Sunday, August 9

“டிசி ” திரை விமர்சனம்.

நடிகர்கள் :- லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, தலைவாசல் விஜய், அவினாஷ் ரகுதேவன், கிரிஷ் தயாள், பாலாஜி தேவிபிரசாத், ஜவஹர் சக்தி, பிரணவ் தியோபின் மற்றும் பலர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:-

இயக்கம் – எழுத்து: அருண் மாதேஸ்வரன்

இசை: அனிருத் ரவிச்சந்தர்

ஒளிப்பதிவாளர்: முகேஷ் கௌதம்

படத்தொகுப்பாளர்: பிரசன்னா ஜி.கே

மக்கள் தொடர்பு: ரியாஸ் கே. அஹ்மத், பாரஸ் ரியாஸ்

படத்தை பார்ப்போம்:

ஆரம்ப காட்சி.. காவல்துறையின் ஆயுதங்களைச் கொள்ளையடித்து  தலைவாசல் விஜய் தலைமையிலான  லோகேஷ் கனகராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் மறைந்து வாழ்கிறார்கள் பறிகொடுத்த இடத்தில் போலீஸ் விசாரணை நடக்கிறது அந்த வழியாக வந்த  ஏழை விவசாயி நிலத்தை விற்று தன் மகன் படிப்பு செலவுக்கு வைத்திருந்த ரூ 7 லட்சம்  பணத்தை போலீஸ் பறிமுதல் செய்து   அவனை கொன்று ஊருக்கு வெளியே வீசி விடுகிறார்கள்  ஏழை விவசாயி குடும்பத்தார் போலீஸ் புகார் கொடுக்க நியாயம் கிடைக்க வில்லை பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ்க்கு பயந்து மறைந்து வாழும் லோகேஷ் கனகராஜ் யிடம்  முறையிடுகிறார்கள் பணத்தை பறித்த போலீஸ் அதிகாரியை காவல் நிலையத்திற்குள் புகுந்து அந்த அதிகாரியை கொடூரமாகப் பழிவாங்குகிறார்.