Monday, August 3

News

எல்.வி.பிரசாத் அவர்களின் 31வது நினைவு நாள்

எல்.வி.பிரசாத் அவர்களின் 31வது நினைவு நாள்

News
ஜனவரி 22 எல்.வி.பிரசாத் அவர்களின் 31வது நினைவு நாள் L.V.Prasad Garu 31st Death Anniversary எல்.வி.பிரசாத் என்கிற லட்சுமி வரப்பிரசாத் ராவ் அவர்கள் (17 ஜனவரி 1908 - 22 ஜூன் 1994), தயாரிப்பாளர், நடிகர், இயக்குனர், ஒளிப்பதிவாளர், தொழிலதிபராக இருந்தவர். இந்திய ஒட்டுமொத்த திரைத்துறையின் முன்னோடிகளில் ஒருவரான அவர், 1980ல் தாதா சாஹேப் பால்கே விருது பெற்றவர். ஆந்திராவில் அவருக்கு ரகுபதி வெங்கையா விருது வழங்கப்பட்டது. அவர் பிரசாத் குழுமத்தின் நிறுவனர். இதில் பிரசாத் ஆர்ட் பிக்சர்ஸ், பிரசாத் ஸ்டுடியோஸ், பிரசாத் ஐமேக்ஸ், எல்.வி.பிரசாத் கண் நிறுவனம் ஆகியவை அடங்கும். தவிர, கடந்த 1980ல் புதுடெல்லியில் நடந்த 27வது தேசிய திரைப்பட விருதுகள் தேர்வுக்குழுவின் தலைவராக எல்.வி.பிரசாத் இருந்தார்....
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் வழங்கும் ‘மிஸ்டர். ஹவுஸ்கீப்பிங்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் வழங்கும் ‘மிஸ்டர். ஹவுஸ்கீப்பிங்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

News
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் வழங்கும் ‘மிஸ்டர். ஹவுஸ்கீப்பிங்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !! ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் ‘மிஸ்டர். ஹவுஸ்கீப்பிங்' திரைப்படம் இம்மாதம் (ஜனவரி) 24 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது!! தனித்துவமான படைப்புகள் தந்த முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் அருண் ரவிச்சந்திரன் இயக்கத்தில், முன்னணி யூடியூப் படைப்பாளியான ஹரி பாஸ்கர், பிக்பாஸ் புகழ் ரயான் மற்றும் லாஸ்லியா நடிப்பில், ஜனரஞ்சகமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘மிஸ்டர். ஹவுஸ்கீப்பிங்' வரும் ஜனவரி 24 ஆம் தேதி, இப்படம் உலகமெங்கும் வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் வெளியீட்டை ஒட்டி, படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து, படம் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளர் என். இராமசாமி என்கிற தேனாண்டாள் முரளி பேசியத...
ஜியாவின் “அவன் இவள்” பர்ஸ்ட் லுக் வெளியானது

ஜியாவின் “அவன் இவள்” பர்ஸ்ட் லுக் வெளியானது

News
ஜியாவின் "அவன் இவள்" பர்ஸ்ட் லுக் வெளியானது "கள்வா", "எனக்கொரு WIFE வேணுமடா" ஆகிய 2 குறும்படங்களை இயக்கிய ஜியா, அடுத்ததாக இயக்கியுள்ள குறும்படத்துக்கு "அவன் இவள்" என தலைப்பு வைத்திருக்கிறார். "கள்வா" படம் ரொமான்டிக் திரில்லராகவும் "எனக்கொரு WIFE வேணுமடா" காமெடி டிராமா ஜானரிலும் உருவானது. ஜியாவின் 3வது படைப்பான "அவன் இவள்", க்ரைம் திரில்லராக உருவாகியுள்ளது. இந்த குறும்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இசையமைத்து ஜியா இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு, எடிட்டிங், எஸ்எஃப்எக்ஸ் பணிகளை அபிஷேக் கையாண்டுள்ளார். அர்ஜுன் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். செபஸ்டின் அந்தோணி, மீரா ராஜ், இசபெல்லா நடித்துள்ளனர். இந்த குறும்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியானது. மர்யம் தியேட்டர்ஸ் நிறுவனம் இந்த குறும்படத்தை தயாரித்துள்ளது. விரைவில் யூடியூபில் இந்த குறும்படம் வெளியாகும்....
யோகிபாபு மற்றும் செந்தில் கலக்கும் “குழந்தைகள் முன்னேற்றக் கழகம்” திரைப்படம்,

யோகிபாபு மற்றும் செந்தில் கலக்கும் “குழந்தைகள் முன்னேற்றக் கழகம்” திரைப்படம்,

News
குழந்தைகளுடன் யோகிபாபு மற்றும் செந்தில் கலக்கும் “குழந்தைகள் முன்னேற்றக் கழகம்” திரைப்படம், 2025 ஜனவரி 24 ஆம் தேதி திரைக்கு வருகிறது!! மறைந்த இயக்குநர் ஷங்கர் தயாள் . N இயக்கத்தில், “குழந்தைகள் முன்னேற்றக் கழகம்” வரும் ஜனவரி 24 ஆம் தேதி, திரைக்கு வருகிறது!! மீனாக்ஷி அம்மன் மூவிஸ் தயாரிப்பில், இயக்குநர் ஷங்கர் தயாள்.N இயக்கத்தில், குழந்தை நட்சத்திரங்களுடன்,யோகிபாபு மற்றும் செந்தில் இணைந்து நடிக்க, கலக்கலான பொலிடிகல் காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம் "குழந்தைகள் முன்னேற்றக் கழகம்". இப்படம் வரும் 2025 ஜனவரி 24 ஆம் தேதி, உலகமெங்கும் திரைக்கு வருகிறது. சமீபத்தில் மறைந்த, சகுனி படப்புகழ் இயக்குநர் ஷங்கர் தயாள் . N குழந்தைகள் உலகத்தை மையமாக வைத்து, செந்தில் மற்றும் யோகிபாபு நடிப்பில், இப்படத்தை இயக்கியிருந்தார். தற்போது இப்படம் திரைக்கு கொண்டுவரப்படுகிறது. திரையுலகில் குழந்தைகள் உலகத...
அப்புகுட்டி நடிக்கும் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்” விரைவில் திரையில்!!

அப்புகுட்டி நடிக்கும் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்” விரைவில் திரையில்!!

News
தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிக்கும் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்” விரைவில் திரையில்!! பொங்கல் வாழ்த்துக்களுடன் திரை வெளியீட்டை அறிவித்த “பிறந்த நாள் வாழ்த்துக்கள்” படக்குழு !! Plan3 Studios சார்பில், ரோஜி மாத்யூ மற்றும் ராஜுசந்ரா தயாரிப்பில், ராஜுசந்ரா இயக்கத்தில், தேசிய விருது நாயகன் அப்புகுட்டி நடிப்பில், கிராமத்து பின்னணியில் ஃபேண்டஸி டிராமாவாக உருவாகியிருக்கும் திரைப்படம் “பிறந்த நாள் வாழ்த்துக்கள்”. இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், வரும் பிப்ரவரி மாதம் திரைக்கு வரவுள்ளது. Mathens Group இப்படத்தினை இணைந்து வழங்குகிறது. பொங்கல் வாழ்த்துக்களுடன், பிப்ரவரி திரை வெளியீடு குறித்த, அறிவிப்பு போஸ்டரை, தயாரிப்பு குழுவினர் வெளியிட்டுள்ளனர். கிராமத்து வீட்டுப் பிண்ணணியில், அன்பான விலங்குகளுடன், கர்பிணி மனைவியை அணைத்தபடி, அப்புகுட்டி இருக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், ரசிக...
காதி”படத்தில், தேசி ராஜு பாத்திரத்தில் நடிக்கிறார் விக்ரம் பிரபு !!*

காதி”படத்தில், தேசி ராஜு பாத்திரத்தில் நடிக்கிறார் விக்ரம் பிரபு !!*

News
*English & Tamil Press Release* *குயின் அனுஷ்கா ஷெட்டி நடிக்கும், “காதி”படத்தில், தேசி ராஜு பாத்திரத்தில் நடிக்கிறார் விக்ரம் பிரபு !!* குயின் அனுஷ்கா ஷெட்டி “காதி” படத்தில், இணைந்துள்ள விக்ரம் பிரபுவின் கதாப்பாத்திர கிளிம்ப்ஸ் வெளியானது !! குயின் அனுஷ்கா ஷெட்டி, கிரியேட்டிவ் டைரக்டர் கிரிஷ் ஜகர்லமுடி, UV கிரியேஷன்ஸ் வழங்கும், ஃபர்ஸ்ட் பிரேம் எண்டர்டெயின்மெண்ட்டின், பான் இந்தியா திரைப்படமான “காதி” படத்தில், இணைந்துள்ள நடிகர் விக்ரம் பிரபுவின் கதாப்பாத்திர கிளிம்ப்ஸ் வெளியானது !! தென்னிந்திய திரையுலக குயின் அனுஷ்கா ஷெட்டி “காதி” படத்தில் மிரட்டலான அதிரடி கதாப்பாத்திரத்தில், நடித்து வருகிறார். அவரது பிறந்தநாளில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் கிளிம்ப்ஸ் வெளியிடப்பட்டது. முன்னெப்போதும் இல்லாத வகையில், மிரட்டலான ஆக்சன் கதாப்பாத்திரத்தில் தோன்றும...
“கள்ள நோட்டு”என்கிற பெயரிலேயே ஒரு திரைப்படம் இப்படத்தின் டீசர் சேலம் மாநகர மேயர் வெளியிட்டார்.

“கள்ள நோட்டு”என்கிற பெயரிலேயே ஒரு திரைப்படம் இப்படத்தின் டீசர் சேலம் மாநகர மேயர் வெளியிட்டார்.

News
சேலம் மாநகர மேயர் வெளியிட்ட 'கள்ள நோட்டு' திரைப்படத்தின் டீசர்! 'கள்ள நோட்டு' திரைப்படத்தின் டீசரை சேலம் மாநகராட்சி மேயர் மாண்புமிகு ஆ.இராமச்சந்திரன் அவர்கள் ஏ.ஆர். அறக்கட்டளை திரு எஸ்.சுரேஷ்மோகன் அவர்களுடன் இணைந்து வெளியிட்டார். 'பணம் ஆறாம் அறிவு போன்றது, அது இல்லாமல் மற்ற ஐந்து அறிவுகளையும் நீங்கள் பயன்படுத்த முடியாது' என்றார் பெர்னாட்ஷா. 'பணம் நமக்கு எல்லாவற்றையும் கொடுக்கலாம், ஆனால் வறுமை நம்மிடம் இருந்து பறித்த சிலவற்றைப் பணத்தால் திருப்பித் தர முடியாது 'என்றார் சார்லி சாப்ளின். இப்படிப் பணத்தைப் பற்றிய ஏராளமான பொன்மொழிகள், பழமொழிகள் உண்டு. ஆனால் பணம் பற்றிப் பேசும் அனைவர் மனதிலும் ரூபாய் நோட்டைப் போலவே கள்ள நோட்டைப் பற்றிய ஒரு கறுப்பு நிழலும் வந்து போகும். அப்படிக் கள்ள நோட்டு பற்றிய ஒரு கதையை மையமாக வைத்து 'கள்ள நோட்டு 'என்கிற பெயரிலேயே ஒரு திரைப்படம் உருவாகி இருக்கி...
பிரபுதேவாவின் பிரம்மாண்ட நடன நிகழ்ச்சி பிரபுதேவாஸ் வைப் ( Prabhudeva’s Vibe) டிக்கெட் அறிமுக விழா !

பிரபுதேவாவின் பிரம்மாண்ட நடன நிகழ்ச்சி பிரபுதேவாஸ் வைப் ( Prabhudeva’s Vibe) டிக்கெட் அறிமுக விழா !

News
 இனி எல்லாம் உங்கள் ஆசிர்வாதம் தான் பிரபுதேவா . பிரபுதேவாவின் பிரம்மாண்ட நடன நிகழ்ச்சி பிரபுதேவாஸ் வைப் ( Prabhudeva's Vibe) டிக்கெட் அறிமுக விழா ! இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் பிரபுதேவாவின், பிரம்மாண்டமான நடன நிகழ்ச்சி, இந்தியாவில் முதல் முறையாக நடக்கவுள்ளது. மிக பிரபல நிறுவனமனா அருண் ஈவண்ட்ஸ் அருண் நடத்த V.M.R.ரமேஷ், திரு.G Star. உமாபதி மற்றும் ஜெய்சங்கர் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இந்த நடன நிகழ்ச்சி வரும் 2025 பிப்ரவரி 22ஆம் தேதி சென்னையில் நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெறுகிறது. நடிகரும் இயக்குனருமான ஹரிகுமார் இந்த பிரம்மாண்டமான ஷோவை இயக்குகிறார். ஆர்ட் டைரக்டர் கிரண் கைவண்ணத்தில் பல்வேறு விதமான செட்டுகள் அமைக்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சிக்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு மற்றும் டிக்கெட்களை அறிமுகப்படுத்தும் விழா, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலா...
“ZEE5” இந்த பொங்கலுக்குத் தமிழ்நாட்டின் அடையாளமான “ஜல்லிக்கட்டு “உலகம் முழுவதும் .!

“ZEE5” இந்த பொங்கலுக்குத் தமிழ்நாட்டின் அடையாளமான “ஜல்லிக்கட்டு “உலகம் முழுவதும் .!

News
ZEE5 இந்த பொங்கலுக்குத் தமிழ்நாட்டின் அடையாளமான ஜல்லிக்கட்டு பாரம்பரியத்தை, உலகம் முழுவதும் எடுத்துச் செல்கிறது!! ZEE5 தமிழ்நாட்டின் பாரம்பரியத்தைப் பல சிறப்புப் பொங்கல் பரிசுகளுடன் கௌரவிக்கிறது!! ~ ஜல்லிக்கட்டின் மகத்துவத்தை அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரிலிருந்து ZEE5 இல் நேரலையில் பார்க்கலாம் ~ ~ பொங்கல் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ZEE5 சிறப்பு ₹49 மாதாந்திர சந்தா பேக்கையும் வழங்குகிறது ~ இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் மில்லியன் கணக்கானவர்களுக்குப் பன்மொழி கதைசொல்லியான ZEE5, இந்த பொங்கல் சீசனில் தமிழ்நாட்டின் அடையாளமான ஜல்லிக்கட்டு நிகழ்வுகளை, மக்களுக்கு நேரடியாகக் கொண்டு செல்வதை, அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. இந்த ஆண்டு, ZEE5, 14 ஆம் தேதி அவனியாபுரத்திலும், 15 ஆம் தேதி பாலமேடு மற்றும் ஜனவரி 16 ஆம் தேதி அலங்காநல்லூரில் நட...
*5 விருதுகள், தலா 2 லட்சம் ரூபாய் காசோலை வழங்கி உழவர்களை கௌரவப்படுத்திய கார்த்தி*

*5 விருதுகள், தலா 2 லட்சம் ரூபாய் காசோலை வழங்கி உழவர்களை கௌரவப்படுத்திய கார்த்தி*

News
*உழவர் பெருமக்களை கௌரவப்படுத்திய நடிகர் கார்த்தி* *உழவு தொழில் செய்வோருக்கு அங்கீகாரம் கொடுத்த நடிகர் கார்த்தியின் உழவன் ஃபவுண்டேஷன்* *5 விருதுகள், தலா 2 லட்சம் ரூபாய் காசோலை வழங்கி உழவர்களை கௌரவப்படுத்திய கார்த்தி* கோலாகலத் திருவிழாவாக மாறிய ‘உழவன் ஃபவுண்டேஷனின் உழவர் விருதுகள் 2025’ – விவசாயத்துறையில் சேவைமனப்பான்மையோடு இயங்கும் 5 பேருக்கு கெளரவம். விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் அரவிந்த் சாமி, நடிகை சரண்யா பொன்வண்ணன், இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் எழுத்தாளர் பவா செல்லத்துரை ஆகியோர் கலந்துக் கொண்டார்கள். மேலும் இந்நிகழ்வில் வேளாண் துறைசார் வல்லுநர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பல...