Sunday, August 2

News

விஜய் சேதுபதி வெளியிட்ட “திரைவி” படத்தின் டீசர்

விஜய் சேதுபதி வெளியிட்ட “திரைவி” படத்தின் டீசர்

News
விஜய் சேதுபதி வெளியிட்ட "திரைவி" படத்தின் டீசர் --------------------------------------------- நித்தி கிரியேட்டர்ஸ் சார்பில் கார்த்தி தட்சிணாமூர்த்தி இயக்கத்தில் பி.ராஜசேகரன் தயாரிப்பில் முருகானந்தம் இணைத் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் திரைவி. இப்படத்தின் டீசரை விஜய் சேதுபதி வெளியிட்டார் உலகில் நல்லவர்கள் யாரும் கிடையாது அதேபோல் கெட்டவர்கள் என்று யாரும் கிடையாது. சூழ்நிலைதான் அவரவரை அடையாளப்படுத்துகிறது எனும் மையக்கருத்தை வலியுறுத்தும் விதமாக உருவாகியுள்ள படம் திரைவி. ஒளிப்பதிவு - ஆர்.அதிசயராஜ் இசை -என்.டி.ஆர் பாடல்கள் -அருண்பாரதி வெ.மதன்குமார் எடிட்டிங் -ஆர்.வசந்தகுமார் நடனம் -எஸ்.எல்.பாலாஜி தயாரிப்பு மேற்பார்வை - எஸ்.எம்.ராஜ்குமார் மக்கள் தொடர்பு - வெங்கட் இணைத் தயாரிப்பு -முருகானந்தம் தயாரிப்பு -பி.ராஜசேகரன் கதை திரைக்கதை வசனம் இயக்கம் - கார்த்தி தட்...
கீர்த்தி சுரேஷின் அசத்தலான நடிப்பில், ZEE5 இல் ‘ரகுதாத்தா’ திரைப்படம்

கீர்த்தி சுரேஷின் அசத்தலான நடிப்பில், ZEE5 இல் ‘ரகுதாத்தா’ திரைப்படம்

News
*கீர்த்தி சுரேஷின் அசத்தலான நடிப்பில், ZEE5 இல் ‘ரகுதாத்தா’ திரைப்படம், 50 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை !* *ZEE5 இல் வெளியான வேகத்தில், “ரகுதாத்தா” திரைப்படம், 50 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை !* இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாக, ரசிகர்களால் கொண்டாடப்படும் Zee5 தளத்தில், சமீபத்தில் வெளியான ‘ரகு தாத்தா’ திரைப்படம், வெளியான வேகத்தில், 50 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து , சாதனை படைத்துள்ளது. ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில், சுமன் குமார் இயக்கத்தில், தேசிய விருது நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில், வெளியான ‘ரகுதாத்தா’ திரைப்படம், இந்தி திணிப்பு மற்றும் ஆணாதிக்கத்தைப் பற்றி அழுத்தமாகப் பேசுகிறது. சமூகப் பிரச்சினைகளின் வேரை ஆராயும் கதைக்களத்தில், மெலிதான நகைச்சுவையுடனும் அழுத்தமான திரைக்கதையுடனும், ஒரு புரட்சிகரமான பெண்ணின் பயணத்தைச் சொல்கிறது ‘ரகுதாத்தா’...
இயக்குநர் சங்கத்திற்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வருடம்10லட்சம் நிதி உதவி!

இயக்குநர் சங்கத்திற்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வருடம்10லட்சம் நிதி உதவி!

News
இயக்குநர் சங்கத்திற்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வருடம்10லட்சம் நிதி உதவி : இயக்குநர்கள் ,உதவி இயக்குநர்களின் வாரிசுகளுக்கு இயக்குநர் திருமதி.ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்கள் வருடாவருடம் ரூ.10 லட்சம் கல்வி உதவி வழங்குவதாக உறுதி அளித்து முதற்கட்டமாக 2024 ஆம் ஆண்டிற்கு நேற்று 13.09.2024 ரூ.5 லட்சம்  சங்கத் தலைவர் ஆர். வி. உதயகுமாரிடம் வழங்க செயலாளர் பேரரசு , பொருளாளர் சரண் , பெப்ஸி தலைவர் ஆர்.கே. செல்வமணி ஆகியோர் இணைந்து பெற்றுக்கொண்டனர்.நிர்வாகிகள் இயக்குனர்கள் எழில், சி. ரங்கநாதன், மித்ரன் ஜவகர், எஸ்.ஆர்.பிரபாகரன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஐஸ்வர்யாவிற்கு நன்றி தெரிவித்தனர்....
ஏகன் மற்றும் யோகிபாபு நடிக்கும் ‘கோழிப்பண்ணை செல்லத்துரை’ இசை வெளியீட்டு விழா*

ஏகன் மற்றும் யோகிபாபு நடிக்கும் ‘கோழிப்பண்ணை செல்லத்துரை’ இசை வெளியீட்டு விழா*

News
  https://youtu.be/oX80sY2zDOI?si=S_is64clug9GTVMh நடிகர் ஏகன் மற்றும் யோகிபாபு நடிக்கும் 'கோழிப்பண்ணை செல்லத்துரை' இசை வெளியீட்டு விழா* விஷன் சினிமா ஹவுஸ் பட நிறுவனம் சார்பில் டாக்டர் பி அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து தயாரிப்பில் தேசிய விருது பெற்ற படைப்பாளி சீனு ராமசாமி இயக்கத்தில் அறிமுக நாயகன் ஏகன் நடித்திருக்கும் 'கோழிப்பண்ணை செல்லத்துரை' திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. https://youtu.be/s0yumXsHsYo?si=k-s1k7mIRmX_ZN80   சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகி, இருபதாம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'கோழிப்பண்ணை செல்லத்துரை' படத்தில் ஏகன், யோகி பாபு, பிரிகிடா, சத்ய தேவி, பவா செல்லத்துரை, லியோ சிவகுமார், 'குட்டி புலி' தினேஷ் , மானஸ்வி கொட்டாச்சி, ரியாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அசோக் ராஜ் ஒளிப்பதிவு...
“கடைசி உலகப்போர்” திரைப்பட   முன் வெளியீட்டு நிகழ்ச்சி!!*

“கடைசி உலகப்போர்” திரைப்பட   முன் வெளியீட்டு நிகழ்ச்சி!!*

News
https://youtu.be/I9UtPdXiguY?si=Ox9RKILflYDDADO6 “கடைசி உலகப்போர்” திரைப்பட   முன் வெளியீட்டு நிகழ்ச்சி!!* ஹிப்ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட் சார்பில், ஹிப்ஹாப் தமிழா ஆதி எழுதி, தயாரித்து, இயக்கி இசையமைத்திருக்கும் புதிய திரைப்படம் "கடைசி உலகப்போர்".  மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பாக உருவாகியுள்ளது இப்படம். https://youtu.be/x2Vgzg1qI3s?si=1cb9JXLwCYe3ZvCG   ராப் பாடகராக அறிமுகமாகி மக்கள் மனதில் இடம்பிடித்து, இசையமைப்பாளராக, நடிகராக, இயக்குநராகப் புகழ் பெற்றிருக்கும் ஹிப் ஹாப் தமிழா ஆதி இப்படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார். இப்படம் வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. ...
PVR Inox Pictures வெளியிடும் விஜய் சத்யா நடிக்கும் ” தில்ராஜா “

PVR Inox Pictures வெளியிடும் விஜய் சத்யா நடிக்கும் ” தில்ராஜா “

News
PVR Inox Pictures வெளியிடும் விஜய் சத்யா நடிக்கும் " தில்ராஜா " ரஜினி ரசிகராக விஜய் சத்யா நடிக்கும் ஆக்ஷன் ,செண்டிமென்ட் கலந்த திரில்லர் படம்  " தில்ராஜா " விஜய் சத்யா நடிக்கும் " தில்ராஜா " படத்தை PVR Inox Pictures இம்மாதம் வெளியிடுகிறது. கோல்டன் ஈகிள் ஸ்டுடியோஸ் (Golden eagle studio ) என்ற பட நிறுவனம் சார்பில் கோவை பாலா பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் படத்திற்கு " தில் ராஜா " என்று பெயரிட்டுள்ளார். சாக்லேட், பகவதி, ஏய், வாத்தியார், மாஞ்சா வேலு, மலை மலை, கில்லாடி போன்ற வெற்றிப்  படங்களை இயக்கிய A.வெங்கடேஷ் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். விஜய் சத்யா  கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்திற்காக நாயகன்  விஜய் சத்யா சிக்ஸ் பேக்  உடற்கட்டை உருவாக்கி நடித்திருக்கிறார். கதாநாயகியாக ஷெரின் நடித்துள்ளார். மற்றும் வனிதா விஜயகுமார், இமான் அண்ணாச்சி, சம்யுக்தா, கராத்தே ராஜா, விஜய் டி...
ரஜினிகாந்த் நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் முதல் பாடல் “மனசிலாயோ”  வெளியானது!*

ரஜினிகாந்த் நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் முதல் பாடல் “மனசிலாயோ”  வெளியானது!*

News
*'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் நடிக்கும் 'வேட்டையன்' படத்தின் முதல் பாடல் "மனசிலாயோ"  வெளியானது!* லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளியாகவிருக்கும் தமிழ்த் திரைப்படமான 'வேட்டையன்' படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முதல் பாடலானது வெளியாகியுள்ளது, மேலும் இது ரசிகர்கள் மற்றும் இசை ஆர்வலர்களிடையே உற்சாகத்தை அதிகரித்துள்ளது. "மனசிலாயோ" என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் பாடல், ஆற்றல்மிக்க தாளங்கள் மற்றும் ஆத்மார்த்தமான மெல்லிசைகளின்  கலவையாக மட்டுமல்லாமல், இது படத்தின் கருப்பொருள்களான வலிமை, உறுதிநிலை மற்றும் அதிரடியான காட்சிகள் ஆகியவற்றின் சாரத்தை முழுமையாகப் படம் பிடிக்கிறது. சமகால மற்றும் பாரம்பரிய தமிழ் மற்றும் மலையாள இசையில் வேரூன்றிய ஒரு இசையமைப்பை உருவாக்கியுள்ளார் இசையமைப்பாளர் அனிருத், மேலும் இது இளைய தலைமுறை மற்றும் பாரம்பரிய இசை பிரியர்களுக்கு ஒரு விருந்தாக அமைகிறது. இந்தப் பாட...
20ந்தேதி வெளியாகும் ‘லப்பர் பந்து’ குறித்து சிலாகிக்கும் ஹரிஷ் கல்யாண்*

20ந்தேதி வெளியாகும் ‘லப்பர் பந்து’ குறித்து சிலாகிக்கும் ஹரிஷ் கல்யாண்*

News
*பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் இம்மாதம் 20ந்தேதி வெளியாகும் ‘லப்பர் பந்து’ குறித்து சிலாகிக்கும் ஹரிஷ் கல்யாண்* சினிமாவில் நாளுக்கு நாள் எத்தனையோ பேர் ஹீரோவாக அறிமுகமாகிறார்கள்.. ஆனால் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி, சரியான பாதையைத் தேர்ந்தெடுத்து அதில் பயணித்து தங்களுக்கென ஒரு நிலையான இடத்தை உருவாக்கிக் கொள்பவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். அந்த வெகு சிலரில் ஒருவர் நடிகர் ஹரிஷ் கல்யாண்.. கடந்த சில வருடங்களில் அவர் நடித்த படங்களின் கதைத் தேர்வு, நாளுக்கு நாள் மெருகேறும் அவரது நடிப்பு ஆகியவற்றைக் கவனித்துப் பார்த்தால் சினிமாவை அவர் எவ்வளவு கவனமாக அணுகுகிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். குறிப்பாக 'பார்க்கிங்' படத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் ஹரிஷ் கல்யாண்.. மீண்டும் அப்படி ஒரு அசத்தலான கதையம்சத்துடன் தற்போது உருவாகியுள்ள ‘லப்பர் பந்து’ படத்தில் இது...
“லக்கிமேன்’ இயக்குநர்-நடிகர் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் விஜய் டிவி பிரபலம் குமரன் தங்கராஜன்  நாயகனாக அறிமுகமாகும் புதிய படம்*

“லக்கிமேன்’ இயக்குநர்-நடிகர் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் விஜய் டிவி பிரபலம் குமரன் தங்கராஜன் நாயகனாக அறிமுகமாகும் புதிய படம்*

News
*'யாத்திசை' தயாரிப்பாளர் வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் கே ஜெ கணேஷ் தயாரிப்பில் 'லக்கிமேன்' இயக்குநர்-நடிகர் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் விஜய் டிவி பிரபலம் குமரன் தங்கராஜன் வெள்ளித்திரை நாயகனாக அறிமுகமாகும் புதிய படம்* கடந்த ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் OTT மற்றும் திரையரங்குகளில் வெற்றி பெற்ற திரைப்படங்கள் 'யாத்திசை' மற்றும் யோகி பாபு நடித்த 'லக்கிமேன்' ஆகும். பண்டைய தமிழர்களின் பெருமையை பண்பாடு மாறாமல் சொன்ன 'யாத்திசை' படத்தின் தயாரிப்பாளர் வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் கே ஜெ கணேஷும், நல்லதொரு கருத்தை நகைச்சுவையோடு படைத்த 'லக்கிமேன்' படத்தின் இயக்குநர் பாலாஜி வேணுகோபாலும் புதிய திரைப்படத்திற்காக இணைந்துள்ளனர். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் விஜய் டிவி மற்றும் அமேசான் பிரைம் வெப்செரிஸ் 'வதந்தி' மூலம் புகழ் பெற்ற குமரன் தங்கராஜன் வெள்ளித்திரை நாயகனாக அறிமுகம் ஆகிறார்....
எங்க அப்பா” மியூசிக்கல் ஆல்பம் செப்டம்பர் 18’ம் தேதி வெளியாகிறது!

எங்க அப்பா” மியூசிக்கல் ஆல்பம் செப்டம்பர் 18’ம் தேதி வெளியாகிறது!

News
திரை நட்சத்திரங்களின் பாராட்டு மழையில், குழந்தை நட்சத்திரம் லக்‌ஷனா ரிஷி! அப்பா மீடியா தயாரித்துள்ள "எங்க அப்பா" மியூசிக்கல் ஆல்பம் செப்டம்பர் 18'ம் தேதி வெளியாகிறது! இதில் ஐந்து வயது குழந்தை லக்‌ஷனா ரிஷி கதையின் நாயகியாக நடித்துள்ளார். தனது தந்தையை இறைவனாக நினைத்து, குழந்தை பாடும் பாடல் இதில் ஹை லைட். பிரபல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் சிலருக்கு 'எங்க அப்பா' ஆல்பம் ஸ்பெஷலாக திரையிடப்பட்டது. பார்த்த பிரபலங்கள் குழந்தை நட்சத்திரம் லக்‌ஷனா ரிஷியை 'வருங்கால கதாநாயகி' என பாராட்டி, வாழ்த்தினார்கள்! எழுத்து, இயக்கம் டாக்டர் எஸ்.வி.ரிஷி, ஒளிப்பதிவு ரெஜி மற்றும் கணேஷ், இசை சந்தோஷ் சாய், எடிட்டிங் பிரகாஷ் மப்பு, விஜய் டிவி சூப்பர் சிங்கர் பிரியங்கா பாடியுள்ளார். மக்கள் தொடர்பு கோவிந்தராஜ், தயாரிப்பு அனீஷா சதீஷ்! கேரளா மற்றும் தமிழகத்தின் கண்கவரும் அழகிய காட்சிகளோடு, "எங்க அப்பா"...