Wednesday, May 27

“சட்டென்று மாறுது வானிலை” திரை விமர்சனம்.

சட்டென்று மாறுது வானிலை’ (Sattendru Maarudhu Vaanilai) என்பது மே 15, 2026 அன்று திரையரங்குகளில் வெளியான தமிழ் திரைப்படமாகும். 
  • நடிகர்கள்: ஜெய் (Jai), மீனாட்சி கோவிந்தராஜன், யோகி பாபு மற்றும் கருடா ராம்.
  • இயக்குநர்: பாபுவிஜய்.
  • கதைக்களம்: காதல், திரில்லர் மற்றும் குடும்ப பின்னணியை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.

ஆதரவற்றவரான ஜெய் ஒரு ஐடி கம்பெனியில் வேலை செய்து வருகிறார். அமைச்சர் மகளான மீனாட்சி அப்பாவின் செயல்கள் பிடிக்காமல் பெண்கள் விடுதியில் தங்குகிறார் மீனாட்சி கோவிந்தராஜனை முதல் நாள் சந்தித்து மூன்றாம் நாள் திருமணம் செய்து கொள்கிறார். இருவரும் தேனிலவுக்கு கொடைக்கானல் செல்கிறார்கள். அங்கே  இவர்கள் தங்கியுள்ள கெஸ்ட்வுஸ் உரிமையாளர் கருடாராம் தன்கெஸ்ட் வுஸ்ஸில் தங்கும் இளம் ஜோடிகளுக்கு நல்ல விருந்து கொடுத்து சந்தோஷ படுத்துவது  அவர்களுக்கு நல்லவனாக தன்னை காட்டி கொண்டு அவர்களுக்கு தெரியாமல் அவர்களின் படுக்கறையின் அந்தரங்களை ரகசிய கேமேராவில் Live வீடியோ படம் பிடித்து வெளிநாட்டுக்கு வியாபாரம் செய்கிறார்  இந்த ரகசிய கேமேராவில்  நாயகன் ஜெய் , நாயகி மீனாட்சி படுக்கறை வீடியோவும் பதிவாகியுள்ளது  உள்ளது சில நாட்கள் சென்ற பின்பு ஜெய்க்கு வேலை பறி போய் விடுகிறது. மீனாட்சியின்  அப்பா தன் மகளுக்கு வேறொருவருக்கு இரண்டாம் திருமணம் செய்து வைக்க முயற்சி செய்கிறார். ஒரு பணக்கார இளைஞன் மீனாட்சியை ஒரு தலையாக காதலித்து சில விரும்பத்தகாத செயல்களை செய்கிறார். திடீர் ஜெய்  மீனாட்சியை விவகாரத்து பத்திரத்தில் கையெழுத்துயிடுகிறார்  காரணம் என்ன ? கருடராம் செயல்களுக்கு தண்டனை கிடைத்ததா  ? மீனாட்சியின் அப்பா தன் மகளுக்கு  இரண்டாம் திருமணம் செய்து வைத்தார ? ஜெய் மற்றும் மீனாட்சி இருவரும் வாழ்க்கையில் ஒன்றாக வாழ்ந்தார்களா? இல்லையா?  பல கேள்விகளுக்கு பல திருப்பங்களுடன் படத்தின் மீதிகதை

ஜெய்ஜெய். காதல் காட்சிகளில் அவர் நடிப்பு, குறும்புதனம் ஓகே. சில இடங்களில் விஜய் மாதிரியான நடிப்பை வெளிப்படுத்தி பார்வையாளரின் கவனத்தை பெறுகிறார் . காதலி தன்னை நம்பவில்லை எனும் போதும், மற்றும்  ஆக்ஷன் காட்சிகளிலும் சிறப்பாக நடித்துள்ளார்.

மீனாட்சி கோவிந்தராஜன் நடிப்பாலும் அழகாலும் கவர்கிறார்.யோகி பாபுவின் நகைச்சுவை  சில காட்சிகளில் வில்லத்தனமும் ரசிக்கும்படியாக இருந்தது  கருடா ராம்..மிரட்டலான வில்லத்தனம் படத்திற்கு கூடுதல் பலம்.
ஆதித்யா கதிர், சத்யன் என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
கிரிஷ் கோபாலகிருஷ்ணனின் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ஓகே ரகம். ரிச்சார்ட் எம் நாதனின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம். எடிட்டர் படத்திற்க்கு தேவையான காட்சிகள் மட்டும் சேர்த்துள்ளார்.

இயக்குநர் பாபு விஜய் எடுத்துக்கொண்ட கதை இன்றைய காலகட்டத்தில் தேவையான காதல் கதை இயக்குனர் பாபு விஜய். காதல், கிரைம், ஆக்ஷன், திரில்லர் என திரைக்கதை விறுவிறுப்பாக செல்கிறது.  திரைக்கதை இறுதியில் வேகம் எடுத்து இருக்கிறது. கொஞ்சம்.

திரைக்கதையின் மூலம் இன்னும் சுவாராஸ்யமாக சொல்லியிருக்கலாம். உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்.

 

Related posts: