ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கமல்ஹாசன் பெருமையுடன் வழங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் “தர்மன்”
ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்
கமல்ஹாசன்
பெருமையுடன் வழங்கும்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும்
"தர்மன்"
இயக்கம்: அஸ்வத் மாரிமுத்து
இசை: அனிருத் ரவிச்சந்தர்
சண்டைப் பயிற்சி: அன்பரிவ்
தயாரிப்பு: கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன்
ஜூன் 24, 2026
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய திரைப்படம் ‘தர்மன்’ படப்பிடிப்பு இன்று தொடங்கியது. படத்தின் தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது.
கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருவருமே கடந்த ஐம்பதாண்டுகளுக்கும் மேல் இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாகத் திகழ்பவர்கள். இந்த இருபெரும் நாயகர்களுக்கு இடையேயான நட்பு அரிதானது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் பிரியமும் மரியாதையும் அபூர்வமானது. கமல்ஹாசன் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாந...
