Thursday, June 11

‘சம்ஹாரம்’ திரை விமர்சனம்.

பிரஜின் பத்மநாபன், ஷர்மிஷா, நியா வர்கீஸ், கணேஷ் சாவரட்டில், ராஜ்குமார், தென்றல் ராஜா, ராம் பிரபா உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளியாகியிருக்கும் திரைப்படம், சம்ஹாரம். Vidhya Productions சார்பில், வேல் முருகன் தயாரித்துள்ளார். எழுதி இயக்கியிருக்கிறார், ராம் பிரபா. இசை: V G ஹரி கிருஷ்ணன். ஒளிப்பதிவு : சுரேஷ்குமார் சுந்தரம்.
முழுக்க முழுக்க ஒரே இரவில், ஒரே வீட்டில் நடக்கும் ஒரு விறுவிறுப்பான சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படமாகும். 
படத்தை பார்ப்போம்:

தன் தங்கை ஷருமிஷாவின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, முறைப்பையனான கணேஷ் சாவரட்டிலுக்கு அவளைக் கட்டாயத் திருமணம் செய்து வைக்க அண்ணன் பிரஜின் முடிசெய்கிறார். விடிந்தால் திருமணம் என்ற அந்த இரவில், காதலனுடன் தப்பிக்க ஷருமிஷா திட்டமிடுகிறார் இதை தெரிந்து கொண்ட பிரஜின்,தங்கை ஷருமிஷாவின் அதே வீட்டுக்குள் ஒரு அறைக்குள் அடைத்து வைக்கிறார் அதே இரவு நேரத்தில் கார் பழுதாகி அடைக்கலம் கேட்டு வரும் தந்தை-மகள் இருவரும் பிரஜின் வீட்டில் தங்குகிறார்கள் திடீர் முறைப்பையனான கணேஷ் சாவரட்டிலுயை கொலை செய்ய அப்பா மகளும் திட்டமிடுகிறார் இவர் கூட்டனியில் ஷருமிஷா மற்றும் ஒரு மர்ம நபர் என அடுத்தடுத்து இணைகிறார் இவர்கள் எதனால் முறைப்பையனான கணேஷ் சாவரட்டிலுயை கொலை செய்ய துடிக்க  காரணம் என்ன ? பிரஜின்_ தங்கையின் திருமணம் நடந்ததா? இல்லையா?எதிர்பாராத பல திருப்பங்களும், திகில் சம்பவங்களுமே ‘சம்ஹாரம்’ படத்தின் . மீதிகதை ..
நடிகர்கள்:

பிரஜின், கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். பார்வையிலேயே தனது முரட்டுத்தனமான கதாபாத்திரத்தை வெளிப்படுத்தி நடித்திருக்கிறார். நாயகி ஷர்மிஷா நடிப்பதற்கு காட்சிகள் அதிகம். அதை சிறப்பாகவே பயன்படுத்தியிருக்கிறார். நியா வர்கீஸ், கணேஷ் சாவரட்டில், ராஜ்குமார், தென்றல் ராஜா, ராம் பிரபா உள்ளிட்டோரும் அந்தந்த கதாபாத்திரங்களில் நன்றாகவே நடித்திருக்கின்றனர். ‘

ஒளிப்பதிவாளர் சுரேஷ்குமார் சுந்தரம் இரவு நேரக்காட்சிகளை குறை சொல்ல முடியாத அளவிற்கு படம்பிடித்துள்ளார். V G ஹரி கிருஷ்ணன் இசையமைப்பு கொஞ்சம் சத்தமாக இருந்தாலும், சில காட்சிகளை மேம்படுத்தி திகில் ஏற்படுத்துகிறது.

எழுதி இயக்கியிருக்கும் ராம் பிரபா, ஒரே வீட்டில் நடந்த இந்த கதை விறுவிறுப்பாக  அடுத்தது என்ன என்ற எதிர்பார்பை கூட்டியுள்ளது ஒரு சின்ன பட்ஜெட்டுக்குள் என்ன செய்ய முடியுமோ, அதை சிறப்பாக செய்திருக்கிறார்.  ஒரு சூப்பரான த்ரில்லர் படமாக சம்ஹாரம் இருந்திருக்கும்.

மற்றும் ஷருமிஷா ஆகியோர் தங்கள் கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளை சிறப்பாகவெளிப்படுத்தியுள்ளனர்.
ராஜ்குமார், தென்றல் ராஜா, இவர்களின் பங்களிப்பு சிறப்பாக இருந்தது
சுரேஷ்குமார் சுந்தரத்தின்
 ஒளிப்பதிவு ஒரே இடத்தை பல கோணங்களில் காட்டி திகில் உணர்வைத் தருகிறது.

பாடல்கள் இல்லாத நிலையில், வி.ஜி. ஹரி கிருஷ்ணன் அமைத்துள்ள பின்னணி இசை சில இடங்களில் சற்று சத்தமாகவும், காதை பிளப்பதாகவும் உள்ளது.

.சம்ஹாரம்’ திரைப்படம் ஒரே வீடு .ஒரே இரவு தொடர்ந்து வரும் மர்மங்கள் எதிர்பாரத திருப்பங்கள்

ஒரு சுவாரஸ்யமான த்ரில்லர் ரசிக்கும்படியாக இருந்தது
நீங்கள் இந்தத் திரைப்படத்தைப் பார்க்கலாம்