12-வது வீதி விருது விழா நலிவுற்ற 100 கலைஞர்களுக்கு ஒவ்வொருவருக்கும் ரூபாய் பத்தாயிரம் பணமுடிப்பு வழங்கப்பட்டது.
* வேலம்மாள் பள்ளியில் நடைபெற்ற 12-வது வீதி விருது விழாவின் பரிசளிப்பு விழா, 2025
வேலம்மாள் நெக்சஸ் மற்றும் மாற்று ஊடக மையம் இணைந்து 12-வது வீதி விருதுவிழா நிகழ்வை 2025, ஜனவரி 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் பெருமையுடன் நடத்தியது.
ஜனவரி 5 , தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் வருகை தந்திருந்த
பொருளாதார நலிவுற்ற சுமார் 7000 நாட்டுப்புறக் கலைஞர்கள் பங்கு பெற்ற மாபெரும் பேரணி நடைபெற்றது.
பேரணியை
திருமிகு. ச. அண்ணாதுரை ஐஏஎஸ் அவர்களும்
வேலம்மாள் நெக்சஸ் குழுமத்தின் தாளாளர் திருமிகு. எம்.வீ.எம். வேல்மோகன் அவர்களும்
தொடக்கி வைத்தனர்.
கலைஞர்களின் பேரணி
சென்னை, முகப்பேர் மேற்குப் பகுதியில் உள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் தொடங்கி
முகப்பேர் கிழக்குப் பகுதியில் உள்ள வேலம்மாள் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி வரைக்கும் இருந்தது.
சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பொதுமக்க...
