ஸ்ரீராம் கார்த்திக் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘மெஸன்ஜர்’. மனீஷா ஜஸ்னானி, ஃபாத்திமா நஹீம், வைசாலி ரவிச்சந்திரன், லிவிங்ஸ்டன், பிரியதர்ஷினி ராஜ்குமார், ஜீவா ரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
பி.வி.கே.பிலிம் ஃபேக்டரி சார்பில் பா.விஜயன் தயாரித்துள்ள இந்தப் படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் ரமேஷ் இலங்காமணி. படத்தொகுப்பு பிரசாந்த்.ஆர், ஒளிப்பதிவு பால கணேசன் மற்றும் இசை அபு பக்கர். மக்கள் தொடர்பு சதீஷ்வரன்.
கதை கரு இறந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து குழந்தை பிறக்கிறது அது எப்படி ….?
படத்தை பார்ப்போம்:
ஐடி கம்பெனியில் வேலை செய்யும் ஸ்ரீராம் கார்த்திக் காதல் தோல்வி காரணமாக தற்கொலைக்கு முயற்சிக்கிறார். அப்போது அவரது முகநூலில் ( face Book) மெஸன்ஜரில் மெசேஜ் வருகிறது நீ தற்கொலை செய்து கொள்ளாதே இவருக்கு பெரிய அதிர்ச்சி சுற்றும் முற்றும் பார்க்கிறார் யாரும் இல்லை மெசேஜ் அனுப்பியது ஒரு பெண் என்று தெரியவருகிறது அவளுக்கு எப்படி தான் தற்கொலை செய்ய போவது தெரியும் என அவளிடமே மெசேஜ் செய்து கேட்க, எந்த பதிலும் இல்லை போலீஸ் அதிகாரி லிவிங்ஸ்டன் உதவியுடன் அவளை தேடி அவளுடைய ஊருக்கு போகிறார்கள் அவள் பெயர் பாத்திமா இரண்டு மாதங்களுக்கு முன் விபத்தில் இறந்து. விட்டாள் தகவல் கிடைகிறது இறந்த பெண்ணொருவர் தன் உயிரைக் எப்படி காப்பாற்றினார், இவருக்கும் அவளுக்கும் என்ன சம்மந்தம்? அந்தப் பெண் யார்? என்று தேடுகிறார் காதலிக்கிறார் அந்த பெண்ணையை திருமணம் செய்து கொள்கிறார் குழந்தையும் பிறக்கிறது இதெல்லாம் எப்படி சாத்தியம் ? பிறகு என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.
சக்திவேலன் கதாபாத்திரத்தில் மிகவும் பொருத்தமாக பொருந்தியிருந்தார் நடிகர் ஸ்ரீராம் கார்த்திக். தனது உடல் இல்லா தனது காதலியுடனான காதலை வெளிப்படுத்தும் காட்சி அனைவரும் கவனத்தை பெறுகிறார்
கதையோடு நகர்ந்து வந்த முன்னாள் காதலி மனீஷா ஸ்ரீ’யின் நடிப்பும் . இரண்டாம் பாதியில் கதையை நகர்த்த தனது நடிப்பையும் அள்ளிக் கொடுத்திருக்கிறார்.
லிவிங்ஸ்டன் போலீஸ் அதிகாரியாக சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார்
சிறிய காட்சி என்றாலும், படம் முழுவதும் தனது தாக்கத்தைக் கொண்டு சென்றுகொண்டே இருந்தார் கிராமத்து அழகியாக பாத்திமா. இவரது தோழியாக வந்திருந்த வைஷாலியும் தனது அழகால் ரசிகர்களை நன்றாகவே கவர்ந்திருந்தார். மற்றும் இப்படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்
ஒளிப்பதிவு மற்றும் இசை இரண்டுமே படத்திற்கு பெரும் பலமாக அமைந்திருக்கிறது. இப்படத்தில் பணியாறறிய அனைவரும் சிறப்பாக தன் பங்களிப்பை கொடுத்துள்ளனர்.
காதல் கதைகளை வேறு வேறு விதமாக காட்டி வந்த தமிழ் சினிமா இயக்குனர்கள், தற்போது உடல் இல்லா காதலை வித்தியசமான கதைகளம் அமைத்து காட்ட முயற்சித்திருக்கும் படம் தான் இந்த மெஸஞ்சர்.
ஒரு சில காட்சிகளில் திரைக்கதை சற்று தொய்வடைந்தாலும், இயக்குனர் முயற்ச்சிக்கு பாராட்டலாம்.










