Thursday, April 16

“மைலாஞ்சி” திரை விமர்சனம்.

தயாரிப்பு : டாக்டர் அர்ஜூனன்
இயக்கம் : அஜயன்பாலா
நடிப்பு : ஸ்ரீராம்கார்த்திக், கிரிஷா குரூப், சிங்கம்புலி, முனிஸ்காந்த்
ஒளிப்பதிவு : செழியன்
இசை : இளையராஜா

கதைகரு: சித்தி கொடுமையால் தவிக்கும் நாயகி கிரிஷா இரு கதநாயகனை காதலிக்கிறார் யாரை கரம் பிடித்தார்  ,

படத்தை பார்ப்போம்

சித்தி கொடுமையால் தவிக்கும் ஹீரோயின் கிரிஷா குரூப், அதிலிருந்து  தப்பிப்பதற்காக தன் வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் ஒருவரை காதலிக்கிறார். அவரிடம் காதலை சொல்ல நினைக்கும் போது, அவர் சென்னைக்கு சென்று விடுகிறார் இதற்கிடையில், ஊட்டிக்கு அறிய வகை பறவைகளை போட்டோ எடுக்க வரும் ஹீரோ  ஸ்ரீராம்கார்த்திக், கிரிஷா குரூப்பை நட்பு கிடைக்கிறது பிறகு அவளை மனதளவில் காதலிக்க, அவளோ தன்னுடைய சென்னை காதலன் அவருடன் சேர்த்து வைக்கும்படி கேட்டுக் கொள்கிறாள்  காதலிக்கும் பெண்ணுக்காக காதலை தியாகம் செய்ய நினைக்கிறார் ஹீரோ. இதற்கிடையில், தனது சித்தி குடிகார  தம்பிக்கு ஹீரோயினை திருமணம் செய்து வைக்க முடிவு செய்து தேதி  குறித்தாச்சு . அதே நேரத்தில் தான் காதலிக்கும் சென்னை இளைஞன் ஊட்டிக்கு வர, ஹீரோ  புகைப்பட கலைஞர் ஒரு விபத்தில் சிக்க,  கிரிஷா குரூப் யாரை கரம்பிடித்தார் என்பது பல திருப்பங்களுடன் படத்தின் மீதி கதை

புகைப்படக் கலைஞரான நாயகன் ஸ்ரீராம் கார்த்தி, சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார்

நாயகி கிரிஷா குரூப் குழந்தை சிரிப்பு  எதார்த்தம்மான  நடிப்பு பசுமை நிறைந்த மலை பிரதேசத்தில் சுற்றி திரியும்  வண்ண அழகு பறவை.

சிங்கம்புலி, முனிஸ்காந்த் இவர்களின் நடிப்பு படத்திற்க்கு பக்கபலமாக இருந்துது மற்றும் நாயகிக்கு சித்தியாகவும் அவருடைய தம்பி மற்றும் இப்படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்

ஒளிப்பதிவு : செழியன் பசுமை நிறைந்த மலைப்பிரதேசங்களின் இயற்கை அழகை அள்ளி கொடுத்துள்ளார்.
இசை : இளையராஜா பின்னனி இசை  பாடல்கள் கேட்கும்படியாகவும் ரசிக்கும்படியாகவும் இருந்தது..

எடிட்டர் படத்திற்க்கு தேவையான காட்சிகள் மட்டும் சேர்த்து படத்தின் விறு விறுப்பை கூட்டியுள்ளார்

இயக்குனர் அஜயன்பாலா  தேர்ந்த எடுத்த  கதை வழக்கமான காதல் கதைதான் மற்றும் படத்தின் ஒளிப்பதிவு காட்சி அருமை நீண்ட இடைவெளிக்கு  பிறகு மறைந்த பாலுமகேந்திராவின் படத்தை பார்ப்பது போல் மனநிறைவு பெற்றேன்  வாழ்த்துக்கள் பாராட்டு. இவருக்கு தென்னிந்திய   திரையுலகில் நல்ல எதிர்காலம் உள்ளது

மொத்தத்தில் மைலாஞ்சி மனத  தொட்டது இப்படம் சிறியவர் முதல் பெரியவர் வரை மற்றும் காதலர்கள் பார்க்கலாம்

Related posts: