Sunday, July 26

“நேற்று இந்த நேரம்” திரைப்பட விமர்சனம்.

சாய் ரோஷன் கே ஆர் இயக்கத்தில்
ஷாரிக் ஷாசன், ஹரிதா, மோனிகா ரமேஷ், காவ்யா அமீரா, திவாகர் குமார், நிதின் ஆதித்யா, ஆனந்த்… இந்த ஏழு பேரும் ஹீரோ, ஹீரோயின்களாக நடித்து மற்றும் ஆனந்த், செல்வா, பாலா என நடித்து வெளியாகியிருக்கும் படம் நேற்று இந்த நேரம்.
நண்பர்கள் நான்கு இளைஞர்கள், மூன்று இளம்பெண்கள் என ஏழு பேர் ஒன்றாய் சேர்ந்து ஊட்டிக்கு சுற்றுலா போகிறார்கள்  சுற்றுலா சென்ற இடத்தின் ரெசார்ட்டில் அனைவரும் தங்குகின்றனர். சுற்றுலா வந்திருக்கும் நண்பர்களில் நிகில் காணாமல் போகிறார்.அவரைக் காணோம் என்று காவல்துறையில் புகார் கொடுத்த நண்பரும் காணாமல் போகிறார்.காணாமல்போன இருவரும் பிணமாக கிடைக்கிறார்கள்.  நிகில் ரோகித்தை யார் கொலை செய்தார்கள்? எதற்காக கொலை செய்தார்கள்?  இது குறித்த காவல்துறை உண்மையான குற்றவாளி கண்டு பிடித்தார்களா? படத்தின் மீதி கதை..
ஹீரோக்களில் ஒருவராக வருகிற ‘பிக் பாஸ்’ ஷாரிக் ஹாசன்
பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய அழுத்தமான கதாபாத்திரம்.  திறமையை இன்னும் வளர்த்துக் கொண்டால் திரையுலகில் நல்ல எதிர்காலம் உள்ளது .
 ஷாரிக்கின் காதலியாக வரும் ஹரிதாவுக்கு கிட்டத்தட்ட படத்தின் ஹீரோயின் போன்ற கதாபாத்திரம் மனதில் நிற்கிறார் . மற்றும் இப்படத்தில் நடித்த திவாகர் குமார், நிதின் ஆதித்யா, மோனிகா ரமேஷ், காவ்யா அமீரா உள்ளிட்ட அனைவரும் சிறப்பாகவே தன் பங்களிப்பை கொடுத்திருக்கின்றனர் .
காவல்துறை அதிகாரியாக வருபவர் அவரது விசாரணையும் உண்மையைக் கண்டுபிடிக்கும் விதமும் அவரது நடிப்புக்கு பயிற்ச்சி தேவை !
காட்சிக்கு காட்சி எதிர்பாரத  திருப்பங்களுடன் திரைக்கதையமைத்து எல்லோரும் ரசிக்கும்படி நன்றாகவே எழுதி இருக்கிறார்!

விஷால் எம்’மின் கேமராவும் சிறப்பாக இருந்தது.  படத்தொகுப்பும் சிறபானவை

கெவின் என்’னின் இசையில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசையும் அப்படியே !

இருந்தாலும் ஒரு முறை பார்க்கலாம்!

நேற்று இந்த நேரம்..!

ரேட்டிங் : 2.8