
ட்ரென்டிங் ஆர்ட்ஸ் புரடக்ஷன்ஸ் சார்பில் ஹரிஹரன் பஞ்சலிங்கம் தயாரித்திருக்கும் ஆரகன் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அருண் கே ஆர்.
இதில் மைக்கேல் தங்கதுரை, கவிபிரியா மனோகரன், ஸ்ரீ ரஞ்சனி, கலைராணி, ப்ரீத்தம் சக்கரவர்த்தி, கிருஷ்ணன், யாசர், ஆதித்யா கோபி, கௌரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- இசை-விவேக்- ஜெஸ்வந்த், எடிட்டிங்-சசி தக்ஷா, இணை தயாரிப்பு-கிரிஷாந்தி ஹரிஹரன், வரகுணம் பஞ்சலிங்கம், மதுரதன் பஞ்சலிங்கம், பிஆர்ஒ-ஜான்
நாட்டை இழந்து இளவரசர் காட்டில் இருக்கிறார் . காட்டில் கடுந்தவம் செய்யும் மகாமுனிவர் ஒருவரை பாம்பு தீண்ட அவரை காப்பாற்றுகிறார். உயிரை காப்பாற்றிய இளவரசருக்கு உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்க, அதற்கு அந்த இளவரசர் என்றும் இளமையுடன் இருக்க வேண்டும் என்று கூறுகிறார். மகாமுனிவர் இளவரசருக்கு கேட்ட வரத்தை கொடுக்கிறார் . இந்த நாட்டை ஆண்ட அரசர் புராண காலத்தின் கதையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் ஆரகன் திரைப்படம்
கதாநாயகன் மைக்கேலும் கதாநாயகி கவிபிரியாவும் காதலித்து வருகிறார்கள். மைக்கேல் யாரிடமும் வேலைக்கு செல்லாமல் சொந்தமாக பிசினஸ் செய்ய வேண்டும் என்பது ஆசை. அதற்காக பணம் சேர்த்து வருகிறார்.
மைக்கேலும் கதாநாயகி கவிபிரியாவும் காதலித்து வருகிறார்கள். கவிபிரியா மகளிர் விடுதியில் தங்கி வேலைக்கு செல்கிறார். தினமும் இருவரும் சந்தித்து பேசி வருவது வழக்கம்.
மைக்கேல் யாரிடமும் வேலைக்கு செல்லாமல் சொந்தமாக பிசினஸ் செய்ய வேண்டும் என்பது ஆசை. அதற்காக பணம் சேர்த்து வருகிறார். காதலிடம் தன் விருப்பத்தைச் சொல்கிறார் இந்நிலையில் கவி பிரியாவிற்கு மலை பிரதேசத்தில் தனியாக வசித்து வரும் ஸ்ரீரஞ்சனியை கவனித்து கொள்ளும் வேலை வருகிறது.தகுதிக்கு அதிகமான சம்பளம் என்பதால் கவிபிரியா சம்மதிக்கிறார், காரணம் மைக்கேலுக்கு பண உதவிட வேலையை ஒப்புகொள்கிறார்.
ஸ்ரீரஞ்சனியை நல்ல அக்கறையுடன் கவிப்பிரியா கவனித்துக் கொள்கிறார் . ஸ்ரீரஞ்சனிக்கும் இவரை பிடித்து போகிறது, இப்படி இருவரும் சந்தோஷமாக அங்கு இருக்கிறார்கள். அங்கே தொலை தொடர்பு வசதியில்லாத காரணத்தால் காதலன் மைக்கேலிடம் சரிவர பேச முடியாமல் தவிக்கிறார். முதலில் சந்சந்தோஷமாக இருக்கிறாள் சில மாதங்கள் செல்லச் செல்ல அங்கே மர்மங்கள் இருப்பது போல் உணர்கிறார். கவிப்பிரியா போன் காப்பி தண்ணி கொட்டி சரிவர வேலை செய்யவில்லை மைக்கேல் போன் தொடர்பு துண்டிக்கப்படுகிறது போன் சரி செய்ய கொடுத்தும் போன் திரும்பி வரவில்லை. ஏற்கனவே அந்த வீட்டில் அருகாமையில் ஒரு வயதான பெண்மணி காலில் சங்கிலி கட்டி அடைக்கப்பட்டிருக்கிறார் கவிப்பிரியா அந்த பெண்மணியை சந்திக்கிறாள் சில உண்மைகள் தெரிகிறது அதிர்ச்சி அடைகிறாள். இறுதியில் கவிபிரியாவால் அந்த இடத்திலிருந்து தப்பிக்க முடிந்ததா? மைக்கேல் வந்து கவிபிரியாவை மீட்டாரா?எதற்காக கவிபிரியா இந்த மலைப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டார்? யார் காரணம்? கவிபிரியா உயிரோடு திரும்பி சென்றாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் மைக்கேல், ஒரு பக்கம் காதலி மீது அதிக .பாசமும் அக்கறை உள்ளவராக இருக்கிறார் , மறு பக்கம் தன் சந்தோஷத்திற்காக எதையும் செய்யும் தனது கொடூர முகத்தோடு, உண்மையான முகத்தையும் வெளிப்படுத்தும் காட்சிகள் அதிர வைக்க கூடியவனாகவும் மைக்கேல்லாக இருக்கிறார் வித்தியாசமான கதாபாத்திரத்தையும் ஏற்று நடித்து அசத்தி இருக்கிறார்.
கவி பிரியா, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மைக்கேலை காதலிப்பது, பிரிந்தவுடன் வருந்துவது, வீட்டில் இருக்கும் மரமர்மத்தை தெரிந்து கொள்ள துடிக்கும் நாயகியாகவும் இந்த கதாபாத்திரம் ரெண்டு மூணு படங்கள் நடித்த நடிகைகள் ஏற்று நடிக்க வேண்டிய கதாபாத்திரம் சிறப்பாக நடிப்பை இவர் வெளிப்படுத்தி முதல் படத்தில் முத்திரை பதித்துள்ளார் அவருக்கு பாராட்டு .
ஶ்ரீரஞ்சனியின் நடிப்பு படத்திற்க்க சிறப்பு கூடுதல் வலு சேர்த்து இருக்கிறது.
கதைக்களம்
இயக்குனர் எடுத்துக் கொண்ட கதைக்களம் நாடாண்ட மன்னர்களின் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் அருண்.ஆரம்பம் காட்சி வழக்கமான காதல் கதையாக போகிறது பிறகு போக போக படம் பார்ப்பவர்களை பதட்டத்துடன் அடுத்தது என்ன நடக்கப் போகிறது என்று எதிர்பார்ப்புடன் வைக்கிறது .திரைக்கதை நகர்த்தலில் சொல்ல வந்ததை சில தடுமாற்றங்களும் இருக்கிறது உங்கள் முயற்சிக்கு பாராட்டு!
ஒளிப்பதிவு காடு, அதனுள் இருக்கும் இயற்கை அழகையும் அழகான வீடு, அருவி என்று அழகாக படம் பிடித்து கதையோடு இருக்கிறார் ஒளிப்பதிவாளர் சூர்யா. சிறப்பாக இருந்தது
இசை விவேக் – ஜெஷ்வந்த் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையில் கவனிக்க வைக்கிறார்
தயாரிப்பு ட்ரெண்டிங் ஆர்ட்ஸ் ப்ரோடுக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
படத்தில் நடித்த அனைத்து நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் சிறப்பாக தன் பணியை செய்துள்ளனர்
இப்படம் சஸ்பென்ஸ் /திரில்லர் /மர்மம் படம்…










