Sunday, August 9

“போட்டோகிராபர்” திரை விமர்சனம்

நடிகர்கள் :-
அஷ்ரஃப் – வீரா
ஜனனி சாமிநாதன் – தர்ஷினி
கருணாகரன் – கபிலன்
உரியடி சிவா – மதி
ஆடுகளம் நரேன் – செங்குட்டுவன்
தேவி மகேஷ் – ஆதினி
தொழில்நுட்ப கலைஞர்கள்:-
எழுத்து  இயக்கம் : அஷ்ரஃப்
ஒளிப்பதிவு : ரயீஸ் அஹ்மத்
இசை : ராஜ்குமார் சந்திரசேகரன்
படத்தொகுப்பு : ஆர் சி பிரணவ்
சண்டைப் பயிற்சி : தினேஷ் சுப்பராயன்
மக்கள் தொடர்பு: ஸ்ரீ வெங்கடேஷ்.

கதை கரு

புகைபட கலைஞர் Golden Tree தேடி அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் பயணம் அங்கு நடக்கும் சம்பவம்..

படத்தை பார்ப்போம்:

ஆடுகளம் நரேன் பெரிய தொழிலதிபர் அவருடைய ஒரேமகன் கதாநாயகன் அஷ்ரஃப் புகைப்பட கலைஞர்  இயற்கை அழகை படம்பிடிப்பதற்காக கேமராவுடன் அடர்ந்த மதிகெட்டான் சோலை காட்டுபகுதிக்குள் தடை செய்யப்பட்ட பகுதியில் பயணிக்கிறார் உடன் காட்டை பற்றி நன்கு தெரிந்த உள்ளூர் வாலிபர் உறிஅடி சிவா Golden Tree (மரம்) தேடி செல்கிறார் ஒரு கட்டத்தில் உள்ளூர் வாலிபர் தன் காதலியின் பிரச்சினை காரணமாக  ஊருக்கு திரும்பி வந்து விடுகிறார். நாயகன் தனிமையில் காட்டுக்குள் பயணம் தொடர்கிறது இரவு வருகிறது திரும்பி வர முயற்சிக்கிறார் வழி தடம் தெரியவில்லை பசி, பட்டினியால் காட்டுக்குள் சிக்கி தவிக்கிறார் அதே காட்டு பகுதியில் நாயகனை கொலை செய்ய இருவர் வெறியுடன்  துரத்துகிறார்கள் நாட்கள் நகர்கிறது இன்னொரு  பக்கம் காதலி மற்றும் தொழிலதிபர் நரேன் மகனை தேடுகிறார்கள் நாயகன் கோல்டன் ட்ரீ Golden Tree பார்த்தாரா..? காட்டுக்குள் கொலை வெறியன் நாயகனை தேட காரணம் என்ன? அடர்ந்த காட்டு பகுதியில் நடந்த பல திடுக்கிடும் சம்பவம் படத்தின் மீதி கதை.

ஸ்மார்ட் பட கதாநாயகன்  அஷ்ரஃப் புகை பட கலைஞராக  காட்டுக்குள் சிக்கி தவிக்கும் ஆபத்தான சூழல் பதற்றம், பசியால். காளான் தின்றது, நாக்கு வறண்ட தண்ணீர்க்காக தேடி அலைவது பல பரிணாமங்களை சிறப்பாக நடித்துள்ளார்.

ஜனனி சாமிநாதன் சில காட்சிகள்  வந்தாலும்  இயல்பான நடிப்பினாலும்  குடும்ப பாங்கான தோற்றத்தில் கவர்கிறார்.

நாயகனின் நண்பனாக கருணாகரன் , உள்ளூர் வாலிபனாக உரியடி சிவா,

நாயகனின் அப்பாவாக  சில  காட்சிகள் வந்தாலும் ஆடுகளம் நரேன் அனுபவமிக்க முதிர்ச்சியான நடிப்ப கொண்டுவந்துள்ளார்.மற்றும் இப்படத்தில் நடித்த அனைவரும் தனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளனர்.

எழுத்து  ,இயக்கம், ஹீரோ : அஷ்ரஃப் இது வரை யாரும் சொல்லாத கதை  திரைக்கதை கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்களாம் படத்தில் சஸ்பென்ஸ் திரில்லர் காட்சி நகர்வு அடுத்தது என்ன? எனற எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது புது முயற்சி வாழ்த்துக்கள் பாராட்டு

மொத்தத்தில் இப்படம் பார்க்கலாம்!

ரேட்டிங். 3;५/