Monday, September 21

“சண்டக்காரி” திரைவிமர்சனம்

மாதேஷ் இயக்கத்தில் விமல் ,ஸ்ரேயா பிரபு நடிப்பில் சண்டைகாரி கொஞ்சம் இடைவெளிக்குப் பிறகு ரிலீஸ் ஆகி இருக்கிறது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும்,  ஆர்வமும் ஏற்பட்டுள்ளது. திரைப்படத்தின் விமர்சனம் பார்க்கலாம்

லண்டனில் மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றும் ஸ்ரேயா சரியான சண்டக்காரி! மறுபுறம் பெரிய லட்சியங்களுடன் இருக்கும் விமல், அவரிடம் அசிஸ்டென்ட்டாக வேலைக்கு சேர்கிறார். ஆனால் அந்த வேலையில் சேர்ந்து தாக்குப்பிடிப்பது அத்தனை சுலபமல்ல. ஏற்கனவே 50-க்கும் மேற்பட்டவர்கள் அந்த வேலையைச் சமாளிக்க முடியாமல் ஓட்டம் பிடித்திருக்க, விமல் மட்டும் தாக்குப்பிடித்தாரா? அதையும் தாண்டி ஸ்ரேயாமனதில் இடம் பிடித்தாரா?அவரை சொந்த ஊருக்கு அழைத்து வரும் விமலின் திட்டம் என்ன ஆனது? பலதிருப்பங்களுடன்  படத்தின் மீதிக்கதை.

விமல் – ஸ்ரேயா நடிப்பு பங்களிப்பு எப்படி?

‘களவாணி’, ‘ , ‘தேசிங்கு ராஜா’ போன்ற படங்களில் ரசித்த விமலின் இயல்பான நகைச்சுவை கலந்த நடிப்பை மீண்டும் பார்க்க முடிகிறது ஸ்ரேயா தனது மாயா கதாபாத்திரத்தை ஸ்டைலான தோற்றத்துடனும், தனக்கே உரிய நடிப்பு பாணியுடனும் கையாண்டிருக்கிறார். குறிப்பாக படத்தின் பல இடங்களில் ஸ்ரேயாவின் நடிப்பு கவனத்தை ஈர்க்கிறது. விமலின் தந்தையாக பிரபு, பாட்டியாக கே.ஆர். விஜயா, தாயாக உமா பத்மநாபன் உள்ளிட்டோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு ஏற்ற பங்களிப்பை வழங்கியுள்ளனர். வில்லன் கதாபாத்திரத்தில் தேவ் கில் நடித்துள்ளார். தங்களது கதாபாத்திரங்களுக்கு தேவையான பங்களிப்பை வழங்கியுள்ளனர்

தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பு

ஒளிப்பதிவாளர் ஆர்.பி.குருதேவ் லண்டன் மாநகரத்தையும், தமிழக கிராமத்தையும் அழகாகவும், பாடல் காட்சிகளை கலர்புல்லாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

அம்ரிஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகங்களாகவும், பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்பவும் பயணித்திருக்கிறது.ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த குத்துப்பாடல்களின் நினைவுகளை மீண்டும் கிளறுகின்றன.

எடிட்டர் தினேஷ் பொன்ராஜ், இயக்குநர் கொடுத்த வரிசையின்படி காட்சிகளை தொகுத்து இணைத்து கொடுத்திருக்கிறாரே

எழுதி இயக்கியிருக்கும் ஆர்.மாதேஷ், கோபமான குணம் கொண்ட பெண்ணின் மனதில் உருவாகும் காதலை அழகாக சொல்ல முயற்சித்திருக்கிறார்.

விமலின் இயல்பான நடிப்பும் ஸ்ரேயாவின் கதாபாத்திரமும் படத்திற்கு சில சுவாரஸ்யமான தருணங்களை வழங்கினாலும், திரைக்கதையின் பலவீனம் ஒட்டுமொத்த அனுபவத்தை பாதிக்கிறது. விமல் மற்றும் ஸ்ரேயாவின் ரசிகர்களுக்கு ஒரு முறை பார்க்கக்கூடிய படமாக ‘சண்டக்காரி’ அமைந்துள்ளது.