Monday, June 1

“மெட்ராஸ் மாஃபியா கம்பெனி” திரைவிமர்சனம்.

படம்: மெட்ராஸ் மாஃபியா கம்பெனி

நடிப்பு: ஆனந்தராஜ், சம்யுக்தா, தீபா, சசி லயா, முனிஷ் காந்த், ராம்ஸ், ஆதித்யா

தயாரிப்பு: வி சுகந்தி அண்ணாதுரை

இசை: ஸ்ரீகாந்த் தேவா

ஒளிப்பதிவு: அசோக் ராஜ் இயக்கம்: ஏ எஸ் முகுந்தன் ,பிஆர்ஓ: சதீஷ் S2 மீடியா.

படத்தை பார்ப்போம்:

ராயபுரம் பிரபல தாதா ஆனந்தராஜ் ஒவ்வொரு ஏரியாவுக்கும் ஏஜெண்டுகளை வைத்து கொண்டு தனக்கு வரும் குற்ற செயல்களை செய்து வருகிறார் இப்படி பல குற்றச்செயல்களை செய்துவரும் ஆனந்தராஜ் மீது எந்த குற்ற வழக்கும் பதிவாகவில்லை இவர் சென்னை தாதா சாம்ராஜ்யம் வளர்ந்து வருகிறது.

தாதா ஆனந்தராஜ்  சாம்ராஜ்ஜியத்தை முடிவுகட்ட போலீஸ் உதவி கமிஷனர் சம்யுக்தா வருகிறார்  ஆனந்த்ராஜ் எதிரான ஆதாரங்களை திரட்ட களத்தில் இறங்குகிறார் இதற்கிடையே தொழில் போட்டியால் ஆனந்தராஜால் பாதிக்கப்பட்ட ரவுடிகள் கொலை செய்ய திட்டமிடுகிறார்கள் இதை தெரிந்து கொண்ட ஆனந்த ராஜ் மற்றும் இரண்டு அடியாட்களுடன்  தன்னுடைய வேன் van -ல் ஆந்திரவில்  இருக்கும் இவருடைய ரவுடி நண்பர் கெஸ்ட்வுஸில் தங்குவதற்கு மாறுவேடத்தில் வேனில் தப்பித்து செல்ல பின்தொடர்ந்து போலீஸ் வேகமாக செல்கிறது ஆனந்த ராஜ் சென்ற வேன் விபத்துக்குள்ளாகி தீ பற்றி எரிகிறது அதிலிருந்து ஆனந்த் ராஜ் உடனிருந்தனர் அடியாட்கள் இறந்து விட்டனர் போலீஸ் உறுதி செய்தது இந்த விஷியம் செய்திதாள் மற்றும் TV செய்தியிலும்  வெளியாகிறது . இறந்த ஆனந்தராஜ் உடலை அவரின் குடும்பத்தாரிடம் போலீஸ் ஒப்படைக்கிறது  அவருடைய  இரண்டு மனைவிகள் மற்றும் உறவினர்  இறுதி சடங்கு வேலைகள் நடந்து கொண்டிருக்கும் வேலையில்   ஆனந்தராஜ் மீண்டும் அங்கு மாறுேவேடத்தில் வருகிறார்  பிணத்தின் இறுதி பயணத்தில் குத்துடான்ஸ் ஆடுகிறார் போலீஸ் கமிஷனர் சம்யுக்தா  சுடுகாட்டில் நேருக்கு நேர் சந்திக்கிறார் ஆனந்தராஜ்யை  கைது செய்து சிறையில் அடைத்தாரா? மீண்டும் தாதா சாம்ராஜியத்தை தொடர்ந்தாரா இறந்தது யார் ? தப்பித்தது எப்படி?தாதா மாஃபியா தொழிலை தொடர்ந்தாரா ? இல்லையா ? படத்தின் மீதி கதை…

நடிகர்கள்

நகைச்சுவை நடிகராக சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் ஆனந்தராஜ், இந்த படத்தில் மீண்டும் வில்லனாக தன் நடிப்பு மூலம் மிரட்டவும் செய்திருக்கிறார், நக்கலான பேச்சின் மூலம் சிரிக்க வைக்கவும் செய்திருக்கிறார். ரசிக்கும்படியாக இருந்தது
காவல்துறை அதிகாரியாக சக்யுக்தா ஆக்‌ஷன் காட்சிகளிலும் நடிப்பிலும் அசத்தியிருக்கிறார்,
ஆனந்தராஜின் மனைவியாக நடித்திருக்கும் தீபா, மற்றும் இன்னெரு மனைவியாக கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்.ஆனந்தராஜின் மகளாக நடித்திருக்கும் ஆராத்யாவின் நடிப்பும் அருமை. மற்றும் இப்படத்தில் நடித்த ஷகிலா முனீஸ்காந்த்
ராம்ஸ், சசிலயா  நடித்திருக்கும்ஸ அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்

தொழில்நுட்ப கலைஞர்கள் :.
அசோக் ராஜனின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம் ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்க வைக்கிறது. எடிட்டர் படத்திற்க்கு தேவையான காட்சிகள் சேர்த்துள்ளார்

இயக்கம்: ஏ எஸ் முகுந்தன்  பிரபல ரவுடியின் வாழ்க்கை வித்தியசராக  ரசிக்கும்படியாக   வைக்கிறது அடுத்த காட்சி எதிர்பார்ப்புடன் இருந்தது இப்படம் அனைவரும் பார்க்கலாம் .