“காயல்” திரைப்பட விமர்சனம்.
ஜே ஸ்டுடியோஸ்; சார்பில் ஜேசு சுந்தரமாறன் தயாரித்திருக்கும் காயல் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் தமயந்தி
இதில் லிங்கேஷ், ஐசக் வர்கீஸ், காயத்ரி, ஸ்வாகதா கிருஷ்ணன், ரமேஷ்திலக், ரேடியோ சிட்டி பரத் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு : கார்த்திக் சுப்ரமணியம், படத்தொகுப்பு : பி.பிரவீன் பாஸ்கர், இசை : ஜஸ்டின் , மக்கள் தொடர்பு : குணா
படத்தை பார்போம் ;
போலீஸ் உதவி கமிஷனர் ஐசக் வர்கீஸ் மனைவி யமுனா (அனுமோல்) மகள் தேன்மொழி (காயத்ரி சங்கர்), அமெரிக்காவில் வேலை செய்யும் மகன் என்று அழகான குடும்பம். தந்தையின் பாசத்துடன் தேனு தைரியமான பெண். கீழ் சாதியைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் ஆதி தமிழ் நாயகன் (லிங்கேஷ்) என்பரை காதலிக்கிறார் தேனு. இதற்கு அப்பா முழு சம்மதம் தர, அம்மா யமுனா எதிர்ப்பு தெரிவித்து பிடிவாதம் பிடித்து அவளது விருப்பத்திற்கு மாறாக உறவுக்காரனுக்குக் கழ...









