*பெண்களும் ரசிக்கும்படியான, உணர்வுபூர்வ., யூகிக்க முடியாத க்ரைம் திரில்லர் திரைப்படம் ‘இந்திரா’ !!
*பெண்களும் ரசிக்கும்படியான, உணர்வுபூர்வ., யூகிக்க முடியாத க்ரைம் திரில்லர் திரைப்படம் ‘இந்திரா’ !!
உள்ளூர் சினிமாவில் தொடங்கி, உலகளவிலான சினிமா வரை வெகுஜன மக்களை ஈர்க்கும் மிக முக்கியமான ஜானர் ., திரில்லர் மற்றும் திகில் மட்டுமே. இவை இரண்டிலுமே வழக்கமான கதை மற்றும் காட்சியமைப்புகளை கையாண்டாலும், அவற்றை மிக ஆர்வத்துடன் பார்க்கும் பார்வையாளர்கள், அவற்றில் புதிய உத்தியை பயன்படுத்தி, கதை சொல்லல் மற்றும் காட்சியமைப்புகளில் வித்தியாசத்தை வெளிப்படுத்தினால், அத்தகைய படங்களை கொண்டாட தவறியதில்லை. அந்த வகையிலான ரசிக பெருமக்கள் கொண்டாடும் வரிசையிலான ஒரு படமாக பார்வையாளர்களை கவர்ந்திருக்கிறது ‘இந்திரா’.
’இந்திரா’ என்ற தலைப்பும், அதில் நாயகனாக நடித்திருக்கும் வசந்த் ரவியும் தான், இப்படத்தின் முதல் வெகுஜன ஈர்ப்பாளர்கள். காரணம், 2017 ஆம் ஆண்டு வெளியான ‘தரமணி’ படம் மூலம் நாயகனாக அறிமுகமான வசந்த் ரவி,...
