Friday, April 17

“சுமோ” திரைப்பட விமர்சனம்

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரித்திருக்கும் சுமோ​ படத்தின் கதை எழுதி இயக்கியிருக்கிறார் எஸ்.பி.ஹோசிமின்.

இதில் சிவா, பிரியா ஆனந்த், யோஷினோரி தாஷிரோ,‘யோகி’ பாபு, சதிஷ்,‘விடிவி’ கணேஷ், ‘நிழல்கள்’ ரவி, சுரேஷ் சக்ரவர்த்தி, சேத்தன்,ஸ்ரீநாத், பெசன்ட் ரவி ஆகியோர் நடித்துள்ளனர்.

படக்குழுவினர்கள்:-ஒளிப்பதிவு : ராஜீவ் மேனன், இசை : நிவாஸ் கே.பிரசன்னா, வசனம் மற்றும் திரைக்கதை : சிவா, படத்தொகுப்பு : பிரவீன் கே எல், கலை இயக்கம் : கார்த்திக், நடன இயக்கம் : கல்யாண், சண்டைப் பயிற்சி : பிரதீப், பாடல்கள் : ஏ.மோகன் ராஜன், ஆடை வடிவமைப்பு : பான்சி மற்றும் காவ்யா, ஒப்பனை : சசிகுமார், கிரியேட்டிவ் தயாரிப்பாளர் : கே.ஆர்.பிரபு, நிர்வாக தயாரிப்பாளர் : கே.அஷ்வின் குமார், மக்கள் தொடர்பு : ரியாஸ் கே.அஹ்மத், பாரஸ் ரியாஸ்.

சென்னை கடற்கரை ஏரியாவில் விடிவி கணேஷ் நடத்தும் ஓட்டலில் மிர்ச்சி சிவா வேலை செய்கிறார் இவர் சிறந்த அலைசறுக்கு வீரர் ஆவார் ஒரு நாள் கடற்கரையில் ராட்சத அலையால் அடித்துவரப்பட்ட பருமன் (குண்டான) உடல் கொண்ட வெளிநாட்டு காரர் மயங்கிய நிலையில் கரையில் கிடந்தார் அவரை மிர்ச்சிசிவா தான் வேலை செய்யும் உணவகத்திற்கு அழைத்து வருகிறார் தன் பாதுகாப்பில் வைத்து கொள்கிறார் அவருக்கு தான் யார் என்று பழைய ஞாபகங்கள் எதுவும் நினைவில் இல்லை அவருக்கு கணேஷ் என்ற பெயர் வைத்து அழைக்கப்படுகிறது இருந்தாலும் கணேஷ் _யை குணமாக்க பல்வேறு முயற்சி செய்கிறார் எந்த நேரமும் எதாவது சாப்பிட்டு கொண்டே இருக்கிறார் மிர்ச்சி சிவாக்கு வேலையும் போயிடுச்சு கணேஷ் க்கு செலவு செய்ய முடியாமல் ஏக்கம்  பக்கத்து ஏரியாவில் சாப்பிடும் போட்டியில் கணேஷ் கலந்து கொண்டு முதல் பரிசு ஒரு லட்சம் பெறுகிறார். மிர்ச்சிசிவா_ கணேஷ் இருவரும் வணிக வளாகம் செல்கிறார் அங்கு ஜப்பான் நாட்டின் கொடியை பார்க்கிறார் எதோ சொல்ல நினைக்கிறார கணேஷ் ஜப்பான் நாட்டை சேர்ந்தவர் தெரியவருகிறது இவர் யார்? ஜப்பான் நாட்டுக்கு -போனார்களா ? அங்கு என்ன நடந்தது    என்பது தான் படத்தின் மீதிகதை

மிர்சி சிவா.நாம் வழக்கமா  காமெடி கதை படத்தில் பார்த்திருப்போம் இப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரம் நடித்திருக்கிறார் அவருடைய முயற்சிக்கு பாராட்டு

பிரியா ஆனந்த் தேவையான நடிப்பு அளவாக இருந்தது சிறப்பு.

யோகி’ பாபு,சதிஷ்,‘விடிவி’ கணேஷ் காமெடி  நடிப்பில் நம்மை சிரிக்க வைக்க முயற்ச்சிக்கிறார்கள்.

உடல் பருமன் குண்டா வெளிநாட்டவர் (யோஷினோரி தாஷிரோ ).சுமோ கதாபாத்திரம்  மல்யுத்த வீரராக சிறப்பாக நடித்துள்ளார்.

மற்றும் படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளார்

தொழில்நுட்ப கலைஞர்கள் :

ஒழிப்பதிவு  :  ராஜீவ் மேனன்  படப்பதிவு ஒளி வீச்சி சிறப்பாக இருந்தது.

இசை : நிவாஸ் படத்திற்க்கு பக்க பலமாக சிற்பாக இருந்தது

எடிட்டர் :சிவா,படத்திற்கு தேவையான கட்சிகளை மட்டும் இணைத்து இருக்கிறார் அவர் பணி சிறப்பாக இருந்தது

இப்படத்தில் பணியாற்ற அத்தனை தொழில்நுட்பம் கலைஞர்களும் சிறப்பாக பணி செய்துள்ளனர்

இயக்குனர் தேர்வு செய்த .கதை தமிழ்நாடு – வெளிநாடடு ஜப்பான் சார்ந்த கதையும் இணைத்துள்ளது.

நாம் வழக்கமா கபடி / கில்லி / கிரிக்கெட் கால்பந்து இவைதான் அதிகம் நம் வாழ்வில் . பயன்பாட்டில் உள்ளது.இக்கதை வெளிநாட்டு சார்ந்த மல்யுத்தன்( சுமோ )வீரன்  கதை புதிய முயற்சியாக சுமோ விளையாட்டை  நகைச்சுவை கலந்த   கொடுக்க முயற்ச்சி செய்துள்ளார். அவ்வளவு  நம்மை ஈர்க்க   வாய்ப்பு இல்லை உங்கள் முயற்சிக்கு பாராட்டு