“ஆரகன் “திரைப்பட விமர்சனம்.
ட்ரென்டிங் ஆர்ட்ஸ் புரடக்ஷன்ஸ் சார்பில் ஹரிஹரன் பஞ்சலிங்கம் தயாரித்திருக்கும் ஆரகன் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அருண் கே ஆர்.
இதில் மைக்கேல் தங்கதுரை, கவிபிரியா மனோகரன், ஸ்ரீ ரஞ்சனி, கலைராணி, ப்ரீத்தம் சக்கரவர்த்தி, கிருஷ்ணன், யாசர், ஆதித்யா கோபி, கௌரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- இசை-விவேக்- ஜெஸ்வந்த், எடிட்டிங்-சசி தக்ஷா, இணை தயாரிப்பு-கிரிஷாந்தி ஹரிஹரன், வரகுணம் பஞ்சலிங்கம், மதுரதன் பஞ்சலிங்கம், பிஆர்ஒ-ஜான்
நாட்டை இழந்து இளவரசர் காட்டில் இருக்கிறார் . காட்டில் கடுந்தவம் செய்யும் மகாமுனிவர் ஒருவரை பாம்பு தீண்ட அவரை காப்பாற்றுகிறார். உயிரை காப்பாற்றிய இளவரசருக்கு உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்க, அதற்கு அந்த இளவரசர் என்றும் இளமையுடன் இருக்க வேண்டும் என்று கூறுகிறார். மகாமுனிவர் இளவரசருக்கு கேட்ட வரத்தை கொடுக்கிறார் . இந்த நாட்டை ஆண்ட அரசர் புராண க...
