Sunday, November 22

“ப்ளாக்”திரை விமர்சனம்.

திஹான்,மிக்கி மக்கி ஜா,கிரி துவாரகேஷ் ,ஆனந்த் ,அபிநவ் கோசாமி ,அமீர் மாலிக் ,பபுஷா ,சினி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கிறார் எஸ்பி பொன்சங்கர். ராஜா ரவி வர்மா, பாலசுப்பிரமணியம் இணைந்து இசை அமைத்துள்ளனர்.வரதராஜன் படத்தொகுப்பு செய்துள்ளார்.ஐ & ஐ மூவிஸ் சார்பில் வைர பிரகாஷ் தயாரித்துள்ளார்.

ஐந்தாவது படிக்கும் திஹான் விளையாட்டில் ஆர்வம் உள்ள சிறுவனாக இருக்கிறான். அவனுக்குச் சிறு வயதிலேயே படிப்பை விட விளையாட்டில்,ஆர்வம் ஈடுபாடு உண்டு. சிறு வயதிலேயே அவனது பெற்றோரை விபத்தில் இழக்கிறான்

பெங்களூரில் உள்ள தனது தாத்தா அரவணைப்பில் வளர்கிறார். தேசியக் கொடி தயாரிக்கும் இடத்தில் பணியாற்றும் தாத்தாவுக்கு டெல்லி செங்கோட்டையில் ஜனாதிபதி ஏற்றும் தேசியக் கொடியை நேரில் பார்க்க வேண்டும், என்பது கனவு.இதற்கிடையே, தாத்தா திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டு படுத்தப்படுக்கையாகி விடுகிறார் தாத்தாவின் கனவையும் லட்சியத்தையும் நிறைவேற்ற இந்தியாகேட் நோக்கி சிறுவன் பயணமாகிறான் சிறுவன் தீஹான்

இடையிலேயே பல்வேறு சோதனைகளையும் சிக்கல்களையும் சந்திக்கிறான்.இந்நிலையில் அவன் தனது தாத்தாவின் கனவை நிறைவேற்றினானா இல்லையா என்பதுதான் பல திருப்பங்களுடன் ’ஃபிளாக்’ படத்தின் மீதிக் கதை.

கதையின் நாயகனாக மோகனவேல் பாத்திரத்தில் நடித்துள்ள திஹான் சிறுவனாக இருந்த போதும்  தன்னை நல்ல நடிப்பில் வெளிப்படுத்தியுள்ளான்.

தாத்தா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மிக்கி மக்கி ஜா அச்சு அசலான தாத்தாவாக, படம் பார்ப்பவர்களின் மனதில் ஒட்டிக் கொள்கிறார்.மேலும் படத்தில் நடித்துள்ள, கிரி துவாரகேஷ், ஆனந்த், அபிநவ் கோசாமி, அமீர் மாலிக், பபுஷா, சினி என அனைத்து நடிகர் களும் தங்களின் கதாபாத்திரம் உணர்ந்து நடித்துள்ளனர் . எஸ்.பி.பொன்சங்கரின் கேமரா பணி சிறப்பு. ராஜா ரவிவர்மா, பாலசுப்பிரமணியம் ஆகியோரின் பின்னணி இசை அழுத்தமாக இருக்கிறது. பெரியவர்களும்   சிறுவர்களுக்கான பார்க்க வேண்டிய படம்.

 

ரேட்டிங் 3:0