Sunday, October 11

“தாய்நிலம்” திரை விமர்சனம்.

​நடிகர்கள்:- டாக்டர் அமர் ராமச்சந்திரன், பாலசிங், நேஹா அமர், நிமிஷா நம்பியார், தீபக், பத்மஜா அமர், நிஹால், குருதக்ஷிணா மற்றும் பலர்
இயக்கம்: அபிலாஷ் ஜி​. தேவ்
தயாரிப்பு: நேனி என்டர்டெயின்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்
ஒளிப்பதிவு: பிரசாந்த் பிரணவத்தின்
இசை: அவுசேப்பச்சனின்
படத்தொகுப்பு: டீஜோ பி. வர்க்கீஸ் காட
மக்கள் தொடர்பு: டீம் ஏய்ம், சதீஷ்

படத்தை பார்ப்போம்:

இலங்கைப் போரின் வீடு, உறவுகள், சொந்த மண் என அனைத்தையும் இழந்த அமர் ராமச்சந்திரன் தனது மகள் நேகாஅமருடன் .உறவினர்கள் நம்பி கடற்படை ஆபத்தை கடந்த மகளை அழைத்து கொண்டு தமிழ்நாடு வருகின்றன உறவினர்கள் ஆதரவு கொடுக்க வில்லை இந்த சூழ்நிலையில்

பஸ்  பேருந்து நிறுத்தத்தையே தற்காலிக வசிப்பிடமாக்கிக் கொண்டு வாழ்க்கையை நகர்த்தும் அவர்களுக்கு பசி, வேலை இல்லாமை, ஈழ தமிழர்களுக்கு வேலை தர மறுக்கிறார்கள் இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் , அங்கிருப்பவர்கள் சில உதவிகள் செய்கிறார்கள்.

பாதுகாப்பற்ற சூழல் பல்வேறு அவமானங்களை சந்திக்கிறார் இந்தப் போராட்டங்களுக்கு மத்தியில் தந்தையும் மகளும் எப்படி வாழ்க்கையை எதிர்கொள்கிறார்கள் என்பதே படத்தின் கதை

நடிகர்களின் பங்களிப்பு  :

டாக்டர் அமர் ராமச்சந்திரன், மகள் மீதான பாசத்தையும், கடந்த காலத்தின் வலியையும், எதிர்காலம் குறித்த அச்சத்தையும் மிகையில்லாமல் வெளிப்படுத்துகிறார். சிறுமி நேகா அமரும் ஈழ தமிழர்களா வாழ்துள்ளனர் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறார். பாலாசிங் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களுக்கான கதாபாத்திரங்களை நிறைவாக செய்துள்ளனர். போரின் வலியையும் அகதிகளின் வாழ்க்கையையும்  நம்  கண்களில் நீர் கசிகிறது அடுத்தது என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு கூட்டு கிறது  அவுசேப்பச்சனின் பின்னணி இசை. பிரசாந்த் பிரணவத்தின் ஒளிப்பதிவு கதையின் சூழலுக்கு கச்சிதமாக பொருந்துகிறது. பாடல்களும் கதையின் உணர்வுகளோடு இணைந்து பயணிக்கின்றன.

யுத்தத்தினால் பாதிக்கப்படும் குழந்தைகளின் ஏக்கம் தவிப்பு, வலி மிகுந்த வாழ்க்கை மற்றும் அவர்களின் கேள்விக்குறியான எதிர்காலத்தைப் பற்றி, கிளைமாக்ஸ் காட்சியில் பார்வையாளர்களை சிந்திக்க வைத்து விடுகிறார் “தாய் நிலம்’’ மனதில் நிற்கிறது. இயக்குநர் அபிலாஷ் ஜி.தேவன்.பாராட்டு வாழ்த்துக்கள்

 

ரேட்டிங் 4:५