*”காளிதாஸ் ஜெயராமுடன் மீண்டும் நடிக்க வேண்டும் என்றால் கொஞ்சம் யோசிக்க வேண்டும்” – அர்ஜூன் தாஸ்*
*போர் திரைப்பட டிரைலர் வெளியீட்டு விழா*
*”காளிதாஸ் ஜெயராமுடன் மீண்டும் நடிக்க வேண்டும் என்றால் கொஞ்சம் யோசிக்க வேண்டும்” – அர்ஜூன் தாஸ்*
*”நான் விடாப்பிடியாக சண்டை போட்டு கதாபாத்திரத்தில் பிடிவாதமாக இருந்தேன்” – சஞ்சனா நடராஜன்*
*”எல்லோரும் அர்ஜூன் தாஸின் குரலைப் பற்றி மட்டுமே பேசுகிறார்கள். அவரின் நடிப்பைப் பற்றி யாரும் பேசுவதில்லை.” – சஞ்சனா நடராஜன்*
*”சூட்டிங்கை நிறுத்திவிடுவோம் என்று சொல்லியும் அர்ஜூன் தாஸ் கேட்கவில்லை” – இயக்குநர் பிஜோய் நம்பியார்*
*”போர் என்கின்ற தலைப்பிற்குப் பொன்னியின் செல்வன் தான் காரணம்” – பிஜோய் நம்பியார்*
சைத்தான், டேவிட், வாஷிர், ஷோலோ படங்களை இயக்கிய பிஜோய் நம்பியார் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் இருவரும் நாயகர்களாக நடித்திருக்கும் திரைப்படம் “போர்”. டி.ஜே.பானு, சஞ்சனா நடராஜன், மெர்வின் ரொஸாரியோ மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் ந...
