அமைச்சர் பிடிஆருக்கு அழைப்பு விடுத்த ரெஜினா மற்றும் சைதன்யா!
அமைச்சர் பிடிஆருக்கு அழைப்பு விடுத்த ரெஜினா மற்றும் சைதன்யா!
டெமாக்ரடிக் சங்காவின் 'சேஞ்ச்மேக்கர்ஸ் விருதுகள்' விழா: அமைச்சர் பிடிஆருக்கு அழைப்பு விடுத்த நடிகை ரெஜினா கசாண்ட்ரா மற்றும் சைதன்யா MRSK!
'டெமாக்ரடிக் சங்கா' அமைப்பின் நிறுவனர்களான நடிகையும், சமூக ஆர்வலருமான ரெஜினா கசாண்ட்ரா மற்றும் சைதன்யா MRSK, தமிழக அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் அவர்களை தங்கள் அமைப்பின் ஆண்டு விழாவுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்த விழாவில் மதிப்புமிக்க 'சேஞ்ச்மேக்கர்ஸ் விருதுகள்' வழங்கப்படும்.
கொள்கை வகுப்பாளர்கள், அரசியல் தலைவர்கள், அறிஞர்கள் மற்றும் உலகளாவிய மாற்றத்தை உருவாக்குபவர்களை ஒன்றிணைக்கும் இந்த அரங்கம், ஜனநாயகத்தின் தற்போதைய நிலையை விவாதிக்கும் ஒரு முக்கிய தளமாக விளங்குகிறது. இந்த ஆண்டு நடைபெறும் கூட்டத்தில், அனைவரையும் உள்ளடக்கிய ஆட்சி மறை, புதிய நடைமுறைகள் மற்றும் உலகெங்கிலும் உள்ள ஜன...


