
நடிகர்கள் :-
ஃபர்ஸானா பலத்திங்கல் – அம்மா
ஆதிஷேஷன் கே.ஆர் – இளம் பாலன்
சினான் – வயது வந்த பாலன்
ஜீன் பால் லால் – பவித்ரன் கே.எஸ்.
கிரிஷ் யு.னு. – எஸ்.ஐ. பிரான்சிஸ் அலெக்ஸ்
தொழில்நுட்ப கலைஞர்கள்:-
இயக்கம்: சிதம்பரம்
எழுத்து: ஜித்து மாதவன்
தயாரிப்பாளர்கள்: வெங்கட் கே. நாராயணா (கே.வி.என்.புரொடக்ஷன்ஸ்), ஷைலஜா தேசாய் ஃபென் (தெஸ்பியன் ஃபிலிம்ஸ்)
ஒளிப்பதிவு: ஷைஜூ காலித்
இசை: சுஷின் ஷியாம்
படத்தொகுப்பு: விவேக் ஹர்ஷன்
மக்கள் தொடர்பு: வெங்கடேஷ்
படத்தை பார்ப்போம்:
படத்தின் நாயகி பர்சானா (Farzana), தனது 6 வயது மகனுடன் சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வருகிறார் போலீஸ் மற்றும் ஆபத்துகளில் இருந்து தப்பித்து ஒவ்வொரு ஊராக வேலை தேடி அலைகிறார். தனக்கென ஒரு நிலையான அடையாளத்தை மறைத்து,தேனீர் கடை, ரப்பர் எஸ்டேட், கட்டமானத் தொழில் என அம்மா ஒவ்வொரு இடத்திலிருந்து மாறி, மாறி மகனை அழைத்துக்கொண்டே செல்கிறார். வேலை தேடி அலைகிறார். ஒரு கட்டத்தில் ஒரு வயதான பாட்டியின் வீட்டில் வேலைக்குச் சேரும் அவர்கள், பாட்டியின் மகன் வெளியூரில் இருக்க இவருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. தன் மகனையும் பள்ளிக்கு அனுப்பி சில காலம் சந்தோஷமாக வாழ, அவரை தேடி ஒரு ஆபத்து மீண்டும் வர, அதே நேரத்தில் பாட்டியும் இறக்கிறார்.மற்றும் அதைத் தொடர்ந்து தாயை விட்டுப் பிரியும் சிறுவன் சந்திக்கும் சவால்கள் என படம் நகர்கிறது. இறுதியில் அந்தச் சிறுவன் தனது தாயைக் கண்டுபிடித்தானா? காவல்துறையிடம் இருந்து தப்பினானா? என்பதே பல திருப்பங்களுடன் படத்தின் மீதிக்கதை.
நாயகி பர்சானா ஒரு போராட்டத்தை சந்தித்து எப்படி தப்பிக்கிறார்? என்று சுவாரசியமாக சொல்லப்பட்டிருக்கிறது. தன்னுடைய உண்மையான முகம் வெளிப்பட்டு விடக்கூடாது என்ற பயம், மற்றொருபுறம் தன் மகனுக்கோ, தனக்கோ பிரச்சனை வந்தால் எதிர்கொள்ளும் போது வரும் கோபம் என நாயகி பர்சானா படத்தில் மிகச் சிறப்பான நடிப்பை தந்திருக்கிறார். ஒரு மாறுபட்ட நடிப்பை தந்துள்ளார்.
படத்தில் சிறுவனாக வரும் ஆதிசேஷன் ‘சபாஷ் தம்பி’ என்று சொல்லும் அளவிற்கு பிரமாதமாக நடித்துள்ளார். அதிக வசனங்கள் இல்லை. ஆனால் முகத்தில் சிறு உணர்ச்சியை மட்டுமே வைத்துக் கொண்டு நடிப்பில் ஸ்கோர் செய்கிறார்.
படத்தில் வரும் சின்ன சின்ன கேரக்டர்கள் கூட மிகவும் நேர்த்தியாகவும், சரியாகவும் நடித்துள்ளார்கள். பாட்டியாக நடிக்கும் பெண்மணி உட்கார்ந்த இடத்திலிருந்து மிரட்டுவதும், அன்பிற்கு ஏங்குவதும் என நடிப்பில் அமர்க்கள படுத்தியிருக்கிறார். பவித்ரன் என்ற பெயரில் வரும் போலீஸ்காரர் அதிகமாக கத்தாமல், யாரையும் அடிக்காமல், சிறு உணர்ச்சிகள் மூலம் சைக்கோ தனம் கலந்த போலீஸ்காரராக நடித்திருக்கிறார்
ஒளிப்பதிவாளர் ஷைஜூ காலித் தனது கேமரா கோணங்கள் மற்றும் உள்ளே வெளியே படப்பிடிப்பு நேர்த்தியான ஒளி பதிவு செய்துள்ளார்
படத்தொகுப்பாளர் விவேக் ஹர்ஷன் முதல் பாதியை தொய்வு இல்லாமல் கொண்டு செல்ல முயன்றுள்ளார். எனினும், இரண்டாம் பாதியில் சில நீளமான காட்சிகளைக் நறுக்கி இருக்கலாம்.
இசையமைப்பாளர் சுஷின் ஷியாமின் பின்னணி இசை படத்திற்கு ஆகப்பெரிய பலம்.
.கிளைமாக்ஸ் காட்சி யாரும் யூகிக்க முடியாத ஒன்று. ஒரு கதையைச் சொல்வதில் உள்ள தனது திறமையை சிதம்பரம் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கிறார்.
‘பாலன்: தி பாய்’ அனைவரும் ரசிக்கும் படியாக கொடுத்துள்ளார்.
ரேட்டிங் 3:५










