
மெகா சூர்யா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஏ. எம். ரத்தினம் வழங்க, பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் ஹரி ஹர வீர மல்லு.
நடிகர்கள்: பவன் கல்யாண், அகர்வால், பாபி டியோல், சத்யராஜ், நாசர், நர்கிஸ் ஃபக்ரி, நோரா ஃபடேஹி, ஈஸ்வரி ராவ், விக்ரமஜீத் விர்க், சச்சின் கடேகர், ரகு பாபு, சுனில், கபிர் பெடி, சுப்பராஜு, கபிர் துஹான் சிங், தணிகலபரணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள் :
இயக்கம் : கிரிஷ் ஜாகர்லமுடி, ஜோதி கிருஷ்ணா
ஒளிப்பதிவு – மனோஜ் பரமஹம்சா
இசை – எம் .எம். கீரவாணி
கலை இயக்குனர் – தோட்டா தரணி
நடனம் – பிருந்தா, கணேஷ் ஆச்சார்யா
மக்கள் தொடர்பு : ரேகா
கதைகரு
முகலாயப் பேரரசை எதிர்த்துப் போராடிய முதல் இந்தியரான வீர மல்லு, இராணுவத் தளபதிகளின் கொடுங்கோல் அதிகாரத்தை எதிர்த்து ஒரு புரட்சியை ஏற்படுத்தி…
படத்தை பார்ப்போம்
1700 முகலாய போரரசு காலத்தில் இந்த கதை நடைபெறுகிறது. ஒளரங்கசீப் (பாபி தியோல்) அதிகாரத்தை ஏற்றுக் கொண்டு, இந்து மதத்தை ஒழிக்கவும்,வேத பண்டிதருடன் கொன்று தனது சொந்த மதத்தை பரப்பவும் இந்துக்கள் வாழும் பகுதிகளை கைப்பற்றி .தன்னுடைய ஆட்சி அதிகாரத்தில் வைத்துக் கொள்கிறார் தன்னை எதிர்ப்பவரை அவர் இரக்கமின்றி கொலை செய்கிறார். இன்னொரு, நம் இந்தியாவில் இருக்கும் விலைமதிப்பற்ற ரத்தினங்களைத் திருடுவதில் திறமையான திருடன் வீர மல்லு (பவன் கல்யாண்) பணக்காரர்களிடமிருந்து வைரங்களை திருடி ஏழைகளுக்குக் கொடுக்கிறான் இவனுக்கு செல்லும்யிடம் எல்லாம் மக்கள் செல்வாக்கு பெருகிறது நாயகி பஞ்சமியை (நிதி அகர்வால்) பார்த்ததும் அவள் மீது காதல் கொள்கிறார் இந்தக் காதலின் துரோகத்தல் கோல்கொண்டா மன்னனிடம் மாட்டிக்கொள்கிறார். மன்னர் புலி மிருகத்துடன் பல மிரட்டல்களை கொடுக்கிறார் எதிர்க்க வந்த புலி இவரைப் பார்த்ததும் சரண்டர் ஆகி அமைதியாக சென்றுவிடும் இதைப் பார்த்த கோல்கட்டா மன்னருக்கு அதிர்ச்சியும் ஆச்சரியமும் எதற்கும் அஞ்சாமல் வீரனாக வீரா நிற்கிறார் . இதைப் பார்த்ததும் மன்னர் வீராவிடம் பெரும் திட்டத்தை கூறுகிறார் இருவரும் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளுகிறார்கள் டெல்லியில் இருக்கும் விலைமதிப்பற்ற கோஹீனூர் வைரத்தை கொல்லையடித்து வந்து என்னிடம் கொடுக்த்தால் உனக்கு பல நாட்டை கொடுக்கிறேன் நீ கேட்ட வாக்குறுதியை நான் நிறைவேற்றுவேன் இது ஒப்புக்கொண்டு கோஹீனூர் வைரத்தை திருட புறப்படுகிறார் வீரா.. கோஹீனூர் வைரத்தை எடுத்து வந்து கொடுத்தாரா ? பஞ்சமி (நிதி அகர்வால்) நாயகி இவருக்கு துரோகம் செய்ய காரணம் என்ன ? வீரமல்லு .. வேத பண்டிதரின் குருகுலக்கல்வி பயின்றவர் கொள்ளைக்காரனாக மாற காரணம் என்ன? பஞ்சமி (நிதி அகர்வால்) யார், அவருடன் வீர மல்லுவின் உறவு என்ன? வீர மல்லுவின் பின்னணிக் கதையில் வரும் வேத பண்டிதர் (சத்யராஜ்) இவர் யார் ? படத்தின் மீதிகதை திரையில் பார்க்க …
கதாநாயகனாக பவண் கல்யாண் சண்டைகாட்சிகள் தூள் கிளப்புகிறார் புரட்சி எழுச்சி வீரனாகும் சிறப்பாக செய்துள்ளார் இவருக்கு பொருத்தமான கதாபாத்திரம் வீரமல்லு .
கதாநாயகியாக நிதி அகர்வால் அழகை அள்ளி கொடுத்துள்ளார் டான்ஸ் செம சூப்பரா நடன அசைவுகள் பார்க்கிற இளம் வாலிபர் மனசை கொள்ளை கொள்ளும் நாயகியாக வலம் வந்துள்ளார் திரையுலகில் இவருக்கு நல்ல வரவேற்ப்பு உள்ளது
வேதபண்டிதராக வரும் சத்யராஜ் சரியான நடிப்பு பொருத்தமாக இருந்தது சுனில், அனுசுயா என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.மற்றும் இப்படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பாக இருந்தது.
தொழில்நுட்ப கலைஞர்கள்
கீரவாணி இசையில் பாடல்களூம் பிண்ணனி இசையும் படத்திற்கு பெரிய பலம் .ஒளிப்பதிவு – மனோஜ் பரமஹம்சா வின் இரவு /பகல் ஒளிகாட்சி மற்றும் சண்டை காட்சிகள் சிறப்பான ஒளிபதிவு செய்துள்ளார் பாராட்டு வாழ்த்துக்கள்.
எடிட்டர் : படத்திற்க்கு தேவையான காட்சி நேர்த்தியாக செய்துள்ளார்.
இன்றைய இந்திய சினிமா வித்தியாசமான ஆயுதங்களுடன் வித்தியாசமான கொலைகள் , கொள்ளை , கஞ்சா கடத்தல் ,ஆள்கடத்தல் விஞ்ஞான திருடர்கள் இவர்கள் பற்றி தான் கதை இயக்குனர் /ஹீரோ விரும்பம் … படம் எடுக்கிறார்கள்.. இவர்கள் மத்தியில் தேசபக்தி தேச வீரனின் வரலாற்றை செல்லும் விதமாக.இயக்கம் : கிரிஷ் ஜாகர்லமுடி, ஜோதி கிருஷ்ணா .. நம் மக்கள் மறந்து போன வீர வரலாற்று கதையை விறுவிறுப்பாக அடுத்தது என்ன காட்சி என்ற எதிர்பார்ப்புடன் எடுத்து சிறப்பாகவும் வீரத்துடனும் சொல்லி இருக்கிறார் அவருக்கு நமது பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் இப்படம் அனைவரும் பார்க்க வேண்டிய படம்.
.










