Friday, July 31

News

கமல்ஹாசனின் குணா உலகம் முழுவதும் சூன் 21 வெளியாகிறது.

கமல்ஹாசனின் குணா உலகம் முழுவதும் சூன் 21 வெளியாகிறது.

News
கமல்ஹாசனின் குணா உலகம் முழுவதும் சூன் 21 வெளியாகிறது. சந்தான பாரதி இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு தீபாவளி அன்று வெளிவந்த படம் குணா. சுவாதி சித்ரா இண்டர்நேஷனல் தயாரிப்பில் உருவான இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் உலகம் முழுவதும் வெளியிட்டது. 33 வருடங்கள் கடந்த பின்னரும் கமல்ஹாசன் ரசிகர்கள் மட்டுமின்றி தலைமுறை கடந்து இன்றைய இளம் தலைமுறை குணா படத்தையும், அதில் இடம்பெற்றுள்ள வசனங்களையும், பாடல்களையும் நினைவூட்டி கொண்டாடி வருகின்றனர். இந்த வருடம் தொடக்கத்தில் மலையாள படமான மஞ்சு மெல் பாய்ஸ் திரைப்படம் தமிழ்நாட்டில் நகரம் முதல் குக்கிராமத்தில் உள்ள திரையரங்குகள் வரை திரையிடப்பட்டு வசூலை வாரிக்குவித்தது. மலையாள திரைப்படங்களில் 200 கோடி ரூபாய் மொத்த வசூலை கடந்த முதல் மலையாள திரைப்படம் என்கிற சாதனையை நிகழ்த்த அடிப்படை காரணிகளில் ஒன்றாக இருந்தது குணா திரைப்படத்தில் இடம்பெற்ற வசனம், பாடல்களை இப்...
மக்கள் நாயகன் ராமராஜனின் ஆலோசனைப்படி பெண்களுக்கு 50 சதவீத கட்டண சலுகையை அறிமுகப்படுத்திய ‘சாமானியன்’ தயாரிப்பாளர்*

மக்கள் நாயகன் ராமராஜனின் ஆலோசனைப்படி பெண்களுக்கு 50 சதவீத கட்டண சலுகையை அறிமுகப்படுத்திய ‘சாமானியன்’ தயாரிப்பாளர்*

News
*பத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 25வது நாளை நோக்கி வெற்றிநடை போடும் ‘சாமானியன்’* *மக்கள் நாயகன் ராமராஜனின் ஆலோசனைப்படி பெண்களுக்கு 50 சதவீத கட்டண சலுகையை அறிமுகப்படுத்திய ‘சாமானியன்’ தயாரிப்பாளர்* எண்பதுகளின் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் மக்கள் நாயகன் என செல்வாக்குடன் வலம் வந்தவர் நடிகர் ராமராஜன். தொடர்ந்து வெற்றி படங்களாகவே கொடுத்ததால் வெள்ளி விழா நாயகன் என்றும் அழைக்கப்பட்டவர். அப்படிப்பட்டவர் கிட்டத்தட்ட 14 வருட இடைவெளிக்கு பிறகு தற்போது சமீபத்தில் வெளியான ‘சாமானியன்’ படத்தின் மூலம் மீண்டும் தனது ரசிகர்களை சந்திக்க வந்துள்ளார். ‘சாமானியன்’ மூலமாக இவரை மீண்டும் அழைத்து வந்த பெருமையை எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் இந்தப்படத்தை தயாரித்துள்ள தயாரிப்பாளர் V.மதியழகனும் படத்தின் இயக்குநர் R. ராகேஷும் பெற்றுள்ளனர். அது மட்டுமல்ல ராமராஜனின் படங்களில் வெற்றிக்கு தூணாக இருந்...
அம்மாவின் ஆசையை நிறைவேற்ற தனது காதலிகள் இரண்டு பேரையும் நிராகரித்த நாயகன் உலகநாதன்

அம்மாவின் ஆசையை நிறைவேற்ற தனது காதலிகள் இரண்டு பேரையும் நிராகரித்த நாயகன் உலகநாதன்

News
அம்மாவின் ஆசையை நிறைவேற்ற தனது காதலிகள் இரண்டு பேரையும் நிராகரித்த நாயகன் உலகநாதன் ------------------=-------------------- ஆதி போட்டோஸ் நிறுவனம் சார்பில் ஏ.டி.ஆதிநாடார் தயாரிக்க விருது படத்தின் நாயகன் அட்சயன் ஹீரோவாக நடிக்க ஆ. ஆதவன் இயக்கியிருக்கும் படம் உலகநாதன்.இவரும் ஏற்கனவே விருதுப் படத்தை இயக்கியவர் ஆவார் .உலக நாதன் என்ற பெயரில் உருவாகி இருக்கும் இந்தப் படம் கிராமிய கதையமைப்போடு காதலும், மோதலும் கலந்த அம்மா - மகன் சென்டிமெண்ட் டோடு கூடிய கதை. இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் மதுரை, மற்றும் ராஜபாளையம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நடந்தது. நடிகர் கஞ்சா கருப்பு நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடத்தில் நடித்திருக்கிறார். ஹீரோ அட்சயனுக்கு ஜோடியாக யோக தர்ஷினி, கிரேட்டா என்று இரண்டு கதாநாயகிகள் நடித்திருக்கிறார்கள். ஹீரோவின் 'அம்மாவாக விஜய் டி.வி.புகழ் சசிகலா நடித்திருக்கி...
*கமல்ஹாசனுக்கு பிறகு புர்ஜ் கலீபாவில் இடம் பெற்ற விஜய் சேதுபதி*

*கமல்ஹாசனுக்கு பிறகு புர்ஜ் கலீபாவில் இடம் பெற்ற விஜய் சேதுபதி*

News
 *கமல்ஹாசனுக்கு பிறகு புர்ஜ் கலீபாவில் இடம் பெற்ற விஜய் சேதுபதி* மிக உயர கட்டிடமான புர்ஜ் கலீபாவில் முன்னோட்டம் வெளியான இரண்டாவது தமிழ் படம் 'மகாராஜா': மெர்லின் தலைமையிலான W.I.T ஈவன்ட்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக நடத்திய விழாவில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ் உள்ளிட்டோர் பங்கேற்பு* பெண்களால் பெண்களுக்காக அமீரகத்தில் உருவாக்கப்பட்ட அமைப்பான மெர்லின் தலைமையிலான W.I.T (Where in Tamilnadu) ஈவன்ட்ஸ் நிறுவனம் மார்ச் 2022 முதல் பல்வேறு நிகழ்சிகளை வெற்றிகரமாக ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது. பெண்களுக்கு தனிப்பட்ட முறையிலும் தொழில் ரீதியாகவும் அதிகாரம் அளிப்பதை நோக்கமாக கொண்ட இந்நிறுவனம், அமீரகத்தில் தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகளையும், திரைத்துறை புரோமஷனல் நிகழ்வுகளையும் சிறப்பாக நடத்தி முத்திரை பதித்து வருகிறது. தலைமை செயல் அதிகாரி மெர்லின் தலைமையில் இயங்கும் விட் ஈவன்ட்ஸ...
“லார்டு லபக்குதாஸ்” இந்த படத்தை ஜூலை 5- ஆம் தேதி YSY STUDIOS திரையரங்கில் வெளியிடுகிறார்கள்

“லார்டு லபக்குதாஸ்” இந்த படத்தை ஜூலை 5- ஆம் தேதி YSY STUDIOS திரையரங்கில் வெளியிடுகிறார்கள்

News
KV வாகை மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் லார்டு லபக்குதாஸ் என்னும் திரைப்படம் வெங்கட் புவன்.R இயக்கியுள்ளார். இவர் குருசோமசுந்தரம் நடித்த "பெல்" திரைபடத்தின் இயக்குனரும் ஆவார். மேலும் இந்த படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இசை பிருத்வி ஒளிப்பதிவு மணிராஜு இத்திரைப்படத்தில் அறிமுகமாக ஹீரோ திவான், ஹீரோயின் ராஷ்மி நடித்துள்ளனர்இந்த படம் "ஆள் இல்லாதவனுக்கு ஆண்டவே துணை" என்னும் வாசகத்தை மைய கருத்தாக கொண்டு எடுத்துள்ளனர்.இந்த படத்தை ஜூலை 5- ஆம் தேதி YSY STUDIOS திரையரங்கில் வெளியிடுகிறார்கள்....
பிதா திரைப்பட அறிவிப்பு விழா   !!

பிதா திரைப்பட அறிவிப்பு விழா   !!

News
பிதா திரைப்பட அறிவிப்பு விழா   !! SRINIK PRODUCTION சார்பில் தயாரிப்பாளர்கள் D பால சுப்பிரமணி & C சதீஷ் குமார் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திக் குமார் இயக்கத்தில், V மதி நடிகராக அறிமுகமாகும் திரைப்படம்  பிதா. மாறுபட்ட களத்தில் திரில்லர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் அறிவிப்பு நிகழ்ச்சி, படக்குழுவினருடன் திரைப் பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்... நடிகை லக்‌ஷ்மி  ‌ராமகிருஷ்ணன் பேசியதாவது... மொத்தக்குழுவிற்கும் என் வாழ்த்துக்கள். சினிமா ஒரு பவர் புல் மீடியா. ஒவ்வொரு வாய்ப்பும் மிக முக்கியமானது. அது முடிந்த பிறகு தான் இன்னும் நன்றாகச் செய்திருக்கலாம் எனத் தோன்றும்.  எனவே கிடைக்கும் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.  இந்தக்குழுவிடம் நிறைய உழைப்பு தெரிகிறது. மதி  நடிகராக அறிமுகமாகும் படம். டிரெய்ல...
ஆகாஷ் முரளிதரன் மாஸ்டர்செஃப் இந்தியா தமிழ் பதிப்பில் வெற்றிவாகை சூடியுள்ளார்

ஆகாஷ் முரளிதரன் மாஸ்டர்செஃப் இந்தியா தமிழ் பதிப்பில் வெற்றிவாகை சூடியுள்ளார்

News
சென்னையைச் சேர்ந்த ஆகாஷ் முரளிதரன் மாஸ்டர்செஃப் இந்தியா தமிழ் பதிப்பில் வெற்றிவாகை சூடியுள்ளார் மாஸ்டர்செஃப் இந்தியா தமிழ் என்ற மதிப்புமிக்க பட்டத்தை வெல்வதற்கான பரபரப்பான பயணம் ஜூன் 7, 2024 அன்று பரபரப்பான இறுதிப்போட்டியில் முடிவடைந்தது. அற்புதமான சமையல் சவால்கள் மற்றும் சுவையான உணவுகள் நிறைந்த ஒரு சீசனுக்குப் பிறகு, சென்னையைச் சேர்ந்த ஆகாஷ் முரளிதரன் இந்த சீசனின் ஃபைனலில் மாஸ்டர் செஃப் பட்டத்தை வென்றார். போட்டி கடுமையாக இருந்தது, திறமையான ஹோம் குக்குகளான ஜரீனா பானு, வாணி சுந்தர் மற்றும் பவித்ரா நளின் ஆகியோர் முதல் நான்கு இடங்களுக்குள் வந்தனர். ஆகாஷ், மறந்துபோன காய்கறிகளை தனது சமையல் குறிப்புகளில் இணைத்து மீண்டும் அறிமுகம் செய்ததற்காக கொண்டாடப்பட்டு அவரது அர்ப்பணிப்புக்காக புகழ்பெற்றார், சோனி LIV இல் நடந்த முதல் டிஜிட்டல் பிரத்தியேக சீசனில் தனது மாஸ்டர்செஃப் இந்தியா தமிழ் கனவை நனவாக்கி...
நடிகருமான உமாபதி ராமையா நாயகனாக நடித்துள்ள “பித்தல மாத்தி” திரைப்படம் ஜூன் 14ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது

நடிகருமான உமாபதி ராமையா நாயகனாக நடித்துள்ள “பித்தல மாத்தி” திரைப்படம் ஜூன் 14ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது

News
ஸ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் தயாரிப்பில் தம்பி ராமையாவின் மகனும் நடிகருமான உமாபதி ராமையா நாயகனாக நடித்துள்ள "பித்தல மாத்தி" திரைப்படம் ஜூன் 14ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த திரைப்படத்தில் உமாபதி ராமையா மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார். மேலும் இப்படம் காமெடி கலந்த காதல் திரைப்படமாக சிறப்பாக தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் பால சரவணன், தம்பி ராமையா, வித்யூலேகா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இயக்குநர் மாணிக வித்யா அவர்களுக்கு இப்படம் ஒரு மைல் கல்லாக அமையும். ஸ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் சார்பில் சரவணன் இப்படத்தை தயாரித்துள்ளார். இந்த கால காதலை மையப்படுத்தி சிறந்த பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ள இப்படம் ஜூன் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது....
“வெள்ளிவிழா” நாயகன் மோகனின் “ஹரா” மூலம் சினிமாவில் அறிமுகம் ஆகும் சந்தோஷ் பிரபாகர் நடித்திருக்கிறார்.

“வெள்ளிவிழா” நாயகன் மோகனின் “ஹரா” மூலம் சினிமாவில் அறிமுகம் ஆகும் சந்தோஷ் பிரபாகர் நடித்திருக்கிறார்.

News
”வெள்ளிவிழா” நாயகன் மோகனின் “ஹரா” மூலம் சினிமாவில் அறிமுகம் ஆகும் பத்திரிகையாளர் மகன்! அதி வேகமான இயந்திர வாழ்க்கையில் சிக்கி பல வித போதைக்கு அடிமையாகி பாதை மாறி செல்லும் இளைஞர்களுக்கு மத்தியில் வெகு சிலரே தங்களின் கனவுகளை நிஜமாக்க ஓடுகிறார்கள். அப்படி காண்கிற கனவுகளில் பிரதானமானது சினிமாவில் நடிகராவது… ஆனால் நிஜத்தில் சினிமாவை எட்டி பிடிப்பது அவ்வளவு எளிதல்ல அதற்கு பல காரணங்கள் உண்டு. திரையுலகில் நுழைவதற்கு கண்டிப்பாக சிபாரிசு, வாரிசு என பல சூழல்களில் பலர் நேபோட்டிசம் அடிப்படையில் ஹீரோவாகவும், இயக்குனராகவும் களத்தில் இறங்கி தோல்வி கண்டு காணாமல் போகும் காலத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து கல்லூரி படிப்பை முடித்து ஒருவன் சினிமாவை அடைகிறான் என்றால் அவனுக்கு இந்த சினிமா ஏதோ ஒரு இடத்தை வழங்க காத்திருக்கிறது என்றுதான் அர்த்தம். அதிலும் முதல் படத்திலேயே வெள்ளிவிழா நாயகன் மோகன் நடிக...
பிரபல பாடலாசிரியர் சினேகன் வெளியிட்ட ” P2 ” இருவர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.

பிரபல பாடலாசிரியர் சினேகன் வெளியிட்ட ” P2 ” இருவர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.

News
பிரபல பாடலாசிரியர் சினேகன் வெளியிட்ட " P2 " இருவர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர். அறம் புரொடக்ஷன் என்ற பட நிறுவனம் சார்பில் P.ராமலிங்கம் தயாரிக்க, கதை, திரைக்கதை, வசனம் எழுதி சிவம் இயக்கியுள்ள படம் " P- 2 " இருவர் " கன்னடம், தெலுங்கு உட்பட 10 கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள மனோஜ் தமிழில் அறிமுகமாகிறார். சித்து கதாநாயகியாக அறிமுகமாகிறார். மற்றும் இளவரசு, ராஜசிம்மன், சம்பத்ராம், தீபா, ராட்சசன் யாசர், சித்தா தர்சன், அஜெய், ரமேஷ், சந்தோஷ் மற்றும் மஸ்காரா அஸ்மிதா ஆகியோர் நடித்துள்ளனார். தேனிசை தென்றல் தேவா இசையமைக்க, ஒளிப்பதிவை S. R. வெற்றி செய்துள்ளார். பாடல்கள் - சினேகன் எடிட்டிங் - மாதவன் ஸ்டண்ட் - ஓம் பிரகாஷ் நடனம் - ராதிகா, ஜானி மக்கள் தொடர்பு - மணவை புவன் படு பயங்கரமான ஹாரர் மற்றும் திரில்லருடன் விரைவில் வெளியாகவுள்ள இந்த இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ...