“முதல் காதல் மரியாதை”
முதல் காதல் மரியாதை
----------------------------------------------
எல்லோருக்கும் முதல் காதல் வருவது உண்டு. அதை நாம் காதலிக்கும் பெண்ணிடம் கூற தைரியம் வருவதில்லை. அப்படி காதலிக்கும் பெண்ணை கடைசிவரை காதலித்து கைப்பிடிப்போமா என்றும் தெரியவில்லை. காதலித்த பெண்ணை நாம் திருமணம் செய்து கொண்டால் அதைவிட அதிர்ஷ்டம் வேறு இல்லை தான். காதலித்த பெண்ணிற்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்ய அவரின் தாயார் ஏற்பாடு செய்து விடுகிறார் இதை அறிந்த நாயகன் திருமண மண்டபத்திற்கு சென்று அங்கே புது மாப்பிள்ளை தாலியை கட்ட முற்படும்பொழுது அங்கிருந்து நாயகன் திரும்பி விடுகிறான். பின் நாயகன் துவண்டு விடாமல் தன் வாழ்க்கையின் லட்சியத்தை நோக்கி பயணிக்கிறான். கடைசியில் தன் காதலியை கரம் பிடித்தானா ? இல்லை லட்சியத்தை அடைந்தானா ? என்பதை திரைப்படத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும் என்று படத்தின் இயக்குனர் நரேஷ் சிவன் தெரிவித்தார்.
...
