
நடிகர்கள்:- வெற்றி, பிரியாலயா, லிவிங்ஸ்டன், அபிராமி வெங்கடாசலம், ஏ. வெங்கடேஷ், ராமர், அருள் டி. சங்கர், சபிதா ராய், துளசி, கராத்தே வெங்கடேசன், ஜப்பான் குமார் , தயாரிப்பாளர் மூர்த்தி, மற்றும் பலர்.
தொழில்நுட்பக் கலைஞர்கள்:-
தயாரிப்பு நிறுவனம்: எம்.எம். ஸ்டுடியோஸ்
தயாரிப்பாளர்: எம். மூர்த்தி
இணைத் தயாரிப்பாளர்: எம். மானஸ்வனி
எழுத்து மற்றும் இயக்கம்: தீரன் அருண்குமார்
இசை: கவாஸ்கர் அவினாஷ்
ஒளிப்பதிவு: சந்தோஷ் குமார் வீரசாமி
:எடிட்டர் :தினேஷ் குமார்
சண்டைப் பயிற்சி: “மெட்ரோ” மகேஷ்
மக்கள் தொடர்பு: “எய்ம்” சதீஷ்
படத்தை பார்ப்போம்:
கார் பழுது பார்க்கும் பெரிய கம்பெனியில் வேலை பார்க்கும் வெற்றி தந்தை, தாய், தங்கையுடன் அமைதியாக சந்தோஷமாய் வாழ்ந்து வருவதோடு, தனது கல்லூரி தோழி நாயகி பிரியலயாவை காதலித்தும் வருகிறார்.இன்னொருபக்கம்
ஏ. வெங்கடேஷ் சொந்தமான ஒரு முன்னணி தலைமுடி ஏற்றுமதி நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்கிறார். இவரது மகன் வெற்றி தன்னுடைய தந்தைக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என நினைத்தாலும், டிரைவர் வேலையை விட விருப்பம் இல்லாமல் தொடர்ந்து வேலைக்கு செல்கிறார். இந்த சூழலில் திருப்பதியிலிருந்து கொண்டுவரப்பட்ட, சுமார் ₹5 கோடி மதிப்புள்ள ஒரு பெரிய தலைமுடி கொண்டு சேர்க்கும் வேலை லிவிங்ஸ்டனுக்கு கொடுக்கப்படுகிறது. ஆனால், பாதிவழியில் லாரியும், மாரிமுத்துவும் காணாமல் போக, விஷயம் போலீசுக்கு போகிறது. இந்தச் சம்பவத்தில் லிவிங்ஸ்டன் முக்கிய சந்தேக நபராகிறார். தனது தந்தை நிரபராதி என நிரூபிக்க வெற்றி எடுக்கும் முயற்சி பல திருப்பங்களுடன் படத்தின் மீதிக்கதை.
தந்தை மீது விழுந்த பழியைத் துடைப்பதற்காக அதன் பின்னணியைத் தேடி அலையும் காட்சிகளில் வெற்றியின் அழுத்தமான நடிப்பு பாராட்ட வைக்கிறது. பிரியாலயாவின் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. லிவிங்ஸ்டனின் அப்பாவித்தனமான எதார்த்தமான, வில்லத்தனமான ஏ. வெங்கடேஷ் அபிராமி வெங்கடாசலம், போலீஸ் இன்ஸ்பெக்டராக தயாரிப்பாளர் மூர்த்தி, அரோல் டி. சங்கர், கராத்தே வெங்கடேசன் ஆகியோரின் கதாபாத்திரம் படத்துக்குப் பக்கபலமாக அமைந்துள்ளன.
கவாஸ்கர் அவினாஷின் இசையும், சந்தோஷ் குமார் வீராசாமியின் ஒளிப்பதிவும் கதைக்கு வலு சேர்க்கின்றன எடிட்டர் :தினேஷ் குமார் படத்திற்கு தேவையான காட்சிகள் மட்டும் சேர்ந்துள்ளனர்
தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லாத வித்தியாசமான கதைக்களத்தைத் தேர்ந்தெடுத்து தலைமுடிக்கும் இத்தனை பெரிய மதிப்பு இருக்கிறதா என்ற ஆச்சரியத்தை ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் தீரன் அருண்குமார். சுவாரஸ்யம் தந்தாலும், திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பைக் கூட்டியிருக்களாம் பாராட்டு வாழ்த்துக்கள்
மொத்தத்தில் இப்படம் அனைவரும் பார்க்கலாம்
ரேட்டிங் 3:5










