
மாசாணி பிக்சர்ஸ் சார்பில் ராஜசேகர்.ஆர் தயாரித்திருக்கும் “வடம்” படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் கேந்திரன்.வி
நடிகர்கள்;
விமல் –நடராஜ் (நட்டி) , ன்ஷ்கா ஸ்ரீ- , இந்து ,தீபா சங்கர் – முனிஷ்காந்த் – நரேன் , பாலா சரவணன் – மதுசூதனன் – – ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:
ஒளிப்பதிவு: பிரசன்னா எஸ் குமார், எடிட்டர்;: சாபு ஜோசப் வி ஜே, கலை: வி.சசிகுமார், இசை: டி.இமான், பாடல் வரிகள்: ஞானகரவேல், சண்டைக்காட்சிகள்: ஜி.என்.முருகன், நடன இயக்குனர்: தினேஷ், தீனா என்.சங்கர்,மக்கள் தொடர்பு: சதீஷ் எஸ்2 மீடியா
கதைகரு
ஊர் தலைவரின் மகனான விமலும் எதிர்கோஷ்டி நட்டி நட்ராஜ் காளையை வளர்த்து, வடமஞ்சு விரட்டு போட்டியில் கலந்து கொள்ள வைப்பதே !! பகை பழி வாங்குதல் …
படத்தை பார்ப்போம்:
சிவகங்கை மாவடத்தில் வட மஞ்சு விரட்டு தான் பிரபலம். அந்தந்த வீடுகளில் இருக்கும் காளைகள் தான் அவர்களுக்கு பெருமை. அதற்காக லட்சக்கணக்கில் செலவு செய்து காளைகளை பராமரித்து அதனை வட மஞ்சு விரட்டுக்கு தயார் செய்து களத்தில் இறக்கி விடுவார்கள்.அதுமட்டுமில்லாமல் அடிமாட்டுக்கு அனுப்பப்படும் மாடுகளைத் தனது பாதுகாப்பில் வைத்து பராமரித்துவருகிறார் அவரது மகன் விமலும் தந்தையைப் போலவே மாடுகள் மீது பாசம் கொண்டவர். கைவிடப்பட்ட கன்றுக் குட்டியைத் தனது வீட்டில் வளர்த்து பயிற்சி அளித்து மஞ்சு விரட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுகிறது வெற்றி பெற்ற காளையை இந்த கன்றுகுட்டி என் வீட்டில் தான் பிறந்தது எனக்கு தான் சொந்தம்உரிமை கொண்டாட நட்டி வருகிறார் .ஒரு கொலை வழக்கில் சிக்கி நிபந்தனை ஜாமீனில் வெளியே வரும் விமல் மீது நீதிமன்ற வளாகத்திலேயே வெறித்தனமான தாக்குதல் உயிர் பிழைத்தார்! எதிரிகள், வீட்டுக்குள்ளே கூட அவரை கொல்லத் திட்டமிடும் மனிதர்கள் என பல திசைகளில் இருந்து பகைமைகள் சூழ்ந்து வருகிறது விமலின் காதலி விமலை கத்தியால் குத்துகிறாள்,! இந்த நேரத்தில் நரேன் குடும்பத்திற்கு ஆவாத ஒருவர் விமலை கொல்ல,ஊர் ஊராக போய் ஆள் தேடுகிறார் இவர்கள் யார்? விமல் இந்த எதிரிகளிடமிருந்து தப்பித்தாரா, என்ன என்பதே பல திருப்பங்களுடன் படத்தின் மீதிக்கதை,.
கதாநாயகன் விமல் மீசையை முறுக்கிவிட்டு கையை மடித்துவிட்டு, வேட்டையை கட்டி களம் இறங்கி விடுவார், இந்த படத்திலும் எந்த குறையும் இல்லாமல் கலக்குகிறார்.கிராமத்து இளைஞனாகவும் வீரனாகவும் சண்டை காட்சிகள் தூள் கிளப்புகிறார்
ஹீரோயின் சனஸ்கா ஹோம்லியாக வந்து போகிறார்.
இவருடன் கூடுதல் பலமாக கிராமத்து படம் என்றாலே இருக்கும் நரேன், பாலசரவணன், முனிஷ்காந்த், நட்டி என பலரும் தங்கள் பங்கை சிறப்பாகவே செய்துள்ளனர்.
இமான் பாடல்களில் பாண்டிமுனி, லவ் சாங் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசை, வடமாடு மஞ்சு விரட்டு காட்சிகளில் கலக்கி இருக்கிறார். பிரசன்னகுமார்
ஒளிப்பதிவு கிராமத்து இரவு, பகல் மற்றும். மாடுகள் மோதும் சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாக இருந்தது
எடிட்டர் படத்திற்ககு தேவையான காட்சிகள் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளது
இயக்குனர் கேந்திரன்.வி . கதை தேர்வு நம் கிராமத்தில் வளரும் முரட்டு காளை பற்றிய படம் இதில் வடமஞ்சு விரட்டு காளை மாடு வளர்தல் போட்டிக்கு தயார்படுத்துதல் காளையின் உரிமையாளர்களுக்குள் எந்த நேரமும் பகை /பதற்றம் / கொலை மிரட்டல் என்றும் காட்சி வேகமாக நகர்கிறது மாடுகளின் வீரத்தை நம் மண்ணின் கலாசாரத்தை சிறப்பாக காட்டி உள்ளார் .அவருடை முயற்ச்சிக்கு பாராட்டு:
இப்படம் கிராமத்து கதை பிரியர்களுக்கு செம விருந்து










