
நடிகர்கள்’பரிதாபங்கள்’ புகழ் டிராவிட் செல்வம் (கதாநாயகனாக அறிமுகம்), சித்தி இத்னானி, அஞ்சலி நாயர், தேவதநடிகர்கள்ர்ஷினி, கே.பி.ஒய் குரைஷி, சினிமா வாலா சதீஷ் மற்றும் ஆர்.ஜே. தீபக் .மற்றும் பலர் நடித்துள்ளனர் .
தொழில்நுட்ப கலைஞ்கள்:-
தயாரிப்பாளர்: ஜி.எம். மோர்கன்
தயாரிப்பு நிறுவனம்: ஜி.எம். மோர்கன் ஃபிலிம்ஸ்
எழுத்து – இயக்கம்: ஆர். ராகவ் மிருதத்
ஒளிப்பதிவு: ஜெயந்த் சேது மாதவன்
இசை: ஹரி எஸ்.ஆர், சூர்யா
படத்தொகுப்பு: சதீஷ் சூர்யா சண்டை பயிற்சி: பி.சி. ஸ்டண்ட்ஸ்
கிரியேட்டிவ் புரொட்யூசர்: சினிமாவுட் பிக்சர்ஸ், சினிமாவாலா சதீஷ்
நிர்வாக தயாரிப்பாளர்: பூரணி கிரிதரன்
தயாரிப்பு நிர்வாகி: எம். கே. சாய் சுந்தர்
மக்கள் தொடர்பு: சதீஷ் (ஏ.ஐ.எம்)
கதைகரு;தூக்கத்தில் நடக்கும் வியாதி உள்ள ஒரு மாணவன், மர்மமான பொம்மலாட்டக் கலைஞர், ஒரு சூனியக்காரி மற்றும் ஆன்மாக்கள் நிறைந்த ஒரு பொம்மை வீடு ஆகியவற்றைச் சுற்றி நடக்கும் விசித்திரமான மர்மமான சம்பவங்கள்…
படத்தை பார்ப்போம்:
டிராவிட் செல்வம் தூக்கத்தில் நடக்கும் வியாதியால் வெளியே வர போலீஸ் அதிகாரியான சினிமாவாலா சதீஷிடம் மாட்ட அவர்கள் நண்பர்கள் இருவரும் சப்போர்ட் செய்ய மூவரையும் ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரித்து மாணவர்கள் என்பதால் விட்டுவிடுகிறார். இத்த விஷயம் தெரிந்த கல்லூரி நிர்வாகம் டிராவிட் செல்வம், அஞ்சலி நாயர் தீபக் மூவரையும் இடைநீக்கம் செய்யப்பட்டுகிறார்கள். அதன்பிறகு பிளாக் ஹோல் எனப்படும் ஒரு விஞ்ஞான கூடத்தில் மூவரும் தங்க சென்ற இவர்கள் அங்கு மாட்டிக்கொள்கிகின்றனர். அங்கிருந்து வெளியே செல்ல முடியாத நிலையில் ட்ரோன் மூலம் வெளி உலகத்தை பார்க்கிறார்கள்.டிரோன் மூலம் , ஒரு பழைய மாளிகையில் வசிக்கும் சித்தி இத்னானி சந்திக்கிறார். அவரது அழகில் மயங்கும் டிராவிட், அவரைக் காதலிக்கத் தொடங்குகிறார். ஆனால், அந்தப் பெண்ணின் பின்னணியில் பல மர்மங்கள் மறைந்திருக்கின்றன. அந்த மாளிகையில் இருக்கும் சூனியக்காரி, ஏஞ்சல் சித்தி இத்னானி , டிராவிட் செல்வம். இந்த காதலை பாட்டி சூனியக்காரக் தேவதர்ஷினி எதிர்க்கிறார். அத்துடன் அம்மூவரையும் தனது மாயக் கோட்டைக்குள் அடைத்து வைக்கிறார் தேவதர்ஷினி. இதற்கிடையில் நகரில் மர்ம கொலைகள் நடக்கின்றன. அதை போலீஸ் துப்பறிய முயல்கிறது. சூனியக் கிழவியிடம் சிக்கிய நண்பர்கள் என்ன ஆனார்கள்?. நகரில் நடக்கும் கொலைகளுக்கு யார் காரணம் என்பதை பல திருபங்களுடன் படத்தின் மீதிகதை
நடிகர்கள்
கதையின் நாயகனாக டிராவிட் செல்வம் சிறப்பாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சித்தி இத்னானி ஏஞ்ஞலாக கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். மற்றொரு காதலியாக அஞ்சலி நாயர் நடிப்பும் அருமை.
போலீஸ் இன்ஸ்பெக்டராக சினிமாவாலா சதீஷ் சிறப்பாக நடித்துள்ளார். சூனியக்காரி கிழவியாக தேவதர்ஷினி நடிப்பில் மிரட்டியுள்ளார்.
குரேஷி, ஆர் ஜே தீபக், சசி செல்வராஜ் என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
ஹரி எஸ்.ஆரின் இசை ரசிக்கவைகாகிறது. ஜெயந்த் சேது மாதவனின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.
ட்ரோன்ஸ் படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவரும் பார்க்கும் படமாக ஹாரர், மாயாஜாலம், சயின்ஸ் பிக்சன் கலந்து நகைச்சுவையோடு எடுத்திருக்கிறார்கள் வழக்கமான பேய்க் கதைகளைப் பார்த்துச் சலித்தவர்களுக்கு, புதிய வகையான கற்பனை கதை அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பு கூட்டுகிறது நிச்சயம் அனைத்து தமிழ் ரசிகர்களின் மனதை தொடும். இயக்குநர் ராகவ் மிர்தாத். படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்.
குடும்பத்துடன் பார்க்கலாம்
ரேட்டிங் 4: ५










