வெட்டு குத்துச் சண்டைக் காட்சிகளே இல்லாத ஒரு வித்தியாசமான கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ள படம் “தாவுத்”.
TURM புரொடக்ஷன் ஹவுஸ் என்ற பட நிறுவனம் சார்பில்
S.உமா மகேஸ்வரி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரசாந்த் ராமன் இயக்கத்தில், லிங்கா, சாரா ஆச்சர் நடிப்பில், அடிதடி வெட்டு குத்துச் சண்டைக் காட்சிகளே இல்லாத ஒரு வித்தியாசமான கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ள படம் “தாவுத்”.
இம்மாதம் 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின், இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
இந்நிகழ்வினில்
நடிகர் ராதாரவி பேசியதாவது…
“சமீபமாக எனக்கு உடல் நிலை சரியில்லை. மன்னித்துக்கொள்ளுங்கள். சினிமாக்காரன் எப்போதும் தூங்கும் போது கூட காலை ஆட்டிக்கொண்டு தூங்க வேண்டும், இல்லையெனில் வேறு ஆளை போட்டு விடுவார்கள். இந்தப்படத்தில் இரண்டு நாள்கள் தான் வேலை பார்த்தேன். தம்பிதுரை தான் தயாரிப்பாளர் ஆனால் அவர் பெயர் வரவில்லையே எனப் பார்த்தேன், ஆனால் படத்தில் கதாப்பாத்திரத்திற்கு அந்தப்பெயர் வைத்து விட்டார். வாழ்த்துக...
