Monday, July 27

“டென் ஹவர்ஸ்”(Ten hours) திரைவிமர்சனம்

டென் ஹவர்ஸ் (Ten hours).

டூவின் ஸ்டூடியோஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் லதா பாலு மற்றும் துர்கைனி வினோத் தயாரித்திருக்கும் டென் ஹவர்ஸ் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் இளையராஜா கலியபெருமாள்.

இதில் காஸ்ட்ரோவாக சிபி சத்யராஜ், எஸ்ஐ மணியாக கஜராஜ், ஜீவா ரவி டாக்டராக,ஜீவாவாக ராஜ் அய்யப்பா, மாரியாக முருகதாஸ், மெய்யப்பனாக திலீபன், உதயா, தங்கதுரை, சரவண சுப்பையா, ஷருமிஷா, நிரஞ்சனா ஆகியோர் குறிப்பிட்ட கதபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

படக்குழுவினர்கள்:-ஒளிப்பதிவாளர் -ஜெய் கார்த்திக்,இசையமைப்பாளர்-கே.எஸ்.சுந்தரமூர்த்தி, எடிட்டர் – லாரன்ஸ் கிஷோர், கலை இயக்குனர் – அருண் சங்கர் துரை, ஸ்டண்ட் – சக்தி சரவணன், ஒலி வடிவமைப்பு – சச்சின் (ஒத்திசைவு சினிமாஸ்), ஒலிக்கலவை – அரவிந்த் மேனன், உற்பத்திக் கட்டுப்பாட்டாளர் – பாரதி ராஜா, ஸ்டில்ஸ் – ராஜ், பப்ளிசிட்டி டிசைனர் – தினேஷ் அசோக்,மக்கள் தொடர்பு – நிகில் முருகன்

கதை கரு பத்து மணி நேரத்தில் நடக்கும் கொலைகளை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரியின் கதை.  கதைக்களம் சேலம்

கள்ளக்குறிச்சி பகுதியில் இன்ஸ்பெக்டராக வேலை பார்க்கிறார் சிபி சத்யராஜ் அவர் வேலையை பார்க்க காவல் நிலையத்தில் ஒரு புகார் வருகிறது  எங்க பெண்ணை நேற்றிலிருந்து காணவில்லை என்று அம்மாவும், தாத்தாவும் புகார் தருகிறார்கள். பெண்ணை தேடி போகிறார் சிபிசத்யராஜ். இவர் தேடி போகும் சமயத்தில் ‘ஐம்பொன் டிராவல்ஸ்’ தனியார் பேருந்தில்  ஒரு இளம் பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்வதாக கண்ட்ரோல் ரூமுக்கு  ஒருவர் தகவல் கொடுக்கிறார் .கள்ளக்குறிச்சி டோல் கேட்டிற்கு முன்னால் பஸ்ஸை மடக்கி பிடிக்கிறார் .பஸ்ஸில் ஒரு இளைஞர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார் அவர்தான் கண்ட்ரோல் ரூமுக்கு போன் செய்தவர் இந்தக் கொலையை யார் செய்தது பஸ்  பயணிகளிடம் கேட்டால் நான் இல்ல நீ இல்லை என்று சொல்லுகிறார்கள் பயணிகளை அனைவரும் காவல் நிலையத்துக்கு அழைத்து வருகிறார் ஒவ்வொருத்தராக அழைத்து போலீஸ் விசாரணை  செய்கிறார்  காணாமல் போனதாக புகார் தந்த பெண்ணிற்கும் இந்தக் கொலைக்கும் என்ன தொடர்பு? தொடர்ந்து சில பிரச்சனைகளை சந்திக்கிறார் சிபிராஜ் இதற்கெல்லாம் காரணம் யார்? படத்தில் மீதி கதை ..

நடிகர்கள் சிபிராஜ் இதுவரை பல போலீஸ் வேடங்களில் நடித்தாலும் இந்தப் படம் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் .. ஒரு கேஸை கண்டுபிடிக்க எடுக்க முயற்சி விசாரிக்கும்  சிபி ராஜின் நடிப்பு பாராட்டக்கூடிய வகையில் உள்ளது.

இப்படத்தில் நடித்த அனைவரும் சிபிராஜோடு வரும் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட  கஜராஜ் காட்சிகள் படத்துக்கு கூடுதல் சிறப்பாக இருந்தது. டாக்டராக வரும் ஜீவாரவி, ஆம்னி பஸ் கிளீனராக வரும் முருகதாஸ் மற்றும் திலீபன், ராஜ் அய்யப்பா, ஆகியோரின் நடிப்பும் நன்றாக இருந்தது.

கே.எஸ். பின்னணி இசை படத்திற்க்கு பலம் சேர்த்துள்ளது

ஜெய்கார்த்திக் ஒளிப்பதிவு இரவு காட்சிகள் ஒளிவீச்சு சரியாக  பாராட்டும்படி உள்ளது.

எடிட்டர் – லாரன்ஸ் கிஷோர், .படத்திற்கு தேவையான காட்சிகளை மட்டும் சேர்த்து இணைத்துள்ளார்.

இதில் பணியாற்றிய அத்தனை தொழில்நுட்ப கலைஞர்கள்  சிறப்பாக தன் பணியை செய்துள்ளார்.

இப்படத்தில் கதாநாயகன் சிபிராஜுக்கு காதல் டூயட் கிடையாது /கதாநாயகியும்  கிடையாது/பாடல் கிடையாது ,காமெடிகள் கிடையாது ,இருந்தாலும் ஒரே இரவில், 10 மணி நேரத்திற்குள் நடக்கும் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் விறுவிறுப்பாக கதை நகர்த்து செல்கிறது அடுத்தது என்ன என்ற எதிர்பார்ப்புடன் கதையை எல்லோரும் ரசிக்கும்படி கொடுத்துள்ளார் அறிமுக இயக்குநர் கலியபெருமாள் இளையராஜா. பாராட்டுக்கள்.தமிழ் திரை உலகில் நல்ல எதிர்காலம் இருக்கிறது