மனதை வருடும் காதல் கதையாக உருவாகியுள்ள “ஏன் என்னை ஏதோ செய்தாய்” – டீசர் வெளியானது !
மனதை வருடும் காதல் கதையாக உருவாகியுள்ள “ஏன் என்னை ஏதோ செய்தாய்” – டீசர் வெளியானது !
டி ஆண்டனி எழுதி, இயக்கி, தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ள “ஏன் என்னை ஏதோ செய்தாய்” திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இன்டென்ஸ் ரொமான்டிக் டிராமா பாணியில் உருவாகியுள்ள இப்படம், உணர்வுகளும் காதலும் கலந்த மனதை வருடும் படைப்பாக உருவாகியுள்ளது.
ஒளியும் ஒலியும் இணைந்து சொல்லப்படும் எபிக் காதல் கதையாக உருவாகியுள்ள இந்தப் படம், பழைய காதல் கதைகளின் அழகை தக்கவைத்துக் கொண்டே, இன்றைய ஜென்-ஜி மற்றும் மில்லேனியல் ரசிகர்களை கவரும் வகையில் நவீன திரைக்கதையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தாயை இழந்து சிறுவயதிலிருந்தே தனிமையில் வளர்ந்த ஒரு இளைஞன், மதுவுக்கு அடிமையாக இருளில் வாழ்ந்து கொண்டிருக்கும் சூழலில், ஒரு காதல் அவனது வாழ்க்கையில் நுழைகிறது. அந்த காதல் அவனை எப்படி முழுமையாக மா...
