாள ஆவணங்கள் இல்லாமை போன்ற நரிக்குறவர் மக்களின் அன்றாட வலிகளை இப்படம் பேசுகிறது.

படத்தை பார்ப்போம்:

யோகிபாபு குறவர் சமூகத்தை சார்ந்தவர். இவருடன் சமுகத்தினரும் ஊர் ஊராக சென்று தாங்கள் தயார் செய்த மணி மாலை மற்ற பொருட்களை கோயில் திரு விழாவிலும் , ஊருக்குள்ளேயும் விற்று ஊருக்கு வெளியே கூடாரத்தில் தங்கியிருந்த குடும்ப நடத்துவது தான் இவர்களின் வாழ்க்கை  ஆனால், இவர்களுக்கு அரசாங்கத்தால் கிடைக்க வேண்டிய எந்த ஒரு நலத்திட்டங்களும் கிடைக்கவே இல்லை, கேட்டால் இவர்கள் ஒரு இடத்தில் இருக்க மாட்டார்கள் என காரணம் காட்டி சலுகைகள் மறுக்கின்றனர்.யோகிபாபுவின் அப்பா எம் எஸ் பாஸ்கர் அடிக்கடி லாட்டரி சீட் வாங்குவது வழக்கம் , திடீரென தற்கொலை செய்து கொள்கிறார் அவர் வாங்கி லாட்டரி சீட்டில் ரூ 1 :५० ஒன்றரை கோடி பரிசு தொகை கிடைக்கிறது அதன் பிறகு இவர்கள் வாழ்க்கை என்ன ஆனது, அரசியல் நுழைகிறார்கள் அரசியலில் வெற்றி பெற்றாரா இல்லையா ? இவர்களை அவமதிப்பு, புறக்கணிப்பு செய்த ஊர் மக்கள் இவர்கள் என்ன செய்தார்கள் பல சுவாரஸ்யமான படத்தின் மீதிக்கதை.

யோகி பாபு கதாநாயகனாக சிங்காரம் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பதைவிட அந்த கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார். வேலா ராமமூர்த்தி_நல்ல சிவன்  ஊர் பெரியமனிதர் ஊர் மக்களுக்கு நல்லது செய்பவர் பொருத்தமான கதாபாத்திரம் அருமை. எதிர்அரசியல்வாதியாக வில்லனாக மாரிமுத்து, படவா கோபி, சென்ட்ராயன் புதிய மாற்றம் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள் யோகி பாபுக்கு அப்பா அம்மாவாக தீபாசங்கர் , எம்.எஸ். பாஸ்கர்  நரிக்குறவர் சமூகத்தினராக வாழ்ந்துயிருக்கிறார்கள் இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையில் பாடல்களும் பின்னணி இசையும் ரசிக்கவைக்கிறது.

நரிக்குறவர் சமூகத்தின் வாழ்வியல், இது வரையாரும் சொல்லாத வரலாற்றுப் பின்னணி, சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் புறக்கணிப்புகள் மற்றும் உரிமைக்கான குரல் என
நகைச்சுவை மற்றும் குடும்ப சென்டிமென்ட்டுடன், நரிக்குறவர் மக்களின் வாழ்வியலையும் அரசியலையும் பேசும் விதமாக எல்லோரும் ரசிக்கும்படி நேர்த்தியான திரைக்கதையமைத்து சுவாராஸ்யமாக கொடுத்துள்ளார் இயக்குநர் கே கதிர்வேலு. பாராட்டுக்கள்.

 

ரேட்டிங் 4:०