
விசாரத் கிரியேஷன்ஸ் தயாரித்திருக்கும் வீரவணக்கம் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அனில் வி.நாகேந்திரன்
இதில் சமுத்திரக்கனி, பரத், ரித்தேஷ், சுதீஷ், வி.கே.பைஜு, பிரேம் குமார், ரமேஷ் பிஷாரடி, சுரபி லட்சுமி, முதுபெரும் கம்யூனிச போராளி பி.கே.மேதினி, ஆதர்ஷ், சித்தங்கனா, ஐஸ்விகா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
எழுத்து & இயக்கம்: அனில் வி.நாகேந்திரன்
ஒளிப்பதிவு: கவியரசு, சினு சித்தார்த்
படத்தொகுப்பு: பி.அஜித்குமார், அப்பு பட்டத்திரி
கலை இயக்கம்: கே.கிருஷ்ணன் குட்டி
சண்டை அமைப்பு: மாஃபியா சசி
இசை: எம்கே அர்ஜுனன், பெரும்பாவூர் ஜி. ரவீ ந்திரநாத், ஜேம்ஸ் வசந்தன், சி.ஜே.குட்டப்பன் & அஞ்சல் உதயகுமார்
பாடல்கள்: நவீன் பாரதி
பாடகர்கள்: டிஎம்எஸ் செல்வகுமார், சி.ஜே.குட்டப்பன், யாஸின் நிஸார், ரவிசங்கர், சோனியா
தயாரிப்பு: விஷாரத் கிரியேஷன்ஸ்
பத்திரிகை தொடர்பு: , சதீஷ், சிவா (எய்ம்)
கதை கரு
கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவிய முதல் செயலாளரும், புரட்சி வீரருமான பி.கிருஷ்ண பிள்ளையின் வீர வாழ்க்கை வரலாறு
படத்தை பார்ப்போம்:
பரத் சாதி, ஏழை பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வுகள் பார்க்காமல் அனைவருடனும் சகஜகமாக பழகுகிறார்.
அதே சமயம், அவரது பக்கத்து ஊரில் சாதி வன்கொடுமை பிரச்சனைகளில் பாதிக்கப்படும் மக்களுக்கு துணையாக நிற்பதோடு, அம்மக்களின் பிரச்சனைகளை எதிர்த்து போராட வைப்பதற்காக அவர்களை கேரளாவுக்கு அழைத்துச் சென்று கம்யூனிசபோராளி பி.கே.மேதினியை சந்திக்க வைக்கிறார் அவர் கூறும் போராட்ட வரலாறு 1940 கால கட்டத்தில் ஜமீன்தார் சித்திக் ஊர் மக்களை அடிமைகளாக நடத்தி வருகிறார். திருமணம் ஆகும் பெண்களின் வாழ்க்கையை சீரழிக்கிறார். இவர்களை எதிர்த்து போராட்டம் நடத்தி கம்யூனிஸ்ட் தலைவர்களான பி.கிருஷ்ண பிள்ளை, இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட், ஏ.கே.கோபாலன் ஆகியோரின் போராட்ட பங்களிப்பு வாழ்க்கை வரலாற்றை கூறுகிறார் சொல்லி முடிப்பதே ‘வீரவணக்கம்’ படத்தின் மீதிக்கதை.
புரட்சிகாரராக இருந்த பி கிருஷ்ணன் பிள்ளை வாழ்க்கை மையமாக கொண்டு உருவாகியிருக்கும் இந்த படத்தில் சமுத்திரகனி கதாபாத்திரம் கிருஷ்ண பிள்ளையாக ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தையே வழி நடத்தி செல்லும் போராளியாக வாழ்ந்துயிருக்கிறார் இவர்களுடன் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாடாக சுதீஷும், ஏ.கே.கோபாலனாக பைஜு வி.கே-யும், புரட்சிப் பாடகி பி.கே.மேதினியாகவே பி.கே.மேதினியும் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர் .
பணக்கார கம்யூனிசவாதி கதாபாத்திரத்தில் சில காட்சிகள் பரத் வந்தாலும் கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார்.
கவியரசுவின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். இசையமைப்பாளர்கள் எம்.கே.அர்ஜுனன், பெரும்பாவூர் ஜி.ரவீந்திரன், ஜேம்ஸ் வசந்தன், சி.ஜே.குட்டப்பன், அஞ்சல் உதயகுமார் ஆகியோரது இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை காட்சிகளுக்கு உயிரோட்டமாக பயணித்திருக்கிறது.
இன்றைய சினிமா போதை வெட்டு இத்து கேங்ஸ்ட்டர் கதையை படம் எடுக்கிறார்கள்
இயக்குநர் அனில் வி.நாகேந்திரன், பி.கிருஷ்ண பிள்ளையின் வீர வாழ்க்கையை மக்களுக்கு மீண்டும் நினைவு படுத்திய கொடுத்திருக்கிறார். அவருக்கு பாராட்டு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்
வரலாற்றை தெரிந்து கொள்வோம்
இப்படம் இளைய சமுதாயம் அனைவரும் பார்க்கும் படமாக உள்ளது










