Monday, June 1

“ஹாட்ஸ்பாட்” திரைப்பட விமர்சனம்.

கேஜேபி டாக்கீஸ் மற்றும் 7 வாரியார் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் கேஜே.பாலமணிமார்பன், சுரேஷ் குமார், கோகுல் பினாய் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் “ஹாட்ஸ்பாட்”.

சிக்ஸர் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தினேஷ் கண்ணன் வெளியிட ஹாட் ஸ்பாட் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் விக்னேஷ் கார்த்திக்.

இதில் கலையராசன் – ஏழுமலை, சோஃபியா – லக்ஷ்மி, சாண்டி – சித்தார்த், அம்மு அபிராமி – தீப்தி , ஜனனி – அனிதா , சுபாஷ் – வெற்றி, கௌரி ஜி. கிஷன் – தன்யா, ஆதித்யா பாஸ்கர் – விஜய் ஆகியோர் அந்தந்த கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் :  ஒளிப்பதிவு – கோகுல் பினோய், இசை – சதீஷ் ரகுநாதன், வான், படத்தொகுப்பு – முத்தையன் ஏ, கலை – சிவா சங்கரன், நிர்வாக தயாரிப்பாளர் – ஆர். பாலாகுமார், தயாரிப்பு மேற்பார்வை – பிரியான், சேர்க்கை உரை, திரைக்கதை – கிஷோர் சங்கர், பப்லிசிட்டி டிசைனர் – ராஜின் கிருஷ்ணன், டைட்டில் டிசைன் – ட்வென்டி ஒன் ஜி, இயக்குநர் குழு – எம் பி எழுமலை, சபரி மணிகண்டன், மாதவன் ஜெயராஜ், எம்.பிரபாகரன் ஜாய், வெற்றி ஏஜேகே, பி.ஆர்.ஓ – வேலு

படத்தின் தலைப்பிற்கு ஏற்ப  வித்தியசமான  4 கதைகளை கையில் எடுத்துள்ளார் படத்தின் இயக்குனர் விக்னேஷ் கார்திக்

படத்தை பார்ப்போம்:

ஆரம்பம் ஒரு சினிமா தயாரிப்பாளரிடம் நான்கு கதைகளை  சொல்லும் இயக்குநராக விக்னேஷ் கார்த்திக்கே நடித்திருக்கிறார். இயக்குநர் கதை சொல்வது போல படம் தொடங்குகிறது

ஹாப்பி மேரிட் லைஃப்

கதை ஒன்று :திருமணத்திற்கு பிறகு நான் மனைவி வீட்டில் தான் வசிப்பேன். ஆண், பெண் இருவரும் சரிசமமானவர்கள் என தன் வருங்கால மனைவியிடம் கன்டிஷன் போடும் இளைஞனின் கதை ஒன்று.

கோல்டன் ரூல்ஸ்

கதை இரண்டு

ஒரு ஆணும் பெண்ணும் தீவிரமாகக் காதலிக்கிறார்கள் இரண்டு பேர் காதலிக்கிறார்கள். திருமணம் செய்ய முடிவு செய்தபோது  அவர்கள் அண்ணன், தங்கை உறவு முறை என்பது தெரிய வருகிறது.

 தக்காளி சட்னி :கதை மூன்று

வாலிபரின் தவறான செயலால் தான் வேலை பார்த்த கம்பெனியில் வேலை இழக்கிறார்.அதன் பிறகு வேலை தேடியும் வேலை கிடைக்கவில்லை  பீச்சில் கடற்கரையில்  அறிமுகம் இல்லாத ஆள் வாலிபரை  சந்திக்கிறார் தனக்கு வேலையில்லாத விவரத்தை அவரிடம் கூற அவர் மூலம் வேலை கிடைக்கிறது ஆண் உடம்பை வைத்து பணம் சம்பாதிக்கிறது இந்த விஷயம் தன்  காதலிக்கு தெரியவருகிறது!

 ஃ பேம் குறும்படம் :கதை நான்கு

ஏழை ஆட்டோ டிரைவர்  தன் மகளை பிரபல டிவி சேனல் நடத்தும் போட்டியில் கலந்து கொள்ளச் செய்கிறார். அங்கு மகள்  மர்மமான முறையில் இறக்கிறார். மகளின் மரணத்திற்கு காரணம் அந்த டிவி சேனல் தான் குற்றம் சுமத்துகிறார் . டிவி சேனலில் நடந்தது என்ன ? இது தான் கடைசி கதை.

முதல் கதையில் பெண்ணுரிமை என்ற பெயரில் ஆண் தாலி கட்டிக்கொள்வது, பெண் வீட்டில் என்ன வேலைகள் காலையில் மனைவிக்கு Bed Coffee முதல் சமையல் செய்வது வாஷிங் மிஷினில் துணி துவைப்பது / பெண்ணைப் போன்று ஆண் வீட்டில் அனைத்து வேலைகளும் செய்யனும் அப்பா அம்மா பார்கனும் என்றாலும் மனைவி ,மாமியார் ,மாமனார் பர்மிஷன் கொடுத்தால் தான் போகனும் ! முடிவா ஆண்களை பிள்ளை பெத்துக்க மட்டும் சொல்லவில்லை? படுக்கறையில் ஆண் பெண் நடந்து கொள்கின்ற விஷியத்தையும் சொல்லவில்லை !கதை  .புரட்சி  ,வித்தியாசம் என்ற பெயரில் மண்ணின் கலாச்சாரம் சீரழிக்க முயற்ச்சி கிறார்கள்.
இரண்டாவது மற்றும் மூன்றாவது கதைகள் இப்படியெல்லாம் நம் சமூகத்தில் நடக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது அப்படி நடந்தால் சமூகத்திற்க்கு பெரும் ஆபத்து !
ஃபேம் குறும்படம் :நான்காவது கதை
இதில் கலையரசன், சோபியா ஆகியோரின் குழந்தைகள் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்கின்றனர்.
 தொலைக்காட்சியில் வரும் கேம் ஷோக்கள் குழந்தைகள் மீது பெரிய வன்முறையை திணிக்கின்றன
இன்றைய காலகட்டத்தில் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. குழந்தைகளை வைத்து பணம், புகழ் தேடும் கேவலமான பெற்றோர்களின் பேராசைக்கு சாட்டை அடி கொடுத்துள்ளது.
இந்த நான்கு கதைகளில் முதல் மூன்று கொஞ்சம்  கருத்தும் கலந்திருக்கிறது. ஆனால் நான்காவது கதை அனைவரின் கவனத்தையும்  தாக்கத்தையும் ஏற்படுத்தியது .இயக்குனரை பாராட்டலாம் : திரையுலகில் இவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.
இப் படத்தில் நடித்த நடிகர்கள் சிறப்பாக தன் பங்களிப்பை கொடுத்துள்ளனர்.
இப்படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் சிறப்பாக தன் பணி செய்து கொடுத்துள்ளனர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
இப்படம் சமூக அக்கறையோடு எடுத்திருந்தாலும் சில இடங்களில் வரும் காட்சிகள் வசனங்கள் முகம் சுளிக்கிற மாதிரி வைக்கிறது.
ஏ படத்திற்கு பெரியோர்கள் மட்டும் படம் பார்த்தால் போதும்!
ஒரு முறை பார்க்கலாம்!
ஹாட்ஸ்பாட் : மனதை தொடும் கெடும் !
ரேட்டிங் : 2.8/5