Tuesday, August 4

News

சூப்பர் சிங்கர் சீசன் 11 & குக் வித் கோமாளி மெகா சங்கமம் !!*

சூப்பர் சிங்கர் சீசன் 11 & குக் வித் கோமாளி மெகா சங்கமம் !!*

News
*சூப்பர் சிங்கர் சீசன் 11 & குக் வித் கோமாளி மெகா சங்கமம் !!* *இசை, சமையல், காமெடி என ரசிகர்களை மகிழ்விக்க வரும் மெகா சங்கமம் !!* தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் மக்களை வெகுவாக கவர்ந்திழுத்த இரண்டு நிகழ்ச்சிகள், சூப்பர் சிங்கர் மற்றும் குக் வித் கோமாளி. இந்த வாரம் இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் ஒன்றாக இணையும் ஒரு மெகா சங்கமம், தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக நிகழவுள்ளது. தமிழக மக்களின் நெஞ்சங்களில் தனித்த இடம் பிடித்த, விஜய் டிவியின், சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சி 10 வருடங்களைக் கடந்து, வெற்றி நடை போட்டு வருகிறது அதே போல ஒரு சமையல் போட்டி நிகழ்ச்சியை புதுவிதமான நையாண்டியுடன் அணுகிய, குக் வித் கோமாளி நிகழ்ச்சி, 6 வது சீசனை கடந்து, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று நடந்து வருகிறது. பட்டி தொட்டியெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் இந்த இரண்டு நிழச்சிகளி...
*பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்.*

*பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்.*

News
*பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்.* இந்தியாவின் மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, “மா வந்தே” எனும் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தை சில்வர் காஸ்ட் கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் உண்ணி முகுந்தன் நடித்துள்ளார். இந்த திரைப்படம், நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை வென்ற நரேந்திர மோடி அவர்களின் அற்புதமான வாழ்க்கைப் பயணத்தைச் சித்தரிக்கிறது. சிறுவயது முதல் தேசத்தின் தலைவராக உயர்ந்த வரலாற்றையும் உண்மை சம்பவங்களையும் அடிப்படையாகக் கொண்டும் உருவாக்கப்படுகிறது. குறிப்பாக, அவருக்கு எப்போதும் ஆதரவாக இருந்த தாயார் ஸ்ரீமதி ஹீராபென் மோடி அவர்களுடனான ஆழமான பந்தத்தை இத்திரைப்படம் வெளிப்படுத்துகிறது. சர்வதேச தரத்திலும், அற்புதமான VFX தொழில்நுட்பங...
“வேடுவன்”, ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ் வெப் சீரிஸ் அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீமாகிறது!*

“வேடுவன்”, ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ் வெப் சீரிஸ் அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீமாகிறது!*

News
*கண்ணா ரவி நாயகனாக நடிக்கும், “வேடுவன்”, ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ் வெப் சீரிஸ் அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீமாகிறது!* இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நடிகர் கண்ணா ரவி முதன்மைப் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த சீரிஸ், வலுவான உணர்ச்சி பூர்வமான கதை சொல்லலையும், ஆழமான நடிப்பையும் இணைக்கும் சக்திவாய்ந்த டிராமாவாக உருவாகியுள்ளது. மண் சார்ந்த பாரம்பரியக் கதைகளை தைரியமாக சொல்லும் முயற்சியில் தொடர்ந்து முன்னோடியாக பணியாற்றி வரும் ZEE5, வேடுவன் மூலம் அத்தகைய முயற்சியை மீண்டும் மேற்கொண்டுள்ளது. பல அடுக்குகள் கொண்ட மனித உணர்வுகள், எது சரி, எது தவறு என்பதிலான சிக்கல்கள், கடமைக்காக தரப்படும் தனிப்பட்ட விலை போன்ற அம்சங்களை பிரதிபலிக்கும் இந...
“இட்லி கடை” பட இசை வெளியீட்டு விழா!!

“இட்லி கடை” பட இசை வெளியீட்டு விழா!!

News
இட்லி கடை” பட இசை வெளியீட்டு விழா!! Dawn Pictures மற்றும் Wunderbar Films தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் தனுஷ், இயக்கி நடித்து வரும் “இட்லி கடை” படம் வரும் அக்டோபர் மாதம் 1ஆம் தேதி வெளியாகவுள்ளது . இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில், படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்து கொண்ட இசை நிகழ்ச்சியுடன் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில்... Wunderbar Films சார்பில் ஷ்ரேயாஸ் பேசியதாவது: தனுஷ் சார் ரசிகர்கள் அனைவருக்கும் வணக்கம். நானும் ஆகாஷும் சேர்ந்து படம் செய்யலாம் எனப் பேசிக்கொண்டு இருந்தோம். தனுஷ் சார் “இட்லி கடை” கதை செய்யலாம் என்று சொல்லிக்கொண்டிருந்தார். ஆகாஷிடம் சொன்ன போதே, “சார் இயக்குகிறார் என்றால் உடனே ஷூட் போகலாம்” என்றார். முழுமையாக எங்களுக்கான சுதந்திரம் தந்தார். தனுஷ் சாருக்கு இது மனதுக்கு மிகவும் நெருக்கமான படம். இப்படத்தில் உழ...
*“தண்டகாரண்யம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா !*

*“தண்டகாரண்யம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா !*

News
*“தண்டகாரண்யம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா !* *எனக்கு கடைசி மூன்று படங்கள் வாழ்க்கையில் உள்ள அனுபவம் கொண்டு நடித்தேன் -நடிகர் தினேஷ்* Learn&Teach புரொடக்ஷன் S.சாய் தேவானந்த், S.சாய் வெங்கடேஸ்வரன், நீலம் புரொடக்ஷன் தயாரிப்பில், இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கத்தில், தினேஷ், கலையரசன், ஷபீர், பால சரவணன், முத்துக்குமார், ரித்விகா,வின்சு, ஆகியோர்களது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "தண்டகாரண்யம்" இம்மாதம் 19-ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின், இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்து கொள்ள சென்னை கிரீன் பார்க் நட்சத்திர விடுதியில் கோலாகலமாக நடைபெற்றது. இந் நிகழ்வினில் நடிகை ரித்விகா பேசியது, இந்த படத்தின் இயக்குனருடன் இது எனக்கு இரண்டாவது படம். புதிய களம், புதிய கதை படத்தின் முக்கியமான கதாபாத்திரம் ஏற்று நடித்து இருக்கிறேன். படம் எடுக்க...
புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா.

புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா.

News
டார்லிங் - 2(2016) ஹாரர் காமெடி படத்தையும் விதிமதி உல்டா (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா. இவருடன் இரண்டு படங்களிலும் இணைந்து நடித்த நடிகர் நடிகையர்கள் கலையரசன் ,காளி வெங்கட்,கருணாகரன், சென்றாயன், சித்ராலட்சுமணன் ஞானசம்பந்தம், மாயா, ஜனனி ஐயர் ஆகியோர் நடித்திருந்தார்கள். டார்லிங் - 2 படத்தை ஞானவேல்ராஜாவின் கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் வெளியிட்டிருந்தது. விதிமதி உல்டா வெளியான பிறகு ஏற்பட்ட தோல்வியால் பொருளாதார சிக்கல்கள் ஏற்பட்டு திரையுலகைவிட்டு விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால் அந்தப் பிரச்சனை களுக்கு இடம் அளிக்காமல் தன்னம்பிக்கையுடன் சொந்த தொழில் தொடங்கி தொழிலதிபரானார் அவர் தொழிலதிபராகி தொடங்கியSKYLANES மற்றும் LIGHT WEIGHT RR SPESIALISED ROOFINGS PVTLTD நிறுவனம் இன்று அஸ்...
விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா

விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா

News
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10.09.2025 அன்று சென்னையில் நடைபெற்றது. இப்படம் விஜய் ஆண்டனியின் 25வது படம். இப்படத்தை அருவி படத்தின் இயக்குனர் அருண் பிரபு இயக்கியிருக்கிறார். இசையை விஜய் ஆண்டனியே அமைத்திருக்கிறார். ஷெல்லி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கதாநாயகி திருப்தி நடிகையாக அறிமுகமாகிறார். இந்த விழாவிற்கு விஜய் ஆண்டனியை இயக்குனர்கள் திரளாக வந்து தங்களது மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்கள். மேலும், இவ்விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள் பேசியதாவது, பாடகி ஷோபா சந்திரசேகர் பேசுகையில், விஜய் ஆண்டனி என் குடும்பத்தில் ஒருவர். நான் இன்று வேறு ஒரு இடத்தில் இருந்தேன். அவர் என்னை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்தார், உடனே நான் வந்து விட்டேன். முதன் முதலாக சுக்ரன் படத்தில் என்னுடைய கணவர் ...
*வேம்பு திரைப்படம் ஆஹா OTT தளத்தில் வெளியாகிறது.* ..

*வேம்பு திரைப்படம் ஆஹா OTT தளத்தில் வெளியாகிறது.* ..

News
*வேம்பு திரைப்படம் ஆஹா OTT தளத்தில் வெளியாகிறது.* .. மஞ்சள் சினிமாஸ் சார்பில் கோல்டன் சுரேஷ் மற்றும் S.விஜயலட்சுமி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேம்பு’. அறிமுக இயக்குநர் V.ஜஸ்டின் பிரபு இயக்கியுள்ளார். இந்த படத்தில் மெட்ராஸ் (ஜானி) ஹரிகிருஷ்ணன் கதாநாயகனாக, ஷீலா கதாநாயகியாக நடிக்க படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. வேம்பு திரைப்படம் பெண்ணியம் பேசும் படம். பெண்களுக்கு அனைத்து விஷயங்களிலும் சம உரிமை கொடுக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துகிறது. நம் மொத்த சமூக கட்டுப்பாடுகளும் பெண் மீதுதான் கட்டமைக்கபட்டிருக்கிறது. இச்சமூகம் பெண் என்ன உடை உடுத்த வேண்டும் என்ன உடை உடுத்தக் கூடாது என்பதைப் பற்றி பேசுகிறது. பெண்ணானவள் எப்போது வீட்டிற்கு திரும்ப வேண்டும் யார் நல்லவள் யார் கெட்டவள் என்பதைப் பற்றி பேசுகிறது. எத்தனை மணிக்கு உறங்க வேண்டும் எத்தனை மணிக்கு எழ வேண்டும் என்ப...
காதல் திரைப்படமாக உருவாகியுள்ள “சரீரம்” செப்டம்பர் 26 திரைக்கு வருகிறது !!

காதல் திரைப்படமாக உருவாகியுள்ள “சரீரம்” செப்டம்பர் 26 திரைக்கு வருகிறது !!

News
உன்னதமான காதல் திரைப்படமாக உருவாகியுள்ள “சரீரம்” செப்டம்பர் 26 திரைக்கு வருகிறது !! G.V.P. PICTURES வழங்கும், இயக்குநர் G.V. பெருமாள் எழுதி, தயாரித்து, இயக்க, புதுமுகங்கள் தர்ஷன், சார்மி நடிப்பில், உன்னதமான காதல் திரைப்படமாக, கடவுள் தந்த சரீரத்தின் பெருமையை பேசும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “சரீரம்”. இப்படம் வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. கடவுள் ஒவ்வொருவருக்கும் தந்த தனிக் கொடை தான் சரீரம். அதன் அருமை யாருக்கும் புரிவதில்லை, தன் சரீரத்தை மாற்றிக்கொள்ளும் உரிமை எவருக்குமில்லை, இந்த கருத்தை ஆழமாக பேசும் படைப்பாகவும் இளமை துள்ளும் காதல் படைப்பாகவும் இப்படத்தை எழுதி தயாரித்து உருவாக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் G.V. பெருமாள். ஒரு காதல் ஜோடி, அவர்களின் காதலுக்கு குடும்பமே எதிர்ப்பு தெரிவிக்க, வாழ வழி தெரியாமல், காதலுக்காக ஆண் பெண்ணாகவும், பெண...
வ. கௌதமன் நடிக்கும் ‘படையாண்ட மாவீரா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு*

வ. கௌதமன் நடிக்கும் ‘படையாண்ட மாவீரா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு*

News
*'தமிழின உணர்வாளர்' வ. கௌதமன் நடிக்கும் 'படையாண்ட மாவீரா' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு* *'படையாண்ட மாவீரா' திரைப்படத்தை செப்டம்பர் 19ம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் சுஷ்மா சினி ஆர்ட்ஸ் ஜி. என். அழகர் வெளியிடுகிறார்* இயக்குநரும், நடிகருமான வ. கௌதமன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. வ. கௌதமன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தில் வ. கௌதமன், சமுத்திரக்கனி, பூஜிதா பொன்னாடா, இளவரசு, 'பாகுபலி' பிரபாகர், சரண்யா பொன்வண்ணன், 'ஆடுகளம்' நரேன், மன்சூர் அலிகான், ரெடின் கிங்ஸ்லி, மதுசூதன் ராவ், 'நிழல்கள்' ரவி , 'தலைவாசல்' விஜய், சாய் தீனா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் மற்றும் சாம் சி. எஸ். இசையம...