அந்தகன்’ பட முக்கிய கேரக்டரில் ஒரு பூனை !” -பட்டுகோட்டை பிரபாகர் ருசிகர பேட்டி !!
"'அந்தகன்' பட முக்கிய கேரக்டரில் ஒரு பூனை !"
-பட்டுகோட்டை பிரபாகர் ருசிகர பேட்டி !!
கோலிவுட்டை தாண்டியும் வெள்ளித்திரையில் என்றென்றும் டாப் ஸ்டார் நடிகர் பிரஷாந்த் நடிப்பில் மிகவும் மாஸாக நாளை ஆகஸ்ட் 9ம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் 'அந்தகன்'. இயக்குநர் தியாகராஜன் இயக்கத்தில் ப்ரீத்தி தியாகராஜன் வழங்கும் இப்படத்தில் சிம்ரன், யோகி பாபு, கே.எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார், கார்த்திக், யோகி பாபு, பூவையார், சமுத்திரக்கனி, பிரியா ஆனந்த், ஊர்வசி உள்ளிட்ட மிக பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தின் புரொமோஷன் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் 'அந்தகன்' வசனகர்த்தா பட்டுக்கோட்டை பிரபாகரிடம் இப்பட அனுபவம் குறித்துக் கேட்டப் போது, ’’நாளை முதல்..இந்தியில் மிகப் பெரிய வெற்றியைத் தொட்ட 'அந்தாதுன்' படத்தின் புதிய தமிழ் வடிவம் 'அந்தகன்'! அந்தப் படம் பார்க்க...
