Tuesday, September 8

“அமரம்” திரை விமர்சனம்.

திவ்ய சேத்ரா பிலிம்ஸ் ம் சார்பில் நிர்மலா ராஜன் வழங்க சி.ஆர்.ராஜன் தயாரிக்கும் படம் அமரம்.

நடிகர்கள் :-நாயகன் ராஜன் தேஜஸ்வர் (அருகன்), நாயகி ஐரா அகர்வால்

ஜார்ஜ், சாய் தீனா , நாகிநீடு , கல்கி ராஜன் , மற்றும் பலர் நடித்துள்ளனர்

தொழில்நுட்ப கலைஞர்கள்:-

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – திருஅருள் கிருஷ்ணா

இசை – மிக்கி ஜெ ., ஒளிப்பதிவு – பரத் குமார், எடிட்டிங் ராமர்

பாடல்கள் – சௌந்தரராஜன். கே,ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் இந்த படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறார்  .மக்கள் தொடர்பு -சதீஷ்குமார் புவன் செல்வராஜ்.

படத்தை பார்ப்போம்

மலைஅடிவாரப் பகுதியில் வாழும் கதாநாயகன் தன் சிறு வயதில் தன் கண்முன்னே தாய் பாலியல் வன்கொடுமை  படுகொலை  கொடூரத்தைக் கண்ட  நாயகன்  ராஜன்தேஜஸ்வர் வளர்ந்து பெரியவனானதும் இவன் தாய்க்கு ஏற்பட்ட கொடடூமையை மறக்க முடியவில்லை மனதளவில் பெரியபாதிப்பு  இவனுக்கு  எது நல்லதுகெட்டது தெரியாது உணர்வு, உணர்ச்சியற்றவனாக வாழ்கிறான் இவருக்கு துணையாக ஆதரவாக ஜார்ஜ் இருந்து வருகிறார். இந்த மலை அடிவாரத்தில் வாழும் ஆண்கள் தொழில்  பணததிற்காக அரசியல்வாதி, போலீஸ் உதவியுடன் செனனை மாநகரத்தில் கொலை செய்வதுவிட்டு  மீண்டும் தன் மலை அடிவாரத்தில் வந்து விடுவது இதில் நாயகன் கைதேர்ந்தவர் வச்ச குறி தப்பாது கூலி படையின் முக்கிய புள்ளியாக சாய்தீனா  இவரிடம் கூலி அடிமையாக நாயகன் வேலை பார்க்கிறார் இதற்கிடையே, பணத்திற்காக தனது தந்தையை கொலை செய்த கொலையாளி ராஜன் தேஜஸ்வரை பழிவாங்குவதற்காக தேடிச் செல்கிறார் ஐரா அகர்வால். அங்கு அவர் எதிர்பாராத அதிர்ச்சியையும் ஆபத்தையும் சந்திக்கிறார். அதன் பிறகு நடக்கும் பல திருப்பங்களுடன்  படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள்

தாடி, சிரிக்காத முகம்,முரட்டுத் தோற்றம், சில காட்சிகள் இரண்டு வார்த்தைகள் மட்டும் அதிகம் பேசாத உடல் மொழி  ராஜன் தேஜஸ்வரின் நடிப்பு கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருந்தது சண்டை ,டான்ஸ் காட்சிகளில் தூள் கிளம்புகிறார் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி படத்தின் வேகத்தை கூட்டுகிறது.

பழிவாங்கும் பெண்ணாக நாயகி ஐரா அகர்வால் தனது நடிப்பால் அனைவரின் கவனம் ஈர்க்கிறார். அவரது கதாபாத்திரத்திற்கு இன்னும் அழுத்தம் கொடுத்திருந்தால்  . மரியம் ஜார்ஜ், சாய் தீனா, ஹரிஷ் பெராடி ஆகியோரும் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர்.

இசை – மிக்கி ஜெ  ., ஒளிப்பதிவு – பரத் குமார், படத்திற்க்கு பெரியபலம் .எடிட்டிங் ராமர் படத்திற்கு தேவையான காட்சிகள் மட்டுமே சேர்த்துள்ளார்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – திருஅருள் கிருஷ்ணா உங்கள் கதைக்கு பொருத்தமான கதாநாயகன் சரியான தேர்வு வித்தியாசமான கதைக்களம் ,அடுத்தது என்ன என்ற எதிர்ப்பு கூட்டுகிறது   முயற்சிக்கு  பாராட்டு

படம் பார்க்கலாம்!