மாஸ்டர்செஃப் இந்தியா தமிழ் மற்றும் தெலுகு சமையல் அறைகளுக்கு விஜயம் செய்த பிரபல செஃப் அனஹிதா தோண்டி
சிறுதானியங்களிலிருந்து பிரெஞ்சு சமையல் உத்திகள் வரை: மாஸ்டர்செஃப் இந்தியா தமிழ் மற்றும் தெலுகு நிகழ்ச்சியின் இல்ல சமையல் கலைஞர்களுக்கு சவால் வைக்கும் செஃப் அனஹிதா தோண்டி
அல்லது
மாஸ்டர்செஃப் இந்தியா தமிழ் மற்றும் தெலுகு சமையல் அறைகளுக்கு விஜயம் செய்த பிரபல செஃப் அனஹிதா தோண்டி
ஒவ்வொரு நாளும் கடந்து செல்லச்செல்ல மாஸ்டர்செஃப் இந்தியா தமிழ் மற்றும் தெலுகு சமையல் அறையில் போட்டி நிலவும் கடுமையாக அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்த வாரம், இந்த இரு பிரபல ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்கும் இல்ல சமையல் கலைஞர்களுக்கு புதிய சவால்களை செஃப் அனஹிதா தோண்டி முன்வைத்தார். ஒரு செஃப் மற்றும் கேட்டரிங் தொழில்முனைவோரான அவரது அம்மாவிடமிருந்து உத்வேகம் பெற்ற செஃப் அனஹிதாவுக்கு தான் எதிர்காலத்தில் சமையலில் நிபுணத்துவம் பெற்ற ஒரு செஃப்-ஆக ஆவது நிச்சயம் என்று இளவயதிலேயே தெரியும். இலண்டனின் லீ கார்டன் புளு என்ற சமையல...

