Wednesday, June 24

“ரஜினிகாந்தின் தம்பியாக அறிமுகமாகி விஜயகாந்த்” நடித்த காட்சி மட்டும் சில நொடிகள் மட்டும் வந்து சென்றது.

1978 ஆம் ஆண்டு சினிமாவில் நடித்தாக வேண்டும் என்ற ஆர்வத்தை மட்டும் வைத்துக்கொண்டு விஜயராஜ் என்ற பெயருடன் தனது நெருங்கிய நண்பர்களுடன் சென்னைக்கு பயணம் ஆனார் அவருக்கு உற்ற துணையாய் இருந்த முக்கிய நண்பர்களில் இப்ராஹிம் ராவுத்தரும் ஒருவர்

அன்றைய சினிமாவில் நடிகராக வேண்டுமென்றால் நாடக நடிகராக இருக்க வேண்டும் அல்லது திரைப்படக் கல்லூரியில் படித்து முடித்து அனுபவங்களை பெற்றிருக்க வேண்டும்

இவை இரண்டும் கேப்டன் விஜயகாந்திடம் இல்லை நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் இருந்தது பல கம்பெனிகளில் வாய்ப்பு தேடிச் சென்றார் அனைவராலும் அவமானப்படுத்தப்பட்டார் ..மதுரை திரைப்பட விநியோகஸ்தர் திரு மர்சூக் என்பவரின் சிபாரிசுடன்

“என் கேள்விக்கு என்ன பதில்? என்ற ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த படத்தில் ரஜினிகாந்தின் தம்பியாக அறிமுகமாகி படப்பிடிப்பில் நடித்த விஜயகாந்த்  அவரின் நடிப்பிற்கு அனைவரின் கைதட்டல்கள் அதிகமாக கிடைத்தது அந்த படப்பிடிப்பில் இந்த படம் நிச்சயம் வெளியாகும் என்ற நம்பிக்கையுடன் இயக்குனர் மாதவனுக்கு நன்றி சொல்லிவிட்டு மதுரைக்கு சென்றார் கேப்டன் விஜயகாந்த் படம் மதுரையில் வெளியானது அதில் இவர் நடித்த காட்சிகள் எதுவுமே இல்லை ஒரே ஒரு ஷாட்டில் தொலைவாக அதாவது லாங் சாட்டில் ஸ்ரீ பிரியாவின் புடவையை இழுப்பது ஒரே காட்சி மட்டும் இருந்தது அதுவும் சில நொடிகள் மட்டும் வந்து சென்றது

மிகப்பெரிய அதிர்ச்சியை கேப்டனுக்கு அந்த காட்சி தந்தது மீண்டும் சென்னை வந்து அந்த திரைப்பட சகாக்களிடம் விசாரித்தார் நீ வளர்வதோ நீ நடிப்பதோ இங்கு யாருக்கும் பிடிக்கவில்லை அதனால் தான் அதை எடுத்து விட்டார்கள் என்று சொன்னதால் அன்றே வைராக்கியம் வைத்தார்

இந்த திரையுலகில் ஜெயித்தாக வேண்டும் என்று..அதன் பிறகு 1979 ஆம் ஆண்டு இனிக்கும் இளமை என்ற படத்தில் ஆன்ட்டி ஹீரோவாக அறிமுகம் அதில் அதிகமாக வில்லத்தனமான வேடமாக இருந்தது முதல் காட்சியில் பாக்சிங் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டது அறிமுகத்திலேயே சண்டைக் காட்சியில் அறிமுகமான ஒரே நடிகர் தமிழ் திரையுலகில் இவர் மட்டும்தான்…எப்படியோ சினிமாவில் நடித்தாகி விட்டது இனி பிரச்சனை இல்லை என்று கருதிய கேப்டனுக்கு தொடர்ச்சியாக சறுக்கல்கள் வந்தன எந்த பட வாய்ப்பும் கிடைக்கவில்லை அப்போது

வெற்றி இயக்குனர் கே விஜயன் (நமது சங்க உறுப்பினர் திரு சுந்தர் கே விஜயனின் தந்தை தான் இவர் ) தயாரித்து இயக்கிய தூரத்து இடி முழக்கம் திரைப்படத்தின் கதாநாயகராக வாய்ப்பு கிடைத்தது

இந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் துடுப்பை வீசி வில்லனைக் கொல்லும் காட்சியில் நிஜமான துடுப்பை தூக்கி வீசியதில் இவரின் கை மூட்டு விலகியது…கை மூட்டு விலகியதை இயக்குனரிடம் சொன்னால் வாய்ப்பு இல்லாமல் போய்விடும் என்று வலியை தாங்கிக் கொண்டு அவரே கையை சரி செய்து கொண்டு நடித்து முடித்தார் அந்த கை மூட்டு அவர் இறக்கும் வரை சரியாகவே இல்லை அதன் பிறகு பெரிய ஹீரோவாக வளர்ந்து சண்டைக் காட்சி களில் நடிக்கும் பொழுது அந்த கை மூட்டு இறங்கிவிடும் மீண்டும் அவரே தூக்கி வைத்து சரி செய்து விடுவார் இதை அனைத்து சண்டை பயிற்சி மாஸ்டர்களும் சொல்லி இருக்கிறார்கள் அன்பான உறுப்பினர்களே இன்று முதல் இந்த தொடர் தொடரும் புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் வாழ்க்கை வரலாறு உங்களுக்காக மீண்டும் இது நாளை தொடரும் அதன் பின்னாலும் தொடர்ந்து வரும் அவரின் அற்புதமான புகைப்படங்களுடன் என்பதை அன்புடன் சொல்லிக் கொண்டிருக்கிறேன்….

..தொடரும்…

விக்ராந்த் ( (இணைச் செயலாளர் : தமிழ்நாடு சின்னத்திரை இயக்குனர்கள் சங்கம் : .)+919444819196

Related posts: