இந்தியாவின் முதல் ஏ.ஐ. ஒருங்கிணைந்த செங்குத்து பல்கலைக்கழகமான வேல்ஸ் திருவான்மியூர் வளாகத்தை ஸ்ரீதர் வேம்பு திறந்து வைத்தார்*
*இந்தியாவின் முதல் ஏ.ஐ. ஒருங்கிணைந்த செங்குத்து பல்கலைக்கழகமான வேல்ஸ் திருவான்மியூர் வளாகத்தை ஸ்ரீதர் வேம்பு திறந்து வைத்தார்*
சென்னை, ஜூலை 11, 2026: வேல்ஸ் பல்கலைக்கழகம், திருவான்மியூரில் இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) ஒருங்கிணைந்த செங்குத்து பல்கலைக்கழக வளாகத்தை திறந்து வைத்து, உயர்கல்வித் துறையில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
இவ்வளாகத்தை Zoho நிறுவனத்தின் இணை நிறுவுநரும் தலைமை விஞ்ஞானியுமான பத்மஸ்ரீ ஸ்ரீதர் வேம்பு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்தார். இந்நிகழ்வில் ஐக்கிய அரபு அமீரகத்தின் கூட்டாட்சி தேசிய கவுன்சில் உறுப்பினரும், எமிரேட்ஸ் ஏர்லைன் ஃபவுண்டேஷன் இயக்குநர் குழு உறுப்பினருமான மேதகு அஹ்மத் மீர் ஹாஷிம் அஹ்மத் கூரி கவுரவ விருந்தினராக கலந்து கொண்டார். மேலும், துபாயைச் சேர்ந்த Economic Group Holdings LLC நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. எம். எப்....
