Monday, September 21

“தி டார்க் ஹெவன் “திரை விமர்சனம்.

நடிகர்கள்:- சித்து (இளம்பாரி), தர்ஷிகா (உமையாள்), ரித்விகா (கனி), பிரதீப் (கான்ஸ்டபிள் அழகு), வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி. சங்கர், விஜய் சத்யா, சாப்ளின் பாலு மற்றும் பலர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:-

இயக்கம்: பாலாஜி

ஒளிப்பதிவு: மணிகண்டன் பி.கே

படத்தொகுப்பு: ராஜா ஆறுமுகம்

இசை: சக்தி பாலாஜி

பாடல்கள்: லாவர்தன்

தயாரிப்பு: கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்.எஸ். ஸ்விஸ் ஃபிலிம் ஃபேக்டரி

பி.ஆர்.ஓ: சக்தி சரவணன்

படத்தை பார்ப்போம்:

மேக்கரை கிராமத்தின் நூலகர் ஒருவர் கலை மற்றும் கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் ஒரு மர்மமான புத்தகத்தைக் கண்டெடுக்கிறார். அந்தப் புத்தகத்தைப் படிக்கத் தொடங்கியதும்..மலைசூழ்ந்த மேக்கரை என்கிற கிராமத்தில் 7 வருடங்களுக்கு ஒருமுறை, அதுவும் ஜூன் மாதத்தில் மட்டும் ஆண்கள் மர்மமான முறையில் இறந்துபோகிறார்கள். பல வருடங்களுக்கு முன் வாழ்ந்த ஒரு இளம் பெண்ணின் சாபம்தான் இந்த மரணங்களுக்கு காரணம் என ஊர் மக்களால் நம்பப்படுகிறது. அதே நேரத்தில், கிராமத்தை சுற்றி ஒரு சைக்கோ கொலையாளி உலா வருவதாகவும் தகவல்கள் மக்களிடையே பரவுகின்றன. தொடர்ந்து பல கொலைகளை அவன் செய்து வர, மக்களிடையே பெரும் அச்சம் ஏற்படுகிறது. இந்த நிலையில், ஜூன் மாத தொடக்கத்தில் மேக்கரை கிராமத்திற்கு தனது குடும்பத்துடன் வருகிறார் இன்ஸ்பெக்டர் சித்து.

ஒவ்வொரு மரணத்திற்கு பின்னால் உள்ள ரகசியத்தை அவர் தேடும்போது, பல சவால்களை எதிர்கொள்கிறார். இதில் அவர் மனைவியும் கொலைசெய்யப்பட, இதன்பின் அவர் எப்படி இந்த வழக்கை முடித்தார்? யார் அந்த கொலையாளி? இதற்கெல்லாம் பின்னால் உள்ள மர்மம் என்ன? பல திருபங்களுடன் தி டார்க் ஹெவன்  படத்தின் மீதி கதை.

நடிகர்கள் பங்களிப்பு:

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகும் சித்து, காவல் அதிகாரி கதாபாத்திரத்திற்கு இயல்பான நடிப்பால் நியாயம் செய்திருக்கிறார். தர்ஷிகா, ரித்விகா ஆகியோர் தங்களுக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரங்களில் அளவான நடிப்பை வழங்கியுள்ளனர். நிழல்கள் ரவி, வேலா ராமமூர்த்தி, அருள் டி. சங்கர் ஆகியோரின் கதாபாத்திரங்கள் அனைத்தும் சிறப்பாக இருந்தது

தொழில்நுட்பகலைஞர் பங்களிப்பு:

மணிகண்டன் பி.கே.வின் ஒளிப்பதிவு படத்தின் மலைப்பகுதி காட்சிகளுக்கு மர்மமான மற்றும் மிரட்டலான தோற்றத்தை வழங்குகிறது. இருள் சூழ்ந்த மலைப்பாதைகள், ஒவ்வொரு காட்சியிலும் பதற்றத்தை உணர முடிகிறது.

ராஜா ஆறுமுகத்தின் எடிட்டிங் படத்தின் பல காட்சிகளை விறுவிறுப்பாக நகர்கிறது

இசை: சக்தி பாலாஜி  படத்திற்கு பெரிய பலம் பின்னணி இசை முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக மர்மம் வெளிப்படும் தருணங்களில் இசை பதற்றத்தை அதிகரிக்கிறது.

இயக்கம்: பாலாஜி _குற்றப் பின்னணியிலான திரில்லர் படத்துக்குத் தேவையான பல அம்சங்கள் இருந்தாலும், மர்மப் புத்தகம், நூலகர், காட்டுத் தெய்வத்தின் சாபம், தொடர் கொலைகள், சில இடங்களில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

கிளைமாக்ஸ் – யார் கொலையாளி?

படத்தின் மிகப்பெரிய பலம், இறுதிவரை கொலையாளி யார் என்பதை எளிதில் கணிக்க முடியாத வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பதுதான். சில குறைகள் இருந்தாலும், மர்மம், பதற்றம், தொடர் கொலைகள், கணிக்க முடியாத திருப்பங்கள் என ஒரு கிரைம் த்ரில்லருக்கான சுவாரசிய அம்சங்களை கொண்டிருக்கிறது ‘தி டார்க் ஹெவன்’.

மொத்தத்தில் – மர்மம் , திரில்லர் விரும்பும் ரசிகர்களுக்கு ‘விருந்து