Thursday, September 10

“பைண்டர்”திரைவிமர்சனம்.

ஆரபி புரடக்ஷன்ஸ் மற்றும் வியன் வென்ச்சர்ஸ் சார்பில் ரஜீஃப் சுப்பிரமணியம் மற்றும் வினோத் ராஜேந்திரன் தயாரித்து இயக்கியிருக்கும் படம் பைண்டர்

இதில் வினோத் ராஜேந்திரன், சார்லி, நிழல்கள் ரவி, சென்ட்ராயன், தரணி ரெட்டி, பிரானா, நாசர் அலி, கோபிநாத் சங்கர், நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் :ஒளிப்பதிவு – பிரசாந்த் வெள்ளிங்கிரி ,எடிட்டர் – தமிழ்குமரன் , கலை இயக்கம் – அஜய் சம்பந்தம் , இசை – சூர்ய பிரசாத் ,மக்கள் தொடர்பு – ராஜா

கல்லூரியில் படிப்பை முடிக்கும் இளைஞர்கள் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்று ஒரு  கேள்வி  பிரபலமான வழக்கறிஞராக நிழல்கள் ரவி, இளைஞர்களிடம் கேட்கிறார் அதற்கு அவர்கள் நாங்கள் சிறையில் தவறு செய்யாத குற்றவாளிகளை காப்பாற்றப் போகிறோம் என்கிறார்கள்

மாணவ நண்பர்களுடன்   வினோத் ராஜேந்திரன் தாரணியும் புதிதாக டிடெக்டிவ் ஆபீஸ் அலுவலகம் தொடங்கி …அப்படிப்பட்ட நிரபராதிகள் யாராவது இருக்கிறார்களா என்று விளம்பரம் கொடுக்கிறார்கள் வருபவர்கள் எல்லாம் பொய் சொல்வதாக அவரிகளின் முகத்தில் தெரிகிறது ஒரு கட்டத்தில் சலித்து போகிறது அவர்களுக்கு அப்போதுதான் பேப்பரில் இவர்கள் கொடுத்த விளம்பரத்தை பார்த்து சார்லியின் மகள் இவரை தேடி வருகிறார் தன் குடும்பத்தில் நடந்த சம்பத்தை கூறுகிறாள்   …

நாமும் பார்ப்போம்..

சார்லி, பீட்டராக அவர் மனைவி எஸ்தராக, அந்த குப்பத்தில் சிட்பண்டு பணம் சேர்த்து ஒரு சேட் யிடம் 12 லட்சம் கொடுத்து ஏமாந்து போகிறது சார்லி குடும்பம் ஊர் மக்கள் அனைவரும்  சார்லி குடும்பத்தையும் பணத்திற்காக தொந்தரவு செய்கிறார்கள் சார்லியின் அன்றாடம் போட்டில் கடலுக்குச் சென்று மீன் பிடிக்கும் தொழில் செய்பவர் வரும் வருமானத்தில்  தன் குடும்பத்தை நடத்தி கொண்டு இருக்கிறார்  சிட்பண்டு பிரச்சனையால் போட்டையும்  விற்று சீட் கட்டிய ஊர்மக்களிடம் பணம் கொடுகிறார் கடன் அடைந்த பாடு யில்லை அந்தே நேரத்தில் சென்ராயன் சார்லியிடம் உன் பிரச்சனை தீர்க்க ஒரே வழிதான் இருக்கு செல்லி ஒரு தவறான யோசனை கூற… .கவுன்சிலர் கொலை செய்யப்பட்ட வழக்கில் நாம் இருவரும் உள்ளே போனால் 10 லட்சம் கிடைக்கும் உன் கடனை அடைத்து விடலாம் குடும்பத்தின் வறுமைச் சூழலால் பணத்துக்கு ஆசைப்பட்டு, செய்யாத கொலைக் குற்றத்தை ஏற்றுக்கொண்டு சிறைக்குச் செல்கிறார் பீட்டர் அதன் பிறகு 9 வருடங்களாக அவரால் வெளியே வர முடியவில்லை சிறையில் சென்றாயன் இறந்து விடுகிறான் அவருக்கு 10 லட்சம் தருகிறேன் என்று சொன்னவர் ஏமாற்றி விட, சார்லியின் மனைவி தற்கொலை செய்து கொள்கிறார்.இப்போது சார்லி சிறையில் அவரது மகள் அனாதையாக நிர்க்கிறாள் அதன்பின் என்ன நடந்தது?

டிடெக்டிவ் ஆபீஸ் வைத்திருக்கும் வினோத் ராஜேந்திரன் தாரனியும் சார்லியை காப்பாற்றினார்களா? உண்மையான கொலைகாரனை கண்டுபிடித்தார்களா? என்ன நடந்தது இதுதான் இந்த படத்தின் கதை…

ஹீரோவா சைலண்ட் டிடெக்டிவ் வினோத் ராஜேந்திரன். தனக்கான சரியான  கதாபாத்திரம் தேர்வு செய்து கொண்டார்

சார்லி நடிப்பு சூப்பர்! அப்பாவி மனிதராக குப்பத்தில் கடன் தொல்லையால் மாட்டிகிட்டு , அவஸ்தை படும் காட்சி கல்நெஞ்சையும் கவனிக்க வைக்கிறது நடிப்பில் சபாஷ் மார்க் வாங்குகிறார்

ஹீரோயினா தாரணி. மிக அமைதியான நடிப்பு , நாயகனுக்கு தோழியாக காதலியாக பின் பாதியில் கலக்கி விட்டார் படம் முழுக்க ஸ்கோர் செய்கிறார்.

வில்லன் நடிப்பு சூப்பர்  நாசர்அன்வர்ராஜா கேரக்டர்களாகவே மாறித்தெரிகிறார்கள்

.சார்லியின் மகளாக பிரணா, அவரின் காட்சி வரும் போது படம் சூடு பிட த்தது நடிப்பு அருமை

சூர்ய பிரசாத்தின் பின்னணி இசையும் பிரசாந்த் வெள்ளிங்கிரியின் ஒளிப்பதிவும் கதையோடு இணைந்து பயணிக்கிறது.

அறிமுக இயக்குநர் என்ற பயமே இல்லாமல் அனுபவம் பெற்ற இயக்குனர் போல்  திரைக்கதை சொன்ன விதம் பிரமாதம் விறுவிறுப்பான காட்சிகள் நகர்தல் அடுத்த காட்சிகள் யாரும் யூகிக்க முடியாத சஸ்பென்ஸ் காட்சிகள்  பாராட்டுக்கள் திரையுலகில் நல்ல எதிர்காலம் உள்ளது.

இப்படம் இதுவரை தமிழ் திரையுலகில்  சொல்ல மறந்த கதை  ..அனைவரை பார்க்க கூடிய படம் ..

இளைஞர்கள் அவசியம் பார்க்கனும்

இந்த வருடத்தில் தமிழ் சினிமா தரமான பட வரிசையில் வரும்.