Sunday, April 19

“Bomb” திரை விமர்சனம்.

அர்ஜுன் தாஸ் தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான படங்களில் நடித்து வருகிறார், அந்த வரிசையில் விஷால் வெங்கட் இயக்கத்தில் வெளிவந்துள்ள பாம் படம் கெம்ரியோ பிக்ச்சர் சார்பில் சுதா சுகுமார், சுகுமார் பாலகிருஷ்ணன் இணைந்து இப்படத்தை தயாரித்து உள்ளார்கள்.

கதைகரு

இரண்டு சாமிகளால் (2 பாறைகளால்) பிரிந்திருக்கும் கற்பனையான கிராமங்கள் தான் காளப்பட்டி, கம்மாய்பட்டி. சாமிகளை வைத்து ஊர் சண்டை போடும் கதை

படத்தை பார்ப்போம்:

காயகம்மாபட்டி என்ற ஊரில் மக்கள் அனைவரும் சந்தோஷமாக வாழ்கின்றனர். அந்த ஊரில் எல்லோரும் ஒன்றுகூடி சாமி சாமிதரிசனம்  மலைமேல் வரும் ஜோதியை பார்த்தால் ஊர் மற்றும் மக்கள் நன்றாக இருப்பார்கள்  என்று ஒரு நம்பிக்கை.

அந்த நேரத்தில் மலையில் இருந்து ஒரு கல் கீழே விழுந்து இரண்டு துண்டுகளாக உடைந்து விட்டது  பெரிய கல் ஒரு சாமி, சிறிய கல் இன்னெரு சாமி எனவும் ஊர் இரண்டாக பிளவு பட்டது பெரிய கல் இருக்குமிடம்  உயர்ந்த சாதி , சிறிய கல் இருக்குமிடம் கீழ்சாதி என்ற பிரிவினை உருவாகிறது.

இரு சாதியினருக்கும் அடிக்கடி மோதல். மாவட்ட ஆட்சியர் /காவல் துறை அதிகாரி அரசு அதிகாரிகள் சமரசம் செய்ய முயற்சி செய்தும் பயன் இல்லை. இவர்களின் மோதலை பயன்படுத்தி ஆதாயம் தேட முயற்சி செய்கிறார் அரசியல் கட்சி தலைவர் நாசர். இந்த கிராமத்தில் உள்ள முக்கிய நபராக இருக்கும் காளி வெங்கட் இந்த மக்களின் மனதை மாற்ற ஒற்றுமையாக இருக்க முயற்சி செய்கிறார். அதே நேரத்தில் இரவு மது குடிப்பது வழக்கம் இந்த போதை ஆசாமியை இவர் நண்பர் அர்ஜுன் தாஸ் முதுகில் சுமந்து  வந்து  காளி வெங்கட் வீட்டில் சேர்ப்பது  வழக்கமாக வைத்துள்ளார்  காளி வெங்கட் க்கு ஒரு தங்கை மட்டும் . அர்ஜுன் தாஸை விரும்புகிறார் .எதிர்பாராத விதமாக காளி வெங்கட் இறந்து விடுகிறார். இருந்தும் இவரது உடலில் சில நேரங்களில் மாற்றங்கள் தெரிய வருகிறது இதனால்  அர்ஜுன் தாஸ் காளி வெங்கட் இறக்க வில்லை”  என்கிறார் மருத்துவ பரிசோதனை நடக்கிறது காளி வெங்கட் இறந்துவிட்டார் உறுதி செய்யபடுகிறது  அவரை யாராலும் தூக்க முடியவில்லை, அர்ஜுன் தாஸ் மட்டுமே தூக்க முடிகிறது,

அர்ஜுன் தாஸ் காளி வெங்கட் இறக்க வில்லை” உயிருடன் தான் இருக்கிறார்  காளி வெங்கட் க்கு உயிர் இருப்பதாக ஊர் மக்கள்  நம்பவில்லை ஒரு கட்டத்தில் ஊர் மக்கள் நம்புகிறது பந்தல் போட்டு  அவரை சாமியாக  கும்பிட ஆரம்பிக்கிறார்கள்  ஆதயம் தேடும் அரசியல் தலைவர்கள்  காளி வெங்கட்டை  எப்படியாவது தீர்த்து கட்ட முடிவு செய்து பந்தலுக்கு தீயிட்டு எரிக்க முயற்ச்சி செய்கிறார்கள் மறுநாள் காளி வெங்கட் உடல் இல்லை .தீயிட்டு எரித்தார்களா ? காளி வெங்கட் இறந்தது உண்மையா? காளி வெங்கட் உடலில் ஏற்பட்ட மாற்றஙகள் என்ன  ?தங்கையின் காதல் என்ன ஆனது ? ஊர் மக்கள் ஒற்று கூடினர்களா படத்தின் மீதி கதை…

காளி வெங்கட் கதாபாத்திரம்  ஒவ்வொரு படத்திலும் புதிய பரிமாணங்கள் நடிப்பால் அடுத்தக்கட்டம் செல்கிறார்  இப்படத்தில் அவர் தான் பேசபடுகிறது இடைவேளைக்கு பின் பிணமாக நடித்திருக்கிறார் எந்த அசையும் இல்லாமல் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார் .

அர்ஜுன் தாஸ் கிராமத்து பையனாக அர்ஜுன் தாஸிற்கு ஒரு வித்தியசமான  கதாபாத்திரம்.  கதாநாயகன் என்றாலே அடி ,வெட்டு, குத்து இதில் எதுவும் இல்லை   அர்ஜுன் தாஸிற்கு பெரிய நடிப்பு இல்லை இது இவருக்கான படமும் இல்லை  . இதேபோன்ற  கதாபாத்திரங்களை செய்யலாம், செய்ய முடியும் அப்பாவி போல் ஒரு கோழையாக நடித்து அசத்தியுள்ளார்.

மற்றும் இவர்களுடன் நடித்த ஹீரோயின் காளி வெங்கட்டிக் தங்கையாக சிவாத்மிகா ராஜசேகர், நாசர் அரசியல் கலககாரன்  வில்லனாகவும் சிறப்பு, படத்தில் பால சரவணனின் நகைச்சுவையும் நன்றாகவே பொருந்தியிருந்தது. ,இவர் கிராமத்து  You Tuber எந்த நேரமும் ஒரு  செல்போன் வைத்த  எதையாது  ஊரில்  படம் எடுத்துகிட்டுயிருப்பார்

நடிகர்கள் சிங்கம்புலி  கிராமக்களின் ஊர் பெரிய மனுஷன, எந்த பஞ்சாய்த்து என்றாலும் ஒரு நாற்காலியுடன் பத்து பேர் வருவார்கள்

,அபிராமி மாவட்ட கலெக்டர் ராக  சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளர் மற்றும் ஊர் மக்களாக வருபவர்கள் அனைவருமே சிறப்பாக நடிப்பை கொடுத்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்! ஒளிப்பதிவு அப்படியே அந்த ஊரில் நாம் பயணப்பட்ட அனுபவம், இசை இமானுக்கு சிறப்பாக கொடுத்துள்ளார் எடிட்டர் படத்திற்க்கு தேவையான காட்சிகள் மட்டும் இணைத்து கொடுத்துள்ளார்

ஊரில் மக்கள் ஒன்றாக இருந்தாலும் சாமி என்ற பெயரில் ஊர் எப்படி பிரிகிறது, இதனால் சிறுவர்கள் மனதில் எந்தளவுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது  அனைத்தையும் அப்பட்டமாக தோல் உரித்து காட்டியுள்ள இயக்குனர் விஷால் வெங்கட்டிற்கு பாராட்டுக்கள்.

மொத்தத்தில் காமெடி கலாட்ட இந்த பாம் வெடித்தது மக்களின் மூட நம்பிக்கை உடைத்து எரிந்தன   .